பெண்களை ஏலம் கேட்கும் ஆண்கள்... பெண்களை விற்கும் தந்தைகள் !

0

பல்கேரியாவின் ஸ்டாரா ஜாகோராவில், ஒவ்வொரு வசந்த காலத்திலும் சர்ச்சைக்குரிய மணமகள் சந்தை ஏற்பாடு செய்யப் படுகிறது.

பெண்களை ஏலம் கேட்கும் ஆண்கள்... பெண்களை விற்கும் தந்தைகள் !
அங்கு கன்னிகழியாமல் இருக்கும் இளம் பெண்கள், அவர்களை ஏலம் எடுக்க வருபவர்கள் முன்பாக முன் அணிவகுத்துச் செல்வார்களாம். உள்ளூரில் இந்த சடங்கை ஜிப்சி மணப்பெண் சந்தை என்று அழைக்கின்றனர். 

பெண்கள் நீண்ட வெல்வெட் பாவாடைகள் மற்றும் பிரகாசமான வண்ணத் தலைக் கவசங்களுடன் தங்க நகைகளை கழுத்து, விரல்கள், காதுகள் போன்ற இடங்களில் ஜொலிக்க விட்டு நடை போடுவார்களாம். 

இணைய விபச்சாரம் என்றால் என்ன? கல்லூரி மாணவிக்கு ஏற்ப பேரமதிப்பு ஏறும் !

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ நோன்பின் முதல் சனிக்கிழமை அன்று தான் இந்த சந்தை நடத்தப் படுகிறது. மணமகளின் விலை குறித்து அவர்கள் பல விவாதங்களில் ஈடுபடுவார்களாம். 

பெண்களை ஏலம் கேட்கும் ஆண்கள்... பெண்களை விற்கும் தந்தைகள் !

டேட்டிங் மற்றும் பிற சமூகங்களுடன் திருமணம் செய்வதை இவர்கள் தடை செய்து வைத்துள்ளனர். Hristos Georgiev, என்ற 18 வயது இளைஞர், 18 வயதான Donka Dimitrova என்ற பெண்ணின் தந்தையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பேரம் பேசுகின்றார். 

அது தோராயமாக $7,500 முதல் $11,300 வரை அந்த பேரம் போகும். இது சராசரி பல்கேரியரின் ஊதியத்தில் ஒரு வருடத்தின் மதிப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

குற்றவாளியிடம் குழந்தையை கொடுத்த பெண், பிரீஸரில் அடைத்த காதலன் !

இந்த சந்தையில் பெண்களை ஏலத்தில் எடுக்க, வருடக் கணக்கில் இளைஞர்கள் உழைத்து காசு சேமிப்பதும் உண்டு.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)