வரிக்குதிரைகளை வீட்டில் வளர்க்க முடியவில்லை ஏன்? தெரியுமா?

0

வரிக்குதிரைகள் காட்டில் காணப்படும் அழகான விலங்குகளில் ஒன்று. இதன் உடலில் இருக்கக் கூடிய கருப்பு வெள்ளை நிற கோடுகள் இதை மிகவும் அழகாக காண்பிக்கும். 

வரிக்குதிரைகளை வீட்டில் வளர்க்க முடியவில்லை ஏன்? தெரியுமா?
அது மட்டுமல்லாமல் வரிக்குதிரைகளுக்கு மிகப்பெரிய பாதுகாப்பையும் இந்த அழகான கோடுகளே கொடுக்கிறது. 

இதன் வித்தியாசமான இந்த கருப்பு வெள்ளை நிற கோடுகள் இதை தாக்க வரக்கூடிய வேட்டை விலங்குகளை குழப்பமடைய செய்து அவைகளிடம் இருந்து இவற்றை பாதுகாக்கிறது.

பார்ப்பதற்கு குதிரையைப் போலவே இருக்கும் இந்த வரிக்குதிரைகள் பாலூட்டி விலங்கினம். 

காடுகளில் சுமார் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடிய வரிக்குதிரைகள் மனிதர்கள் வளர்ப்பில் மிருகக் காட்சி சாலையில் கூடுதலாக 10 ஆண்டுகள் அதாவது 40 ஆண்டுகள் வரை உயிர் வாழும். 

இந்த வரிக்குதிரைகள் நின்றபடியே தூங்கும் குணம் கொண்டது. ஒரு வரிக்குதிரையின் கழுத்தின் மீது மற்றொரு வரிக்குதிரை கழுத்தை சாய்த்தபடி நின்று கொண்டே தூங்கும்.

மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய வரிக்குதிரை ஒரு நாளைக்கு சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் நடக்கும். வரிக்குதிரைகள் கூட்டமாக புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரே திசையில் நின்று கொண்டு புல் மேயும். 

ஹோட்டலில் நண்பனை கொன்ற இளைஞர் - கழுத்தறுத்த காதலன் !

ஆனால் அவற்றில் ஒரே ஒரு வரிக்குதிரை மட்டும் எதிர் திசையில் திரும்பி நின்று பின் பக்கமாக ஏதாவது ஆபத்து வருகிறதா என பார்த்து கொண்டே இருக்கும். இது வரிக்குதிரை இனங்களில் உள்ள வித்தியாசமான ஒரு பழக்கம்.

சமவெளி வரிக்குதிரை, மலை வரிக்குதிரை மற்றும் கிரேவியின் வரிக்குதிரை என வரிக்குதிரையில் மூன்று வகைகள் உள்ளது. இந்த மூன்று இனங்களும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை. 

வரிக்குதிரைகளை வீட்டில் வளர்க்க முடியவில்லை ஏன்? தெரியுமா?
சமவெளி வரிக்குதிரை வரிக்குதிரையின் மிகவும் பொதுவான இனமாகும். இது தெற்கு எத்தியோப்பியா, கென்யா மற்றும் தான்சானியா முதல் போட்ஸ்வானா மற்றும் தென்னாப்பிரிக்கா வரை துணை சஹாரா ஆப்பிரிக்கா முழுவதும் காணப்படுகிறது.

மலை வரிக்குதிரைகள் அங்கோலா, நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. கிரேவியின் வரிக்குதிரை வரிக்குதிரை வகைகளில் மிகப்பெரியது மற்றும் மிகவும் அரிதானது. 

இது 450 கிலோகிராம் எடை கொண்டது. கிரேவியின் வரிக்குதிரை அழிந்து வரும் மிக ஆபத்தான எண்ணிக்கையில் வெறும் மூவாயிரம் வரிக்குதிரைகள் மட்டுமே காடுகளில் காணப்படுகிறது. 

எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் மட்டுமே காணப்படும் கிரேவி வரிக்குதிரை 19 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு ஜனாதிபதியான ஜூல்ஸ் கிரேவியின் பெயரால் பெயரிடப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார்கள்

வரிக்குதிரையால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும். குதிரைகள் மற்றும் கழுதைகளை பயன்படுத்தும் மனிதர்கள் ஏன் வரிக்குதிரைகளை பயன்படுத்த வில்லை என நம்மில் பலரும் யோசித்திருப்போம். 

இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் வரி குதிரைகளை மனிதர்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி அந்த முயற்சியில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். 

வரிக்குதிரைகளுக்கு பயிற்சிகள் கொடுத்து மனிதர்களால் அதை அடிமைப் படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் அவைகளுக்கு எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும் அது மனிதர்களுக்கு அடிமையாக இருக்க விரும்புவதில்லை. 

எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும் மனிதர்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு காடுகளில் சுதந்திரமாக இருக்கவே அவை விரும்பி உள்ளது. 

இதனால் வரிக்குதிரைகள் மனிதர்கள் பயன்படுத்தும் முயற்சி அனைத்தும் தோல்வி அடைந்திருக்கிறது. வரிக்குதிரைகள் தொடர்ந்து நீண்ட தூரம் பயணிக்கிறது. 

வரிக்குதிரைகளை வீட்டில் வளர்க்க முடியவில்லை ஏன்? தெரியுமா?

தண்ணீர் மற்றும் உணவைத்தேடி தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது. வரிக்குதிரைகள் மேய்ச்சல் நிலங்களை தேடி ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தொடர்ந்து பயணிக்கும். 

வரிக்குதிரைகள் சமூக விலங்குகளாக, மந்தைகளாக பெரிய குழுக்களாக ஒன்றாக வாழ்கின்றன. 

அவை உணவு மற்றும் தண்ணீருக்காக புதிய இடங்களுக்கு இடம் பெயரும் போது ஆயிரக்கணக்கான வரிக்குதிரைகள் சேர்ந்து சூப்பர் மந்தைகளாக உருவாகிறது. 

காட்டெருமைகள் போன்ற மற்ற மேய்ச்சல் மிருகங்களிடம் இவைகள் சேர்ந்து பயணிக்கிறது. 

வரிக்குதிரைகள் கருப்பு கோடுகள் கொண்ட வெள்ளை விலங்குகளா? அல்லது வெள்ளைக் கோடுகள் கொண்ட கருப்பு விலங்குகளா? என்ற வாதம் தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. 

ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !

கடைசியாக இப்பொழுது அதிநவீன மரபணு ஆராய்ச்சி வரிக்குதிரைகள் வெள்ளை நிற கோடுகள் கொண்ட கருப்பு விலங்குகள் என நிரூபித்து இந்த வாதத்தை நிறுத்தி யுள்ளது.

வரி குதிரைகளுக்கு ஏன் கருப்பு வெள்ளை கோடுகள் இருக்கிறது என்பது பற்றிய ஆய்வும் நடந்திருக்கிறது. விஞ்ஞானிகள் இந்த மிக முக்கியமான கேள்வியை 150 ஆண்டுகளாக விவாதித்து வருகின்றனர். 

இவற்றின் இந்த கோடுகள் வரிக்குதிரையை வேட்டையாடும் விலங்குகளையும் கடிக்கும் பூச்சிகளையும் குழப்பமடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது. அவை வரிக்குதிரைகளைக் கடிக்கும் ஈக்களிலிருந்து பாதுகாக்கின்றன.

வரிக்குதிரைகளை அவற்றின் நெருங்கிய உறவான குதிரைகளுடன் ஒப்பிடுவதன் மூலம் வரிக்குதிரைகளைக் காட்டிலும் குதிரைகள் விகிதாச்சாரத்தில் அதிகமாக ஈக்களால் கடிக்கப் படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 

வரிக்குதிரையின் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. ஒவ்வொரு வரிக்குதிரையின் கோடுகளும் தனித்துவமாக இருப்பதால் வரிக்குதிரைகள் ஒன்றை யொன்று அடையாளம் காணவும் உதவுகிறது.

சிங்கங்கள், சிறுத்தைகள், ஹைனாக்கள் உள்ளிட்ட வேட்டையாடும் விலங்கு களிடமிருந்து வரிக்குதிரைகளைப் பாதுகாக்க அவற்றின் கடுமையான சண்டைத் திறன்கள் மற்றும் வலுவான சமூக பிணைப்புகள் உதவுகின்றன. 

வேட்டையாடும் விலங்குகள் இவைகளை நெருங்கும் பொழுது வரிக்குதிரைகள் சேர்ந்து தாக்கும் விலங்குகளுக்கு எதிராக ஒரு அரை வட்டத்தை உருவாக்குகிறது. 

தேவைப்படும் பொழுது எதிரி விலங்குகளை தாக்கவும் தயாராக இருக்கும். வரிக்குதிரைகள் கூட்டத்தில் ஒரு வரிக்குதிரை காயமடைந்தால் மற்ற வரிக்குதிரைகள் சுற்றி நின்று பசியுடன் தாக்கும் வேட்டை விலங்குகளைப் துரத்தியடிக்கும்.

வரிக்குதிரைகளை வீட்டில் வளர்க்க முடியவில்லை ஏன்? தெரியுமா?

வரிக்குதிரைகள் கூட்டம் வேட்டை விலங்குகளின் அறிகுறிகள் பற்றி கவனமாக விழிப்புடன் இருக்கும். வேட்டை விலங்குகளின் ஆபத்தை கவனித்துக் கொண்டே இருக்கும். 

சமவெளி வரிக்குதிரைகள் வேட்டை விலங்குகளின் அறிகுறிகளை உணரும் போது அவை கூட்டத்தை எச்சரிக்க அதிக ஒலியை எழுப்பும். 

இரவில் வரிக்குதிரைகள் குழுவில் ஒரு வரிக்குதிரையாவது விழித்திருந்து சுற்றுப்புறத்தை நோட்டமிட்டு கொண்டே இருக்கும்.

மலை வரிக்குதிரை இனத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் வரிக்குதிரை வேட்டை விலங்குகள் வருவதை எச்சரிக்க குறட்டை போன்ற ஒலியைப் பயன்படுத்தும். இதனால் கூட்டத்தில் உள்ள மற்ற மந்தைகள் தப்பிக்க வாய்ப்பு கிடைக்கிறது. 

சர்வதேச விண்வெளி நிலையத்தை நாமும் வானில் பார்க்கலாம் !

வரிக்குதிரைகளில் மிகவும் பொதுவான சுய பாதுகாப்பு வழிமுறை தலைதெறிக்க ஓடுவது. வேட்டை விலங்கு களிடமிருந்து தப்பிக்க மணிக்கு 50 லிருந்து 85 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

மலை வரிக்குதிரைகள் அதிக உயரத்தில் கரடுமுரடான நிலப்பரப்பில் வாழ்கின்றன. அதற்கேற்ப அதற்கு கடினமான, கூர்மையான குளம்புகள் இருக்கும். அவை வரிக்குதிரைகள் மலைகளில் எளிதில் ஏற உதவியாக இருக்கின்றன. 

மலை வரிக்குதிரைகள் மலையில் 6,500 அடிக்கு மேல் உயரத்தில் தங்குமிடத்தை உருவாக்கி உணவு மற்றும் தண்ணீரைத் தேடி மலைகளுக்கு இடையில் பயணம் செய்கின்றன. 

வரிக்குதிரைகளை வீட்டில் வளர்க்க முடியவில்லை ஏன்? தெரியுமா?

சமவெளி வரிக்குதிரைகள் 14,000 அடி உயரமுள்ள மலைகளிலிருந்து செரெங்கேட்டியின் சமவெளி வரை பல்வேறு வகையான வாழ்விடங்களைக் கடந்து செல்கின்றன. 

கிரேவியின் வரிக்குதிரைகள் 2,000 அடிக்கு குறைவாக உள்ள உயரத்தில் இருக்கும் புல்வெளி வாழ்விடங்களுக்கு அருகில் வாழும். பெரும்பாலான வரிக்குதிரைகள் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நடத்துகின்றன. 

சமவெளி வரிக்குதிரைகள் ஹரேம்ஸ் எனப்படும் சிறிய குடும்பக் குழுக்களில் ஒரு ஆண், ஒன்று முதல் ஆறு பெண்கள் மற்றும் அவற்றின் குட்டிகளுடன் வாழ்கின்றன. 

ஹரேமில் உள்ள பெண் வரிக்குதிரைகள் வலுவான குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளும். ஆண் வரிக்குதிரை குடும்பத்திலிருந்து வெளியேறினாலோ அல்லது கொல்லப் பட்டாலோ பெண் வரிக்குதிரைகள் ஒன்றாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings