தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை உருவான கதை !

0

மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள எல்லோராவில் அமைந்துள்ள கைலாசநாதர் குடவரைக் கோவிலைப் போலவே, கழுகு மலையிலும் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட குடவரைக் கோவில் உள்ளது. 

தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை உருவான கதை !
இதன் காரணமாகவே இதனை தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கின்றனர். இக்கோவில் முழுக்க திராவிட கட்டடக்கலை முறையை கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்த கோவிலானது கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலின் கட்டுமானம் அனைத்தும் தலைகீழ் தான். 

முதலில் மலையின் மீது கோபுரத்தையும், அதில் நுணுக்கமான சிற்பங்களையும் உருவாக்கியுள்ளனர். அடுத்த படியாக கருவறை, சிற்பங்கள், அடித்தளம் ஆகியவற்றை செதுக்கி உருவாக்கியுள்ளனர். 

இருந்தாலும் இங்குள்ள கோவில் முழுமை பெறாமல் பாதியில் கைவிடப்பட்டுள்ளது போல் உள்ளது. இதற்கு ஒரு கதையும் செவிவழியாக தொடர்ந்து வருகிறது.

ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?

அதாவது, பாண்டிய நாட்டில் மிகவும் சிற்பக் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்ற சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். 

அவன் சிலைகளை செய்யும் அழகையும் கை வண்ணத்தையும் கண்ட அனைவரும், சிற்பியை தேவசிற்பியான மயன் தானோ என்று வியந்து போற்றி வந்தனர். 

அந்த சிற்பிக்கு ஒரு மகன் இருந்தான். இருவரும் ஒரு நாள் ஊர் திருவிழாவுக்கு சென்றனர். திருவிழா கூட்டத்தில் மகன் தொலைந்து போனான். சிற்பி மகனை எங்கெல்லாமோ தேடியலைந்து, அழுது புலம்பியும் மகன் கிடைக்கவில்லை.

தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை உருவான கதை !

இதனால் மனம் வெறுத்து, கழுகுமலைக்கு வந்து அங்கு சமண துறவிகளின் சிலைகளை செய்து கொண்டு அங்கேயே தங்கி விட்டான். 

இந்நிலையில், திடீரென்று ஒரு நாள் மலையின் கீழ்ப் பகுதியிலிருந்து கல் செதுக்கும் ஒலி கேட்டது. 

மேலே வந்தவர்கள், இந்த சிற்பியிடம் மலையின் கீழ் புறத்தில் ஒரு இளம் சிற்பி சிலைகளை செதுக்குறான். அது எவ்வளவு அழகாக நேர்த்தியாக செதுக்குகிறான் தெரியுமா? 

அரசு வேலை வாய்ப்பு பதிவது எப்படி?

ஒவ்வொரு சிலையும் உயிர் பெற்று வருவது போலவே இருக்கிறது! என்று சிற்பியின் காதுபடவே இளம் சிற்பியை புகழ்ந்தனர்.

வருபவர்கள் அனைவரும் இளம் சிற்பியை புகழ்வதைப் பார்த்து சிற்பிக்கு இளம் சிற்பியின் மீது அளவுகடந்த வெறுப்பு உண்டானது. 

ஒரு நாள் ஆத்திரம் அளவு கடந்த போது, சிற்பி தன் கையில் வைத்திருந்த உளியை இளம் சிற்பி இருக்கும் திசையை நோக்கி எறிந்தார். உடனே அந்த இளம் சிற்பியிடம் இருந்து அப்பா என்று ஒரு அலறல் ஒலி கேட்டது. 

சிற்பி ஓடிப்போய் பார்த்தால், அங்கே விழுந்து கிடந்தது சிறுவயதில் காணாமல் போன தன்னுடைய மகன் தலைவேறு உடல வேறாக விழுந்து கிடந்தான்.

அதைப் பார்த்து மனம் வெதும்பி நின்றதோடு தன்னுடைய மகன் செதுக்கிய சிற்பங்களை எல்லாம் பார்த்து மலைத்து நின்றான். பிறகு மனம் வெறுத்துப் போய் அங்கிருந்து கிளம்பி மனம் போன போக்கில் சென்று விட்டான். 

தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை உருவான கதை !

இதனால் தான் கழுகுமலையில் உள்ள கோவில் அறைகுறையாக பாதியில் நிற்கின்றன என்று பாட்டி காலத்து கதையை சொல்கின்றனர்.

முதுமையை விரட்டும் மின் தூண்டல் சிகிச்சை !

தென் தமிழகத்தை அன்றைய காலத்தில் ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் காலத்திலும் சிற்பக்கலையும் 

கட்டடக்கலையும் சிறந்து விளங்கியது என்ற உண்மையை மத்திய மாநில அரசுகள் உரிய முறையில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க தவறி விட்டது என்பது தான் நிதர்சனம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)