பரவும் வைரல்... ஜெயிலர் படத்துக்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் !

0

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. 

பரவும் வைரல்... ஜெயிலர் படத்துக்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் !
கடந்த 5 நாட்களில் இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.350 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் சிறப்பு தோற்றமும் அனிருத்தின் இசையும் பெரும் காரணம் என கூறப்படுகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ரஜினிகாந்த் - யோகி பாபுவுக்கு இடையேயான நகைச்சுவை காட்சிகள் இந்தப் படத்தில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இந்தப் படத்துக்காக யோகி பாபு பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி இந்தப் படத்துக்காக யோகி பாபு ரூ.1 கோடி சம்பளம் வாங்கி யுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இந்த சம்பள விவரம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings