இவங்களுக்கு பெண்கள் தான் டார்கெட்... கேட்டாலே பயமா இருக்குது !

0
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரில் தற்போது கார் டிரைவர்கள் பலரை பைக்கில் வரும் சிலர் மிரட்டி வழிப்பறிச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 
இவங்களுக்கு பெண்கள் தான் டார்கெட்... கேட்டாலே பயமா இருக்குது !
சமீபத்தில் ஸ்ரீஜன் ஆர் ஷெட்டி என்பவர் தனது எக்ஸ் தளத்தில் தனது மனைவிக்கு நேர்ந்த இது போன்ற ஒரு சம்பவத்தை விவரித்துள்ளார். 

அதன்படி ஸ்ரீஜனின் மனைவி அவருடன் பணியாற்றும் சில நண்பர்களை சர்ஜாபூர் பகுதிக்கு சென்று கொண்டு டிராப் செய்ய காரில் பயணித்துள்ளார். காரை ஸ்ரீஜனின் மனைவி தான் ஓட்டியுள்ளார்.

கார் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செல்லும் போது சில பைக் ஓட்டிகள், ஸ்ரீஜனின் மனைவி ஓட்டி சென்ற காரை துரத்தி வந்துள்ளனர். இதை கண்டதும் காருக்குள் இருந்த ஸ்ரீஜனின் மனைவி மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் அதிர்ச்சி அடைத்தனர். 

காரை நிறுத்தாமல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலிருந்து வெளியேறி மெயின் ரோடு பகுதிக்கு காரை எடுத்துச் சென்றுள்ளனர். இங்கு அவர் காரை நிறுத்தி விட்டு தனது கணவர் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறியுள்ளார். 
மேலும் அருகில் உள்ள போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதற்குள் பின்னால் துரத்தி வந்தவர்கள் இவர் காரை மதித்து இவர் காரின் கதவைத் தட்டி காரில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என கூறி காரில் இருந்தவர்களை வெளியேறும்படி கூறியுள்ளனர்.
இவர்கள் மூவரும் பயத்தில் காரின் ஜன்னல்கள் எல்லாம் அடைத்து விட்டு உள்ளேயே இருந்து விட்டனர். 

அதன் பின்பு ஸ்ரீஜனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அப்பொழுதிக்கு வருவதை பார்த்ததும் அங்கிருந்து அவர்கள் அப்படி இப்படி பேசி எப்படியோ அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.

இதற்கிடையில் இவர்கள் பின்னால் ஒரு டிரக் வண்டி வந்து வேண்டும் என்றே இவர்கள் காரின் பின் பகுதியில் மோதி இதை ஓட்டி வந்த டிரைவரும் இவர்களுடன் சண்டை போட முயன்று, ஏற்கனவே இவர்களை வழிமறித்து நின்ற நபருடன் சேர்ந்து சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை ஸ்ரீஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தன் மனைவியிடம் சண்டையிட்ட நபர்கள் அவர்களுக்கு கேமராவில் பதிவாகி யிருந்ததை இந்த பதிவில் இணைத்துள்ளார். 

இந்த பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் சம்பவம் குறித்து அவரது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். 
மேலும் இந்த பதிவிற்கு ஸ்ரீஜன் கொடுத்த பதிலில் சம்பவ இடத்திற்கு போலீசார் 20 நிமிடங்களில் வந்து அவர்களது பணியை செய்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவில் இப்படியாக கார்களை துரத்தி வந்து வழிப்பறி செய்ய முயல்வது ஒன்றும் இது ஒன்றும் புதிய நிகழ்வல்ல, ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. 
இதற்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தில் தாயும் மகளும் ஒரே காரில் சென்று கொண்டிருந்ததனர். அப்பொழுது சிலர் காரை வழி மறித்து அவர்களை காரில் இருந்து இறங்கச் சொல்லி ஆவேசமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் வைரலாகி வந்தது. 
இவங்களுக்கு பெண்கள் தான் டார்கெட்... கேட்டாலே பயமா இருக்குது !
இது கடந்த மார்ச் மாசம் நடந்த சம்பவம் தான் இதுவும் அதே பெங்களூருவில் உள்ள சர்ஜாபூர் பகுதியில் நடந்த சம்பவம் தான். இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு வருவது பெங்களூரு பகுதியில் பாதுகாப்பிற்கு கேள்வி குறியாக அமைந்துள்ளது. 

குறிப்பாக பெண்கள் வாகனம் ஓட்டி சென்றால் அவர்களை குறி வைத்து இது போன்ற சம்பவங்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து நடப்பதாக தெரிகிறது. 

இந்த சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது பெரும்பாலும் பெங்களூரு பகுதியில் வெளிப்புறம் இருக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத ஏரியாக்களில் மட்டுமே நடக்கிறது. 
பெங்களூர் சிட்டிக்குள் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதில்லை. பெங்களூர் சிட்டிக்குள் பெரும்பாலான இடங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால், இது போன்ற வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் தங்களது வேலையை காட்டுவதில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings