கழுதைப்புலிகள் பற்றிய வியப்பூட்டும் குணாதிசயங்கள் என்ன?

0

கழுதை புலி ஒரு அனைத்து உண்ணி. தமிழகத்தில் சத்திய மங்கலம், முதுமலை காடுகளில் வசிக்கின்றன. இவை இந்தியாவில் பாரம்பரியமான உயிரினமாக உறுதி தெரியவில்லை. 

கழுதைப்புலிகள் பற்றிய வியப்பூட்டும் குணாதிசயங்கள் என்ன?
ஆனால், இந்திய கழுதைபுலிகள் உருவத்தில் சில வேறுபாடுகளை கொண்டுள்ளது. உண்மையில் கழுதை, புலி இந்த இரண்டு விலங்குகளுக்கும் கழுதைப்புலி களுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை .

பிரமிப்பு ஊட்டும் குண நலன்கள் : . 

ஒவ்வொரு கழுதைப் புலிகளுக்கும் தனித்தனி அடையாளங்கள் உண்டு. அதாவது ஒவ்வொரு கழுதைப் புலிகளுக்குமே வித்தியாசமான ஊளை சத்தம் இருக்கும். 

ஒரு கழுதைப் புலிகளுக்கு இருக்கும் அந்த சத்தம், மற்ற கழுதைப் புலிகளுக்கு இருக்காது. இந்த சத்தத்தை வைத்து கழுதைப் புலிகள் தங்கள் கூட்டாளிகளை அடையாளம் கண்டு கொள்ளும்.

ஆப்பிரிக்காவில் இருக்கக் கூடிய புள்ளிகள் கொண்ட கழுதைப் புலிகள் தான் சிரிப்பது போல சத்தம் போடும். இந்திய கழுதைப் புலிகள் ஊளையிடுவது போன்ற சத்தத்தை தான் போடும். 

ஒரே நொடியில் மாறிய வாழ்க்கை - தொழிலாளி கூறிய வார்த்தை !

கழுதைப் புலிகளை பொறுத்தவரை, ஒரு கூட்டமாக சேர்ந்தால் சிங்கத்தை கூட காலி செய்து விடும். அந்த அளவுக்கு துணிச்சல் வாய்ந்த மிருகம் தான் கழுதைப் புலி.

கழுதைப் புலிகளின் பலமே அவை சேர்ந்து இருப்பது தான். தனித்தனியாக இருப்பது போலவே தோன்றும். ஆனால், இரை சிக்கி விட்டால் ஒரு வித ஓசையை வெளிப்படுத்தி மொத்த குழுவையும் வரவழைத்து விடும். 

வேட்டையாடுகிற எல்லா தகுதிகளும் இருந்தாலும் கழுதைப்புலிகள் அவ்வளவு எளிதில் வேட்டையாடுவ தில்லை. சிங்கமோ சிறுத்தையோ ஒரு இரையை வேட்டையாடும் வரை கழுதைப்புலிகள் காத்திருக்கும். 

சிங்கம் இரையை வேட்டையாடி வீழ்த்தி விட்டால் மொத்த கழுதைப் புலிகளின் கூட்டமும் சிங்கத்தை சூழ்ந்து வெறுப்பேற்றும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, சிங்கமோ சிறுத்தையோ வேட்டையாடிய இரையை அப்படியே விட்டு விட்டு ஓடி விட வேண்டியது தான்.

மற்ற விலங்குகள் கழுதைப் புலிகளிடம் சண்டையிடாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் சண்டை செய்ற அளவுக்குக் கழுதைப்புலிகள் ஒர்த் இல்லை என நினைப்பது தான். 

கழுதைப் புலிகள் பலம் வாய்ந்த தாடையை கொண்டவை எப்படியான விலங்கின் எலும்பையும் கடித்தே உடைத்து விடுகிற அளவுக்கு பலமானவை. 

எலும்பை உடைப்பவன் (Bone crushers) என்கிற பட்ட பெயரும் இவற்றுக்கு உண்டு. மற்ற விலங்குகளின் குட்டியை வேட்டையாடி அவற்றைக் கொல்வது தான் இவற்றின் முக்கியப் பணியே. 

சிங்கமும் கழுதைப் புலிகளும் ஒரே எல்லைக்குள் வாழ்வதால் ஒரே உணவுக்காக இரண்டுமே சரிவிகித அடிப்படையில் சண்டையில் ஈடுபடுகின்றன. 

அதனால் தான் இரு விலங்குகளும் எதிரியின் குட்டிகளைக் கொன்று விடுகின்றன. கழுதைப் புலிகளிடம் சிங்கக் குட்டிகள் கிடைத்து விட்டால் சின்னா பின்னமாக்கி விடும்.

(nextPage)

பெண்ணாதிக்க கழுதைப்புலிகள் : . 

கழுதைப்புலிகள் பற்றிய வியப்பூட்டும் குணாதிசயங்கள் என்ன?

ஒரு கழுதை புலி கூட்டம் 60-லிருந்து 80 வரை இருக்கும். இந்த கூட்டத்தில் பெண் தான் எல்லாமே. பெண்ணைத் தவிர்த்து ஆண் கழுதைப் புலிகளால் எந்த ஒரு விஷயத்தையும் முன் எடுக்கவே முடியாது. 

பெண் கழுதைப் புலிதான் தலைவியாக இருக்கும். ஆண் கழுதைப் புலிகளுக்கும் பெண் கழுதைப் புலிகளுக்கும் உடலளவில் எந்த வேறுபாடுகளும் கிடையாது.

நம்ப முடியாத அதிசயம் : . 

ஆண் கழுதைப் புலிகளுக்கு இருப்பதைப் போன்ற ஆண் உறுப்பு பெண் கழுதைப் புலிகளுக்கும் உண்டு. இதற்குப் போலி ஆண் உறுப்பு என்று பெயர். 

உடலோடு ஒட்டியிருக்க வேண்டிய பெண் உறுப்பு, ஹார்மோன் கோளாற்றால், சில இன்ச் நீளத்துக்கு வெளியே நீண்டு காட்சி தரும். பெண் தன்னுடைய குட்டிகளைப் போலி ஆண் உறுப்பு வாயிலாகத் தான் பிரசவிக்க முடியும்.

(nextPage)

துயரம்  : . 

கழுதைப்புலிகள் பற்றிய வியப்பூட்டும் குணாதிசயங்கள் என்ன?

கழுதைப் புலியின் 23 இன்ச் அளவுக்கு விரிவடைகின்ற போலியான ஆணுறுப்பில் 2 கிலோ எடை கொண்ட குட்டியை பிரசவிப்பது நினைத்துப் பார்க்க முடியாத துயரம். 

ஆனாலும், பிரசவ காலம் முடிந்தால் பெற்றெடுத்துத் தானே ஆக வேண்டும். இந்தத் தருணத்தில் இரண்டு பேரில் ஒருவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். 

முதல் குட்டியைப் பிரசவிக்கும் பெண் கழுதைப் புலிகளில் 15% இறந்து விடுகின்றன. சில குட்டிகள் பிறக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து விடுகிற சம்பவங்களும் நிகழும். சில நேரங்களில் காயம் ஏற்படுகின்றன. 

இனப்பெருக்க நேரத்தில் மூன்றிலிருந்து நான்கு குட்டிகள் வரை ஈனுகின்றன. குட்டிகள் ஈன்ற நாளிலிருந்து நான்கு வாரங்கள் வரை அவை மண்ணுக்குள் வளை தோண்டி வசிக்கின்றன. 

வேறு யாரையும் அங்கு அவை அனுமதிப்பதில்லை. குட்டிகளில் யார் பெரியவன் என்கிற சண்டை சிறு வயதிலேயே கழுதைப் புலிகளுக்குள் வந்து விடும்.

தாய்ப்பால் கொடுத்த மறுநொடி... மருத்துவமனையில் ஆச்சர்யம் !

கழுதை புலிகள் குழுவில் புதிதாகப் பிறந்த குட்டியின் வாசனையை வைத்து மற்ற கழுதைப்புலிகள் குட்டிகளைக் குழுவில் சேர்த்துக் கொள்கின்றன. 

தாயிடம் பால் குடித்து வளர்கிற குட்டிகள் வளைகளில் பாதுகாப்பாக இருக்கும்.நான்கு குட்டிகளில் யார் முதலில் பால் அருந்துவது என்கிற சண்டை குட்டிகளுக்குள் நடக்கும். 

இதில் பலம் பொருந்திய பெண் குட்டிகள் ஆண் குட்டிகளுடன் சண்டையிட்டு வெற்றி பெற்று விடுகின்றன. சில நேரங்களில் சண்டையின் முடிவில் ஆண் குட்டிகளைப் பெண் குட்டிகள் கொன்று விடுகின்றன. 

தன்னுடைய இனத்துக்குள் சண்டை செய்து தப்பிப் பிழைக்கிற ஆண் குட்டிகள் மிக சிலவே. ஆண் குட்டிகள் வலிமை மிகுந்த பெண் குட்டிகளோடு சண்டையிட்டு வெல்ல வேண்டும்.

இனி அவை வேட்டையாட தயாராக வேண்டும். இங்கும் ஆண் குட்டிகளின் நிலை பரிதாபம் தான். இரைக்காக மற்ற பெண் குட்டிகளுடன் போராட வேண்டிவரும். 

எல்லாவற்றிலும் இருந்து தப்பிப் பிழைக்கும் ஆண் குட்டிகள் பருவம் அடைகிற வரை தாயுடன் இருக்கின்றன. பருவம் வந்ததும் ஆண் குட்டிகள் குழுவிலிருந்து பிரிந்து செல்கிற ஆண் கழுதைப்புலிகள் வேறு ஒரு கூட்டத்துடன் இணைந்து கொள்கின்றன. 

அதிலும் ஆண் கழுதைப் புலிகளுக்கு சிக்கல் தான். இன்னொரு குழுவில் நினைத்தவுடன் இணைந்து கொள்ள இயலாது, அதற்கும் ஆண் கழுதைப்புலிகள் சண்டை செய்தாக வேண்டும். 

மற்ற குழுவில் உள்ள கழுதைப் புலிகளை அவ்வளவு எளிதில் இன்னொரு குழுவில் எந்தக் கழுதைப் புலிகளும் ஏற்றுக் கொள்ளாது. சண்டை செய்து தான் அவற்றோடு சேர வேண்டும்.

ஒருவனுக்கு ஒருத்தி, வேறு குடும்ப உறவு : . 

கழுதைப் புலிகள் மட்டும் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் கண்ணியமான மிருகங்கள். அது மட்டுமல்ல. மனிதர்களை போல ஒரே குடும்பத்தில் உள்ள பெண் கழுதைப் புலிகளிடம் ஆண் கழுதைப் புலிகள் இணை சேராது. 

வேறு குடும்பத்தில் உள்ள பெண்களையே ஆண் கழுதைப் புலிகள் தங்கள் பார்ட்னராக தேர்ந்தெடுக்கும்.

(nextPage)

பெண்ணுக்கு முக்கியத்துவம் : . 

கழுதைப்புலிகள் பற்றிய வியப்பூட்டும் குணாதிசயங்கள் என்ன?

தங்கள் குட்டிகளை பெண் கழுதைப் புலிகளுடன் சேர்ந்து அன்பாக பராமரித்து ஆண் கழுதைப் புலிகள் வளர்க்கும். அதே போல, மற்ற மிருகங்களில் அந்தந்த கூட்டத்திற்கு ஆண் தான் தலைவனாக இருக்கும். 

ஆனால், கழுதைப் புலிகளின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு பெண் கழுதை புலி தான் தலைவியாக இருக்கும். அதே போல, ஆண்கள் என்ன தான் பலசாலியாக இருந்தாலும், மற்ற பெண் கழுதை புலிகளுக்கு அதிக மரியாதை கொடுக்கும்.

உடும்பை விழுங்கிய பாம்பு தலைகீழாக தொங்கிய காட்சி !

நட்புக்கு மரியாதை : . 

கழுதை புலிகள் கூட்டமாக இருந்தால் சிங்கம், புலி கூட அந்த பக்கம் போக பயப்படும். எல்லாத்துக்கும் மேல, நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கும் விலங்கு கழுதைப் புலி. 

நண்பனுக்கு ஒரு பிரச்னைனா, தன் உயிரை கூட கொடுத்து காப்பாத்த கழுதை புலி யோசிக்காது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)