அண்ணியின் கள்ளக்காதல்... இளைஞர் படுகொலை.. தேனியில் !

0

அண்ணியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞரை தட்டி கேட்ட தம்பி குத்தி படுகொலை செய்யப்பட்டார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன். 

அண்ணியின் கள்ளக்காதல்... இளைஞர் படுகொலை.. தேனியில் !
இவருக்கு திருமணமாகாத நிலையில், பிரவீனுக்கும் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மருதமுத்து என்பவரின் மனைவி வீரலட்சுமிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தாக கூறப்படுகிறது.‌ 

இதனை அறிந்த மருதமுத்து தனது மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் இருவருக்கும் இடையேயான உறவு தொடர்ந்துள்ளது. 

ஆமை வடிவில் மிதக்கும் நகரம்... சவூதி அரேபியா கடலில் !

இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை பெரிதான நிலையில் மருதமுத்துவின் பெற்றோர் மற்றும் சகோதரர்களான ராஜா, கணேசன் உள்ளிட்டோர் பிரவீனை கண்டித்துள்ளனர்.‌

தொடர்ந்து பிரவீனும் வீரலட்சுமியும் தொடர்பில் இருந்த நிலையில், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டாம் என மருதமுத்து முடிவு செய்துள்ளார். 

இதனை ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கடந்த மாதம் மருதமுத்து தெரிவித்த போது, அவர்களும் பிரவீனை கண்டித்துள்ளனர்.‌ இதனால் ஆத்திரமடைந்த வீரலட்சுமி மருத முத்துவிடம் சண்டையிட்டு வருசநாடு அருகே பவளநகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் வீரலட்சுமி உடனான உறவை தொடர முடியாத ஆத்திரத்தில் இருந்து வந்த பிரவீன் அவரது நண்பர் தினேஷ் குமாருடன் சேர்ந்து மருத முத்துவின் சகோதரர் ராஜா என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜாவை குத்தியுள்ளார். இதை தடுக்க முயன்ற அவரது தந்தையையும் பிரவீன் தாக்க முயன்றுள்ளார். 

இந்நிலையில் படுகாயமடைந்த ராஜா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராஜாவின் உடலை மீட்டு உடற்கூறாவிற்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

பச்சைக்குத்திக் கொள்வதால் என்னென்ன தீமைகள் உண்டாகிறது?

மேலும் ராஜாவின் தந்தை கருப்பையா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரவீன் மற்றும் அவரது நண்பர் தினேஷ் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings