ஷமி-யின் ராஜபோக வாழ்க்கை.. 43 ஏக்கர் வீடு, விதவிதமான கார்கள் !

0

2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வரலாற்றை இனி எப்ப திறந்து பார்த்தாலும் இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வியப்பு அளிக்கும் விஷயமாக இருக்கப் போவது முகமது ஷமி-யின் சாதனை தான். 

ஷமி-யின் ராஜபோக வாழ்க்கை.. 43 ஏக்கர் வீடு, விதவிதமான கார்கள் !
ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்-களை வீழ்த்தி மாலையாக போட்டுக் கொண்டு வருகிறார், குறிப்பாக அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார்.

முகமது ஷமி இந்த உலக கோப்பையில் 8 சாதனைகளை படைத்துள்ளார், உலக கோப்பையில் 50 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்தியர் என்பதில் துவங்கி, 

வெறும் 17 ஆட்டத்தில் 50 விக்கெட்கள், க்னாக்அவுட் ஆட்டத்தில் சிறப்பான பவுலிங் செய்து 48 வருட சாதனையை முறியடித்தது என உலக நாடுகளை வியக்க வைத்துள்ளார்.

தைராய்டு... தவிர்க்க வேண்டிய உணவும் சேர்க்க வேண்டிய உணவும் !

இன்றைய நிலையில் முகமது ஷமி-யின் மொத்த சொத்து மதிப்பு 47 கோடி ரூபாய், வருடத்திற்கு 7 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இவர் பிசிசிஐ-யிடம் சம்பளமாக மட்டுமே 5 கோடி ரூபாய் பெறுகிறார். 

ஷமி-யின் ராஜபோக வாழ்க்கை.. 43 ஏக்கர் வீடு, விதவிதமான கார்கள் !
சில பிராண்ட் அம்பாசிட்டர் ஒப்பந்தம் மூலம் வருடத்திற்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். முகமது ஷமி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் ஒவ்வொரு வருடமும் 6.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். 

உத்தர பிரதேச மாநிலத்தில் அம்ரோஹா என்ற இடத்தில் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட பண்ணை வீட்டை கட்டியுள்ளார். 

இந்த வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் பிட்ச் உள்ளது, இதில் பவுலிங் பயிற்சி செய்வதற்காகவே பல ஏற்பாடுகளை முகமது ஷமி செய்துள்ளார். 

லாக்டவுன் காலத்தில் இவருடைய வீட்டில் இருக்கும் மைதானத்தில் தான் சுரேஷ் ரெய்னா உடன் இணைந்து முகமது ஷமி பயிற்சி செய்தார். இந்த வீடு சுமார் 150 பிகா அளவில் கிட்டதட்ட 43 ஏக்கர் அளவில் உள்ளதாக தெரிகிறது.

ஷமி-யின் ராஜபோக வாழ்க்கை.. 43 ஏக்கர் வீடு, விதவிதமான கார்கள் !

மேலும் முகமது ஷமி-க்கு அலிநகர் பகுதியில் மிகவும் ஆடம்பரமான வீடு உள்ளது. 2015ல் வாங்கிய பண்ணை வீட்டுக்கு ஹாசின் என முகமது ஷமி பெயரிட்டார். இது தனது மனைவியின் பெயரான ஹாசின் ஜா-வின் பெயர். 

ஆனால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். முகமது ஷமியின் கார் கராஜ்-ல் ஆடி, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஜாகுவார் எஃப் வகை மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற கார்கள் உள்ளது. 

சருமத்தில் அழற்சி ஏற்படுகிறதா? அதைப் போக்க சில வீட்டு வைத்தியங்கள் !

எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களின் ஒப்பிடுகையில் மாஸ் கலெக்ஷன் இது. முகமது ஷமி தற்போது Nike, OctaFX, Blitzpools என்ற பேன்டசி கேமிஹ் தளம், Stanford ஆகியவற்றுக்கு பிராண்ட் அம்பாசிட்டராக உள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)