அஸ்ஸாம் மாநிலத்தில் சிறுமியின் வாழ்க்கை ஒரே நைட்டில் சேஞ்ச்டு !

0

அஸ்ஸாம் (Assam) மாநிலத்தில் 17 வயது மட்டுமே ஆன ஓர் இளம்பெண் விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் லக்சரி காரை பரிசாக வென்றுள்ளார். 

அஸ்ஸாம் மாநிலத்தில் சிறுமியின் வாழ்க்கை ஒரே நைட்டில் சேஞ்ச்டு !
இதன் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் பிரபலமாகி உள்ள இவர், வெறும் ரூ.100ஐ செலவு செய்ததன் மூலமாக இவ்வளவு பெரிய பரிசுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

திஷா தாஸ் என பெயர் கொண்ட இந்த இளம்பெண் அஸ்ஸாம் மாநிலத்தின் பார்பெடா என்ற நகரத்தில் உள்ள ஓர் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். 

பெற்றோருக்கு ஒரே குழந்தையான திஹா தாஸ் சமீபத்தில் வாங்கி இருந்த ஓர் பரிசு கூப்பனுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார் பரிசாக கிடைத்துள்ளது. பார்பெடா நகரின் புத்தக & அறிவியல் கண்காட்சி வருகிற 2024 பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ளது.

இப்படியொரு கண்காட்சி நடைபெறுவதை மாணவ, மாணவியரிடம் தெரிவிக்கும் விதமாக பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. இதில் பரிசு விழும் அதிர்ஷ்டசாலிக்கு முதல் பரிசாக விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

சயனைட் கொலையாளி வைத்தியராய் - விசித்திரமான விஞ்ஞானி !

மற்ற மாணவர்களை போல், திஷா தாஸும் தனது சேமிப்பு பணத்தில் இருந்து 2 பரிசு கூப்பன்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு பரிசு கூப்பனுக்கு, அறிவிக்கப்பட்ட முதல் பரிசான மெர்சிடிஸ் பென்ஸ் கார் கிடைத்துள்ளது. 

இதனால், ஓவர் நைட்டில் திஷா தாஸ் மற்றும் அவரது குடும்பம் பணக்காரர்கள் ஆகியிருப்பது மட்டுமின்றி, பார்பெடா நகரத்தில் திஷா தாஸ் ஃபேமஸாகி உள்ளார். 

திஷா தாஸுக்கு பரிசாக கிடைத்திருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏ-கிளாஸ் என்ற லக்சரி செடான் கார் ஆகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் குறைவான மெர்சிடிஸ் கார் இதுவாகும். 

லிமௌசைன் 200 என்ற ஒரேயொரு பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டுமே தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் ஏ-கிளாஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.45.80 இலட்சமாக உள்ளது. 

ஆனால், ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால் ரூ.50 இலட்சத்தை நெருங்கி விடும்.

காஸ்மோஸ் பிளாக், மொண்டெயின் கிரே, போலார் வெள்ளை மற்றும் இரிடியம் சில்வர் என மொத்தம் 4 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் லிமௌசைன் காரை வாங்கலாம். 

அஸ்ஸாம் மாநிலத்தில் சிறுமியின் வாழ்க்கை ஒரே நைட்டில் சேஞ்ச்டு !

திஷா தாஸுக்கு காஸ்மோஸ் பிளாக் பெயிண்ட் ஆப்ஷனில் இந்த லக்சரி கார் டெலிவிரி செய்யப் பட்டுள்ளது. மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் செடான் காரில் 1.3 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப் படுகிறது. 

அதிகப் பட்சமாக 161 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப் படுகிறது. 

இணைய விபச்சாரம் என்றால் என்ன? கல்லூரி மாணவிக்கு ஏற்ப பேரமதிப்பு ஏறும் !

விற்பனையில் இந்த மெர்சிடிஸ் காருக்கு பிஎம்டபிள்யூவின் 2 சீரிஸ் கிரான் கூபே போட்டியாக விளங்குகிறது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings