வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது சரியா என்று தெரியுமா?

0

சளி, காய்ச்சல் என்றாலோ, உடல் எடையைக் குறைக்கவோ தான் நம்மில் பெரும்பாலானோர் வெந்நீர் அருந்துகிறோம். ஆனால், உடல்நலனை பாதுகாக்க உதவுவதில் வெந்நீருக்கு முக்கியப் பங்கு உள்ளது.

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது சரியா என்று தெரியுமா?
காய்ச்சல் என்று வந்து விட்டாலே, சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெந்நீர் குடிக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். 

வெந்நீர், வெறும் நோய்க்கிருமிகளிடம் இருந்து மட்டும் நம்மை பாதுகாப்பதில்லை. இது, உணவு செரிமானம், சீரான ரத்த ஓட்டம், மலச்சிக்கல் பிரச்னை வரை நமக்கு தீர்வுகளைத் தருகிறது. 

தினமும் வெந்நீர் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களைக் காண முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். சரி வாருங்கள் தினமும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதினால் கிடைக்கும் பயன்களை பற்றி இப்போது நாம் காண்போம்.

எந்த நாட்டிற்கு செல்லவும் இங்கிலாந்து ராணிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை தெரியுமா?

மலச்சிக்கல் சரியாக : .

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது சரியா என்று தெரியுமா?

சிலர் மலச்சிக்கல் பிரச்சனையில் தினமும் அவதிப்படுவார்கள், இதற்கு என்ன காரணம் என்றால் அதிகமான கழிவுகள் நம் வயிற்றுள் தங்கி விடுவது தான் முக்கிய காரணமாகும். 

நம் வயிற்றில் கழிவுகள் அப்படியே தங்கி விடுவதினால் வயிற்று வலி, வயிற்று புப்புசம் என்ற பலவகையான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். 

எனவே தினமும் நாம் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து வந்தால், நாம் சாப்பிடும் உணவானது மிக எளிதில் ஜீர்ணகித்து, அவற்றின் கழிவுகள் உடனே வெளியாகி விடும். 

எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் வெந்நீர் (hot water) அருந்தி வந்தால், மிக எளிதில் உணவுகள் ஜீர்ணகுது. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.

இரவு நேரங்களில் : .

சிலருக்கு இரவு நேரங்களில் புளித்த ஏப்பம், வாய்வு பிடிப்பு பிரச்சனைகள் இருக்கும் அப்போது வெந்நீர் குடித்தால் இந்த பிரச்சனை சரியாகும். மேலும் உடலும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

முடி வளர்ச்சிக்கு : .

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது சரியா என்று தெரியுமா?

தினமும் அதிகளவு வெந்நீர் (hot water) குடிப்பதினால் முடி வளர்ச்சியை தூண்டுகிறது மற்றும் முடி வேர் பகுதிகளுக்கு சுறுசுறுப்பு மற்றும் வலிமையளித்து, மேலும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

இரத்த ஓட்டம் சீராக : .

தினமும் அதிகளவு வெந்நீர் (hot water) குடிப்பதினால் இரத்த குழாய்கள் விரிவடையும், இதனால் இரத்த ஓட்டம் சீராக செயல்படுகிறது, 

மேலும் செல்களுக்கு ஊட்டச்சத்து, ஆக்சிஜன் ஆகியவை சரியாக கிடைக்கும். உடலும் ஆரோக்கியமாக செயல்படும்.

மேலும் தினமும் வெந்நீர் குடிப்பதினால் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகள் சீராக இருக்கும். குறிப்பாக நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால் நமக்கு வயதான தோற்றங்களும் ஏற்படாது.

சுவையான வாழை இலை மீன் பொள்ளிச்சது செய்வது எப்படி?

உடல் எடையை குறைக்க : .

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது சரியா என்று தெரியுமா?
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ஓருடம்ளர் வெந்நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் மிக விரைவில் உடல் எடையை குறைத்துவிட முடியும்.

நெஞ்சு கரைசல் சரியாக : .

சில நேரங்களில் நாம் அதிகளவு எண்ணெய் தின்பண்டங்களை அதிகளவு சாப்பிட்டு விடுவோம், அதன் காரணமாக நெஞ்சு கரைசல் ஏற்படும், அப்போது தாராளமாக இரண்டு டம்ளர் வெந்நீர் குடித்து விட்டால் உடனடியாக நெஞ்சு கரைசல் சரியாகி விடும்.

மேலும் பல நன்மைகள் : .

தினமும் வெந்நீர் குடித்து வந்தால் நரம்பு சம்மந்தமான பிரச்சனைகள் சரியாகும், உயர் இரத்த அழுத்தம் குறையும், மன அழுத்தம் குறையும், சிறுநீரக சம்மந்தமான நோய்கள் எதுவும் ஏற்படாது. 

சுவாச மண்டலம், நுரையிறல், இதயம், மூளை ஆகியவை வலிமை பெரும். குளிர் காலங்களில் அதிகமாகும் சளி, இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது சரியா என்று தெரியுமா?

அப்போது நாம் அதிகளவு வெந்நீர் அருந்தி வந்தால் இந்த பிரச்சனைகள் சரியாகும் இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகளவு முகத்தில் பருக்கள் ஏற்படும். 

எனவே தினமும் வெந்நீர் குடித்து வந்தால் சருமத்தில் ஏற்படும் பருக்கள் சரியாகி விடும். அதே போல் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகம் வயிற்று வலி ஏற்படும். 

கால்சியம் உணவுகளை உட்கொள்வதால் மட்டும் கால்சியம் சத்து கிடைத்து விடுமா?

அப்போது அதிகளவு வெந்நீர் குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகி விடும். அதேபோல் தினமும் சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் வெந்நீர் குடித்து வந்தால் உண்ணும் உணவானது சரியாக செரிமானமாகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings