சிறையில் இம்ரான் கானுக்கு செய்யப்பட்ட வசதி !

0

உணவில் விஷம் கலக்கப் படலாம் என்பதால் வீட்டில் சமைத்த உணவை தர வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இம்ரான் கானுக்கு பல்வேறு சொகுசு வசதிகள் வழங்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சிறையில் இம்ரான் கானுக்கு செய்யப்பட்ட வசதி !
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் இம்ரான் கான். கடந்த ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஷ் ஷெரீப் தம்பி ஷெபாஷ் ஷெரிப் பிரதமராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, இம்ரான் கான் மீது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. 

வயிற்றுப் பசிக்கு விலை போகும் மாதர்கள் !

இதில் பிரதமர் பதவியில் இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள் அளித்த பரிசு பொருட்களை விற்றது தொடர்பான தோஷகானா வழக்கும் ஒன்று.

தோஷகானா வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் கீழமை நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கடந்த 5ம் தேதி தீர்ப்பளித்தது. 

இதனை யடுத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் கிளைச் சிறையில் அடைக்கப் பட்டார். 

சிறையில் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து உள்ளதெனவும், அவருக்கு வீட்டு உணவை அளிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவரது மனைவி பஞ்சாப் உள்துறை செயலாளருக்கு எழுதியிருந்தார்.

தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றத்தில் இம்ரான் கான் வழக்கு தொடர்ந்தார். 

இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்து வைத்ததோடு, அவரை உடனடியாக விடுதலை செய்யவும் இன்று ஆணை பிறப்பித்தது. 

இதன் மூலம் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடையும் இம்ரான் கானுக்கு விலகியுள்ளது. இந்த தீர்ப்பு தெஸ்ரிக் இ சாஹிப் கட்சியினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இதனிடையே சிறையில் இம்ரான் கானுக்கு வழங்கப்படும் வசதிகள், உணவு வகைகள் குறித்து அட்டாக் நீதிமன்றம் பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

அட்டாக் சிறை மிகுந்த பாதுகாப்பு நிறைந்த சிறையாகும். அதில் ப்ளாக் எண் 2-ல் மற்ற 3 அறைகளும் காலி செய்யப்பட்டு இம்ரான் கான் மட்டுமே அங்கு தங்க வைக்கப் பட்டார். 

சிமெண்ட் பூசப்பட்ட 9X11 அளவு கொன்ட அறை இம்ரான்கானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. முன்னாள் பிரதமரின் வசதிக்காக உடனடியாக அதில் மின் விசிறியும் நிறுவப்பட்டது.

தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை உருவான கதை !

கழிவறையில் புத்தம் புதிய டாய்லெட் சீட், ஷவர், டிஷ்யூ பேப்பர் வைப்பதற்கான ஸ்டேண்ட் மற்றும் தண்ணீர் குழாய்கள் பொருத்தப் பட்டன. 

அத்துடன் கை மற்றும் முகம் கழுவ மிகப்பெரிய அளவிலான கண்ணாடியோடு கூடியே பேஷன் வைக்கப் பட்டது. மேலும் இம்ரான் கான் வசதிக்காக மெத்தை, தலையணை, டேபிள், மற்றும் ஏர் கூலர் வசதியும் வழங்கப்பட்டது.

சிறையில் இம்ரான் கானுக்கு செய்யப்பட்ட வசதி !

இம்ரான் கானுக்கு உணவைப் பொறுத்தவரை வாரத்தில் இரண்டு நாட்கள் நாட்டு கோழி இறைச்சி சமைத்து தரப்பட்டது. 

அத்துடன், நெய்யில் வறுத்த ஆட்டிறைச்சியும் அவருக்கு சமைத்து பரிமாறப்பட்டது என்று சிறை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

தனது கணவருக்கு சிறையில் பி வகுப்பு வச்திகளாவது வழங்க வேண்டும், உணவில் விஷம் கலக்கப் படலாம் என்பதால் வீட்டில் சமைத்த உணவை தர வேண்டும் என 

அவரது மனைவி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இம்ரான் கானுக்கு இவ்வளவு சொகுசு வசதிகள் வழங்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings