ஆமை வடிவில் மிதக்கும் நகரம்... சவூதி அரேபியா கடலில் !

0

சவூதி அரேபியாவில் 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மிக்க வைக்கக்கூடிய ஆமை வடிவிலான மிதக்கும் நகரம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆமை வடிவில் மிதக்கும் நகரம்... சவூதி அரேபியா கடலில் !
நம் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு, நவீன தொழில் நுட்பங்களால் புதுப்புது விஷயங்கள் கண் முன்னே சாத்தியமாகிறது. 

அந்த வகையில் தற்போது சவுதி அரேபியாவில் ஆமை வடிவிலான மிதக்கும் நகரம் உருவாக உள்ளது. இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் ரூ. 65 ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமான ஆமை வடிவிலான மிதக்கும் கப்பல் தயாராக உள்ளது. 

தீபாவளி ஸ்பெஷல்.. பிரட் ட்ரை குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

இதனை கப்பல் என்று சொல்வதற்கு பதிலாக மிதக்கும் நகரம் என்றே அழைக்கலாம். இந்த கப்பலுக்கு 'பான்ஜியாஸ்' எனப் பெயரிடப் பட்டுள்ளது. 

355 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமி, ஒரே நிலப்பகுதியாக இருந்த போது அழைக்கப்பட்ட பான்ஜியா (Pangeos) நிலத்தின் நினைவாக இப்பெயர் வைக்கப் பட்டுள்ளது. 

ஆமை வடிவில் மிதக்கும் நகரம்... சவூதி அரேபியா கடலில் !

பான்ஜியாஸ் கப்பல் 1,800 அடி நீளமும், 2,000 அடி அகலமும் கொண்டது. இதில் ஒரே சமயத்தில் 60 ஆயிரம் பேர் பயணிக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

60 ஆயிரம் பேருக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த கப்பலில் உருவாக்கப்பட உள்ளது. 

இதில் ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் சென்டர்கள், பூங்காக்கள், ரூப்டாப் கார்டன், பீச் கிளப், மால்கள் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளன. 

தீபாவளி ஸ்பெஷல்... ராகி அதிரசம் செய்வது எப்படி?

குறிப்பாக ஆமை வடிவிலான இந்த கப்பலின் இறக்கை பகுதியில் 19 வில்லாக்கள் மற்றும் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த ஆமை வடிவான கப்பல் கண்டம் விட்டு கண்டம் கடலில் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் கப்பலுக்கு தேவைப்படும் மின் ஆற்றல், கடல் அலை மற்றும் சூரிய மின்சக்தி மூலமாக எடுக்கப்பட்டு, முற்றிலும் பசுமை வழியில் இயக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆமை வடிவில் மிதக்கும் நகரம்... சவூதி அரேபியா கடலில் !

இத்தாலியைச் சேர்ந்த லஸ்ஸாரினி கப்பல் கட்டுமான நிறுவனம் இந்த மிகப்பெரிய மிதக்கும் நகரத்தை, அடுத்த 8 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது. 

இதன் கட்டுமான பணிகளை சவுதி அரேபியாவில் உள்ள சிங் அப்துல்லா துறைமுகம் அருகே கடற் பகுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தீபாவளி ஸ்பெஷல்... குழந்தைகளுக்கு ஏற்ற சாக்லேட் குஜியா செய்வது எப்படி?

இதற்கான கட்டுமான செலவு மட்டும் சுமார் 65 ஆயிரம் கோடி என கூறப்பட்டுள்ளது. 

தற்போது இந்த ஆமை வடிவிலான கப்பலின் வடிவமைப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ...

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)