துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில்... தமிழர்களின் பெருமை !

0

தமிழகக் கோயில்களும் தமிழர்களின் கலாசாரமும் உலகப் புகழ் பெற்றவை.  தமிழகத்தின் சாதாரண குக்கிராமங்களில் இருக்கும் கோயில்களில் கூட மாபெரும் 'கலாசார விழுமியங்கள்'  பொதிந்து கிடப்பது நம் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் செய்தி. 

துக்காச்சி பெரிய சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் !
இந்துக் கோயில்கள் கட்டுமானப் பொருட்களின் அடிப்படையில் மண் தளி, மரத்தளி, கற்றளி, குடைவரைக் கோயில் என்பவனவாகும். தொடக்க காலத்தில் கோயில்கள் மிகச் சிறியதாக மண் கொண்டு அமைக்கப் பட்டன. 

இன்சுலின் செடியின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

கட்டுமானப் பணிகளில் முன்னேற்றம் அடைந்த பிறகு மரம் மற்றும் செங்கல், சுண்ணாம்பினால் செய்யப் பட்டதாக கோயில்கள் மாறின. 

அரசர்களின் காலத்தில் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கற்றளிகளும், குடைவரைக் கோயில்களும் உருவாக்கப்பட்டன. சுடுமண்ணைக் கொண்டு அமைப்பட்ட கோவில்கள் மண்தளிகள் என்று அழைக்கப்பட்டன.

தொடக்கால கோவில்கள் மரத்தினாலேயே அமைக்கப் பெற்றன. இவை மரத்தினை செதுக்கி அமைப்பதால் எளிமையாக இருந்தன. 

ஆனால் இயற்கை சீற்றங்களால் விரைவில் பழுதடைந்தன. மரத்தினால் செய்யப்பட்ட கோவில் விமானங்கள் மழையிலிருந்து பாதுகாக்கப்பட்ட செப்பு தகடுகள் வேயப்பட்டன. 

சில அரசர்கள் கோவில்களுக்கு தங்க தடுகளும் வேய்ந்தனர். இதற்கு சான்றாக சிதம்பரம் நடராஜர் கோவிலை சொல்லலாம். அங்கு சபாநாதர் மண்டபம், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆலயம் போன்றவை மரத்தினால் செய்யப் படிருந்தவை. 
( 03-09-2023 அன்று கும்பாபிசேகம் அனைவரும் வருக.... )

பிற்காலத்தில் அவைகள் அமைப்பு மாறாமல் கற்களால் செய்யப்பட்டன என்றபோதும், மரத்தினால் செய்யப்பட்டவை போலவே அமைக்கப் பெற்றன. 

சிதம்பரம் நடராஜர் கோவில் விமானம் பொன்னால் வேய்யப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகக் கோயில்கள், மண், மரம், கருங்கல், செங்கல் என கட்டுமானப் பொருட்களின் அடிப்படையில் மண் தளி, மரத் தளி, செங்கல் தளி  மற்றும் கற்றளி என நான்கு வகைகளாக வகைப்படுத்தப் படுகிறது. 

கால ஓட்டத்தில் மண் மற்றும் மரங்களால் கட்டப்பட்ட கோயில்கள் அனைத்தும் புதைந்து அழிந்து விட்டன. 

நூற்றாண்டுகள் கடந்தும் நம் கண் முன்னே நிலைத்து நிற்பவை குடைவரைக் கோயில்களும், கற்றளிகளுமே. மக்களின் வருகை மட்டுமின்றி, ஆய்வுகளும் கூட பெருமளவு இவற்றை மையமிட்டே நடந்து வருகின்றன. 

சுவையான மட்டன் கொத்துக்கறி அடை செய்வது எப்படி?

துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

கோயில் உள்ள சோழர் காலக் கல்வெட்டுகளில் இக்கோயிலின் பெயர் திருக்காலத்தி மகாதேவர் கோயில் என்றும், ஊரின் பெயர் குலோத்துங்க சோழ நல்லூர் என்றும், இவ்வூர் உய்யக் கொண்டார் வளநாட்டில் இருந்தது என்றும் அறியவருகிறது.

இக்கோயில் கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் வழியாக, அரசலாற்றங்கரைக்கு வடக்கே துக்காச்சி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. 

இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி. 730-795) பட்டப்பெயரான விடேல் விடுகு என்பதன் அடிப்படையில் துக்காச்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது. சோழ அரசர்களால் அமைக்கப்பட்ட இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருமை யுடையதாகும்.

சிதைந்து போன நிலையில் காட்சி தரும் செங்கல் தளிகளைக் கொண்ட கோயில்களில் ஒன்று.இந்தக் கோயில் 11 -ம் நூற்றாண்டில் விக்கிரமச் சோழன் காலத்தில், செங்கல் கோயிலாகக் கட்டப்பட்டது. 

மற்ற கோயில்களைப் போலவே அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கருங்கல் கோயிலாக மாற்றி அமைக்கப் பட்டாலும், கோபுர மேற்பகுதி, விமான மேற்பகுதி ஆகியவை செங்கல்-சுதை கட்டுமானங் களாகவே இருந்தன. இன்றும் இருக்கின்றன.

இந்தக் கோயிலை உருவாக்கிய சோழர் காலத்து சிற்பிகள் உலோகத்திலும் கருங்கல்லிலும் தங்களுடய வேலைப் பாடுகளை எத்தனை நேர்த்தியாக வெளிக்காட்டினார்களோ, அத்தனை நுட்பமாக தங்களது முத்திரையை செங்கல் கட்டுமானத்திலும் சிற்பத்திலும் பதித்திருக்கிறார்கள். 

துக்காச்சியில் இருக்கும் இந்தக் கோயில் தான், தமிழர் கட்டடக் கலையின் உச்சங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. 

சுவையான பன்னீர் கட்லெட் சாண்ட்விச் செய்வது எப்படி?

தாராசுரம் கோயிலுக்கு இது தான் அமைப்பு ரீதியாகவும் வடிவ ரீதியாகவும்  முன் மாதிரிக் கோயில். துக்காச்சி கோயிலில் இருக்கும் சோழர்கால ஓவியங்களின் சிறப்புகள் மற்றும் அதன் தொழில்நுட்ப நுணுக்கங்கள் வியக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.  

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகிலுள்ள துக்காச்சி என்ற ஊரிலுள்ள ஆபத்சகாயேசுவரர் கோயிலில் தான் முதன்முதலில் சரபமூர்த்தியின் சிற்பம் அமைக்கப் பட்டது. 

விக்கிரம சோழன் (கி.பி.1118-1135) காலத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த கோயிலில் அமைக்கப்பட்ட சரபேஸ்வரர் சிலைதான் தற்போதுள்ள சரபேஸ்வரரின் வடிவங்களில் மிகப் பழமையானதாகும்.

துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில்... தமிழர்களின் பெருமை !
இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி. 730-795) பட்டப்பெயரான விடேல் விடுகு என்பதன் அடிப்படையில் துக்காச்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயில் தென் திருக்காளத்தி என்றும் அழைக்கப் படுகிறது. 

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருக்காளத்தி என்ற தலமானது காற்று பூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதைப் போல இக்கோயில் அதற்கு இணையாக தென் காளத்தியாக விளங்குகிறது.

இத்தலத்தின் மூலவர் ஆபத்சகாயேசுவரர் ஆவார். இறைவி சௌந்தர நாயகி என்றழைக்கப் படுகிறார்.  Video

சிற்ப வேலைப்பாடு மிக்க இக்கோயில் முன்னர் ஏழு திருச்சுற்றுகளைக் கொண்டிருந்த தாகவும், தற்போது மூன்று திருச்சுற்றுகளே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள சரபேசுவரர் சன்னதி கும்பகோணம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)