உலகத்துல சமத்துவம்ன்னு எவ்வளவு பேசினாலும், சமூகத்துல சலுகைங்குறது ஒரு யதார்த்தமான விஷயம். 

எந்த நாட்டிற்கு செல்லவும் இங்கிலாந்து ராணிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை தெரியுமா?
வாகன சுழல் விளக்கை தடை பண்ணி, வி.ஐ.பி கலாச்சாரத்தை இந்தியாவுல முடிவுக்குக் கொண்டு வர்றதுக்குள்ள எத்தனை கலாட்டா? 

ஒரு சான்றமை பட்டத்தை வச்சு எம்புட்டு அக்கப்போரு. ஆமா, இங்கிலாந்தோட பட்டத்து ராணி, உலகத்துல யாருக்கும் இல்லாத ஒரு உரிமைய வச்சிருக்காங்க. 

இப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி கொட்ட தான் செய்யும் !

எந்த ஒரு அயல்நாட்டு பயணத்திற்கும் ராணி பாஸ்போர்ட் எடுத்துகிட்டு போக வேண்டியதில்லை. பிரிட்டிஷ் அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமே அப்படித் தான் அடிச்சி சொல்லுது.

காரணம் என்ன?

ராணியின் பெயரில் தான் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டே வழங்கப்படுகிறது, அப்புறம் எதுக்கு அதை ராணி கைல வச்சிருக்கணும்? எடுத்து காட்டணும்? 

பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் அப்படிங்கிற கான்செப்ட் தான்! ஆனா, அரச குடும்பத்தின் மத்த உறுப்பினர்களுக்கு இந்த சலுகை கிடையாது. 

வெளிநாடு போகணும்னா அவங்களுக்கு கண்டிப்பா பாஸ்போர்ட் தேவை. ராணியின் கைராசி பத்தி பல மேட்டர்கள் இன்னும் இருக்கு. 

வெண்டைக்காய் பருப்பு சாதம் செய்வது எப்படி?

ராணி இது வரை ஒரே ஒரு திரைப்பட தொடக்க விழாவில தான் கலந்துகிட்டு சிறப்பிச்சிருக்காங்க. அது கமலின் மருதநாயகம். 1997. மருதநாயகம் வெளிவரல. 

ஆனா மனைவி சரிகா வெளியேறிட்டாங்க. ராணியோட கைராசி அப்படி. உலகிலேயே அதிக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் போன உலகத் தலைவரும் இவரு தான். 

ராணி மேலே எந்த வழக்கும் பதிய முடியாது. நம்பர் பிளேட் இல்லாம, லைசென்ஸ் இல்லாம கார் ஓட்ட அதிகாரம் படைத்த ஒரே உலக ஆளுமை ராணி தான். 

உலகெங்கிலும் கருப்பு, நீலம், சிவப்பு, பச்சை ஆகிய நான்கு வண்ணங்களில் மட்டுமே பெரும்பாலும் பாஸ்போர்ட் தயாரிக்கப்படுகிறது. 

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களில் ஒன்று இங்கிலாந்தின் பாஸ்போர்ட். இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 183 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். 

சென்னையில் அதிக கேஸ்கள் மருத்துவமனைகளில் இடம் உள்ளதா? உண்மை பின்னணி !

உலக பட்டியலில், இந்த விஷயத்துல ஆறாவது இடத்தில இருக்கு இங்கிலாந்து. முதலிடத்தில் ஜப்பான். ஜப்பான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 190 நாடுகளுக்கு போகலாம். 

இந்த விசயத்துல 86வது இடத்தில் இருந்த இந்தியா, இப்ப 79வது இடத்துக்கு முன்னேறியிருக்கு. 20 வருஷம் கழிச்சி, கமலுக்கு மறுபடியும் ராணிய பார்க்க வாய்ப்பு கிடைச்சது. 

எந்த நாட்டிற்கு செல்லவும் இங்கிலாந்து ராணிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை தெரியுமா?

இந்த தடவ இங்கிலாந்து பங்கிம்ஹாம் அரண்மனைக்கே வரச்சொல்லி அழைப்பு. ஆனா அந்த பயணத்திட்டம் உறுதியாகுறதுக்குள்ள, இங்க கவுதமியோட வாழ்ந்த திருமணம் இறுதி முடிவுக்கு வந்துருச்சு. 

(சொல்லலை, ரொம்ப ராசியான ராணின்னு) இந்திய பாஸ்போர்ட்ல தனியாத் தான் இங்கிலாந்து போனாரு, கமல். 

கட்டணம் செலுத்தாத முதியவரை கட்டி போட்ட துயரம் - மருத்துவமனையில் நடந்தது என்ன?

அங்க கமலை பார்த்ததும், ராணி நெகிழ்ச்சியோட கைய குலுக்கி, நல்லா இருக்கியப்பா கமல் -ன்னு நலம் விசாரிச்சிருக்காங்க. நாடு திரும்பிய கமல், மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பிச்சிட்டாரு. 

அடுத்த ரவுண்டுக்கு, ராணிய பிக்பாஸ் வீட்டுக்கு வர சொல்லுங்க ஆண்டவா. தாங்க முடியல.