கால்சியம் உணவை உட்கொள்வதால் கால்சியம் சத்து கிடைத்து விடுமா?

0

நீங்கள் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் மட்டும் கால்சியம் சத்து கிடைக்கும் என நினைத்தால் அதை மறந்து விடுங்கள். 

கால்சியம் உணவுகளை உட்கொள்வதால் மட்டும் கால்சியம் சத்து கிடைத்து விடுமா?

கால்சியம் உங்கள் உடலில் வயிற்றில் சுரக்கும் அமிலம் மூலம் கரைந்து சிறு குடல் பகுதியில் உறிஞ்சப்படும்.

நீங்கள் பொதுவாக முழு தானிய ரொட்டி மற்றும் தானியங்களை அதிகம் உட்கொண்டால், அந்த தானியங்களில் உள்ள phytic அமிலம் கால்சியம் 

சேது பந்த சர்வாங்காசனம் எப்படி செய்வது?

மற்றும் பிற தாதுக்கள் உடன் வினைபுரிந்து கரையாத கால்சியம் உப்புகளாக குடலில் இருந்து உரிஞ்சப்படாமல் கழிவாக வெளியேறி விடும்.

சோடியம் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது கால்சியம் உறிஞ்சும் தன்மையை உடலில் குறைத்து விடும்.

குறிப்பாக, vitamin D சத்து உடலில் குறைவாக இருப்பின் கால்சியம் உரிஞ்சப்படுவது இல்லை. அதனால் நமக்கு vitamin D அதிகம் கிடைக்கும் சூரிய ஒளி நம் உடலில் படுவது அவசியம்.

காஃபி, டீ ,சோடா போன்றவற்றை குடிக்கும் பழக்கம் அதிகம் இருப்பின் கால்சியம் சத்தை உடலில் உறிஞ்சும் தன்மை குறையும். 

புகைபிடிக்கும் பழக்கம் அதிகம் இருப்பின் கால்சியம் சத்து உறிஞ்சும் தன்மை குறையும்.

இவை தவிர போதிய உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, அதிக அளவு அசைவ உணவை எடுத்து கொள்வது என பிற பழக்க வழக்கங்கள் இருப்பின் கால்சியம் சத்தை உடல் உறிஞ்சுவது மிக கடினம்.

சுப்த பாதாங்குஸ்தாசனம் எப்படி செய்வது?

வெறும் அந்த சத்துக்கள் இந்த சத்துக்கள் உடைய உணவை உண்டால் மட்டும் நாம் ஆரோக்கியமாக இருப்போம் என்று நினைக்க வேண்டாம்.

கால்சியம் உணவை உட்கொள்வதால் கால்சியம் சத்து கிடைத்து விடுமா?

நம் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள் போன்றவை நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.

தினமும் பால் பருகி வருவதன் மூலம் கால்சியம் சத்தை தக்க வைத்து கொள்ளலாம். சோயா பால் பருகி வருவதும் நல்லது. 

ஸ்வஸ்திகாசனம் எப்படி செய்வது?

அதில் பாலை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 100 மி.லி. சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது.

பாதாமிலும் 80 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்துள்ளது. தினமும் 5-6 பாதாம்களை சாப்பிட்டு வருவது கால்சியம் சத்து அதிகரிக்க உதவும். பாலாக தயாரித்தும் ருசிக்கலாம்.

காலை உணவுடன் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகி வருவதும் நல்லது. அதில் வைட்டமின் சி மட்டுமின்றி கால்சியமும் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. 

இது தினமும் உடலுக்கு தேவையான கால்சியத்தின் அளவை ஈடு செய்யும். அத்தி பழத்தில் கால்சியம் மட்டுமின்றி பெண்களுக்கு தேவையான மற்றொரு ஊட்டச்சத்தான இரும்பு சத்தும் நிரம்பியிருக்கிறது. 

வெர்டிகோ தலைசுற்றலை தடுக்கும் 5 யோகா பயிற்சிகள் !

அத்தி பழங்களை சாலட்டுகளாகவும், உலர வைத்தும், சாப்பிடலாம். செரிமானம் சீராக நடைபெறவும் இது உதவும்.

கால்சியம் உணவுகளை உட்கொள்வதால் மட்டும் கால்சியம் சத்து கிடைத்து விடுமா?

பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதனை அடிக் கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மீன் வகைகளையும் சாப்பிட்டு வர வேண்டும்.

டாக்டரின் உடல் மீண்டும் எடுக்கப்படுமா.. முறைப்படி அடக்கம் செய்யப்படுமா?

கேழ்வரகில் அரிசியை விட 30 மடங்கு கால்சியம் நிறைந்திருக்கிறது. ராகி மால்ட், கேழ்வரகு தோசை, ரொட்டி போன்றவை தயாரித்து சாப்பிட்டு வரலாம். அவை கால்சியத்தின் அளவை அதிகப் படுத்தும்.

காராமணியில் கால்சியம் அதிகம் இருக்கிறது. சூப்பாகவோ, சாலட்டுகளில் சேர்த்தோ, வேக வைத்தோ சாப்பிட்டு வரலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings