கடல் மட்டத்திலிருந்து உயரம் கூடும் போது வெப்பநிலை குறைவது ஏன்?

சூரியனுக்கு மிக நெருக்கமாக இருப்பதை போல் தெரியும் மலையின் உச்சிப் பகுதிகள் குளிர்ச்சியாகவே இருக்கும். அதற்கான காரணத்தை நீங்கள் யோசித்தது உண்டா?
உயரம் கூடும் போது வெப்பநிலை குறைவது ஏன்?


கடல் மட்டலிருந்து உயரே செல்லும் பொழுது காற்றுக்கு என்னவாகிறது? எளிமையாகச் சொன்னால், காற்று குறைந்து விடும்.

இதையே பெளதிக முறையில் சொல்லப் போனால், காற்றின் திணிவு (density) குறைந்து விடும். அதாவது, காற்றின் மூலக்கூறுகள் ஒன்றிற்கு ஒன்றோடு நெருக்கமாக இருக்காது (கடல்மட்ட அளவை ஒப்பிடுகையில்).
காற்றின் அழுத்தம் குறையக் குறைய, வெப்பம் குறைகிறது. இதில் ஒரு சின்ன வேறுபாடு, மேற்குலகில் உண்டு. பனிமழை பெய்யும் பொழுது (snowfall) உயரே போகப் போக (6,000 அடி முதல் 10,000 அடி வரை), ஈரப்பதம் அதிகமாக இருக்கும். 

இதனால், வெப்ப நிலை அவ்வளவு (தெளிவான நாளை விட) குறையாது. இன்னொரு விஷயமும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

மேக மூட்டமாக இருக்கும் குளிர் நாட்களில், மேகம் வெப்பத்தை (அதுவும் நீராவி தானே) தக்க வைத்துக் கொள்வதால், தரை மட்ட வெப்பநிலை சற்று கூடுதலாக இருக்கும். 
இதனால், குளிர் நாட்களில், மேற்குலகில், பளிச்சென்று நீலவானம் சூரியனுடன் காணப்படும். ஆனால், குளிர் ஏராளமாக இருக்கும். ஏனென்றால், ஈரப்பதம் அதிகமில்லை.

விமானப் பயணம் செல்பவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுமா?

விமானத்தின் இன்ஜின்களில் காற்றழுத்தத்தை உருவாக்கும் இயந்திரம் உள்ளது, 


இது வெளியிடும் காற்று, எரிபொருளுடன் கலப்பதற்கு முன் விமானத்தில் பயணம் செல்பவர்களை சுற்றி உள்ள காற்றை வெப்பப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
இந்த வெப்பக் காற்று, விமானச் சுவர்களிடையே வெப்பம் கடத்தும் திறனை தடுத்து, மனித உடல் வெளிவிடும் வெப்பம் மூலம் விமானத்திற்குள் மனிதர்களுக்கு உகந்த வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.

எனவே இந்த நவீனத் தொழில்நுட்ப உதவி காரணமாக, விமானத்தில் பயணிப்பவர்கள் பாதுகாப்பாக பயணிப்பார்கள்.