போலீசை மிரட்டிய மதுப்பிரியர்... சாத்தான் குளத்தில் நடந்தது என்ன?

0

சாத்தான்குளம் அருகே உள்ள இரட்டைக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் இந்து முன்னணி கட்சியில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். 

போலீசை மிரட்டிய மதுப்பிரியர்... சாத்தான் குளத்தில் நடந்தது என்ன?
இந்த நிலையில், நேற்று மாலை சாத்தான்குளம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வந்ததாக தெரிகிறது.

அப்போது மற்றொரு வாகனம் இவரது வாகனம் மீது மோதியதாக கூறப்படும் நிலையில், மோதிய மற்றொரு வாகனத்துடன் அவர் காவல் நிலையத்திற்கு தட்டுத் தடுமாறி மது போதையில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். 

அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார், புகாரை எழுத்துப் பூர்வமாக எழுதி கொண்டு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர்.

ஆனால் போதை தலைக்கேறிய அவர் புகாரை எழுதி விட்டு வருவதாக கூறி சென்ற பின், திரும்பி வந்து காவல் நிலையத்தில் புகாரை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன?

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையம் அருகே உள்ள திருச்செந்தூர் - நாகர்கோவில் தேசிய சாலையில், தனது இரு சக்கர வாகனத்தை குப்புற படுக்க போட்டு, எனது புகாரை இப்போ எடுக்கலன்னா... 

இந்த வண்டியை இந்த இடத்திலேயே கொளுத்துவேன்.. கொளுத்துவேன்.." என போலீசாரை மிரட்டும் தோணியில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை சமாதானம் செய்து, இரு சக்கர வாகனத்தை சாலையில் இருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர். 

ஆனால் அவர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முடியாது எனக் கூறிய நிலையில் மீண்டும் மீண்டும் போலீசாரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். பின்னர் அங்கு மப்டியில் வந்த போலீசார் இந்த ரகளையை கண்டதும், போதை தலைக்கேறிய அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்தை நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மது போதை தலைக்கேறிய அந்த போதை ஆசாமி எதிரில் இருப்பது போலீசா..? 

அல்லது வக்கீலா...? எனக் கூடத் தெரியாத அளவிற்கு மூக்கு முட்ட குடித்த நிலையில், அந்த போலீசாரிடம் இது குறித்து உங்க அட்வகேட் கிட்ட புகார் வாங்கினேன் அல்லவா..? என எதிரில் இருப்பது யார் என்றே தெரியாத அளவிற்கு புலம்பி யுள்ளார்.

அதற்கு அந்த போலீசார் அட நான் வக்கீல் இல்லையா போலீஸ் எனக் கூறி புரிய வைக்க முயற்சி செய்தார். 

ஆனால் அந்த போதை ஆசாமியோ, இப்படி யெல்லாம் பேசக்கூடாது, கரெக்டா பேசுங்க, எப்போது தர்மம், நியாம் தான் ஜெயிக்கும் என பல டயலாக்களை யெல்லாம் பேசியுள்ளார். 

பின்னர் மது போதையில் இருந்த அந்த நபரை பெண் போலீசார் உள்ளிட்ட பலரும் சேர்ந்து சமாதானம் செய்து அவரது அக்கப்போரை நிறுத்த போராடி யுள்ளனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அவரைக் கண்டு பொறுமையிழந்த அங்கிருந்த போலீசார் ஒருவர் சட்டையை பிடித்து கொத்தாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

பின்னர் காவல் நிலையத்தில் போலீசார் அவரது உறவினரை வரவழைத்து அவரிடம் அறிவுரை கூறி கூட்டி செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், மது போதை ஆசாமி கொடுத்த புகாருக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பரவாயில்லை. 

அவர் புகாரையே கொடுக்காமல், மது போதையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு உள்ளார் என்றனர். 

மேலும் மது போதை ஆசாமியிடம் கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்ட சாத்தான்குளம் போலீசின் நிலைமையை அப்பகுதியினர் பரிதாபமாக பார்த்துச் சென்றனர். இச்சம்பவம் பெரும் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings