குழந்தையிலேயே காது குத்துவது ஏன்? சுவாரஸ்யமான தகவல் !

0

நம்மிடம் யாராவது வந்து ஏமாற்ற முயற்சிக்கும் போது எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு என்று அனைவருமே கூறியிருப்போம். 

குழந்தையிலேயே காது குத்துவது ஏன்? சுவாரஸ்யமான தகவல் !
குழந்தைகள் பிறந்த பின், தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படும் ஒரு பழக்கம் காது குத்துதல். குழந்தைகளுக்கு காது குத்துவது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்த பழக்கம் நமக்கு முன்னோர்கள் அறிமுகப்படுத்தி விட்டு சென்றதால், ஏன் எதற்கு என்றே தெரியாமல் இன்று வரை பின்பற்றி வருகிறோம்.

இட்லி, தோசை மாவு கடையில் வாங்குவது நல்லதா? கெட்டதா? விழிப்புணர்வு !

காது குத்துதல் : .

பொதுவாகவே குழந்தை பிறந்த சில தினங்களிலேயே குழந்தைக்கு பெயர் வைத்துவிடுவார்கள். அதன் பின் 3, 5, 7, 9, 11 என ஒற்றைப் படை மாதங்களில் அவரவர் வழக்கத்திற்கேற்ப ஆண், பெண் இருவருக்கும் காது குத்துவார்கள்.

இந்த காது குத்து விழாவை உற்றார், உறவினர் என சொந்தபந்தங்கள் அனைவரையும் அழைத்து சிறப்பாக செய்வார்கள். இவ்வாறு காது குத்துவதால், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கிறன.

நன்மைகள் : .

காதில் கம்மல் அணியும் பகுதியில் இருக்கும் மெரிடியன் புள்ளி மூளையிலுள்ள இடது எம்மிஸ்பியர் பக்கத்தை, வலது பக்கத்தோடு இணைப்பதற்கு உதவுகிறது.  

இது நினைவாற்றலையும், மூளை செயல்திறனையும் சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது. அதோடு, செவித்திறன் நரம்புகளும் தூண்டப்படுவதால், காது கேட்கும் திறனும் மேம்படுகிறது. 

இதனால் தான் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே காது குத்துகிறார்கள். காது மடலின் இணைப்புப் பகுதியில் கண் பார்வையின் இணைப்பு புள்ளி இருப்பதால், இது பார்வை திறனை மேம்படுத்துகிறது.

செரிமான செயல்பாடுகள், சுவாச ஆரோக்கியம், மனநலம் போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது. காது குத்திக் கொள்வதால், பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் வலியும், பிரசவ நேரத்தில் ஏற்படும் வலியும் குறைகிறது. 

மிருதுவான பசுமை கோழி வறுவல் செய்வது எப்படி?

இதன் காரணமாகவே பெண் குழந்தைகள் கட்டாயம் இரண்டு காதுகளிலும் கம்மல் அணிய வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். பசியைத் தூண்டும் புள்ளிகள் காதில் இருக்கின்றன. 

இதன் மூலம் செரிமானத்தின் செயல்பாடுகள் சீராகி நன்றாக பசி எடுக்கும். காது குத்துதல் ஒட்டு மொத்த உடலின் உயிர் சக்தியையும் மேம்படுத்துகிறது. 

குழந்தையிலேயே காது குத்துவது ஏன்? சுவாரஸ்யமான தகவல் !

காது குத்துவதன் மூலம், உடலில் சீராக ரத்த ஓட்டம் பராமரிக்கப்படுகிறது. இதனால் சரியான விகிதத்தில் மூளைக்கு ரத்தம் பாய்கிறது. மூளையின் உகந்த செயல்பாடு, மன ஆற்றலையும், மனநலத்தையும் காக்கிறது. 

பெண்கள் காது குத்துவதால் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு தீர்வு காண முடியும். உணர்வு மற்றும் பெருமூளை புள்ளிகள் காது கேட்கும் தன்மையை பராமரிக்கின்றன. அந்த இடத்தில் காது குத்துவதனால் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. 

சுவையான ஆலு சப்பாத்தி கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி?

காது குத்துதல், பதற்றம் மற்றும் கவலையைக் கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

நமது முன்னோர்கள் காது குத்துவதை, பாரம்பரியத்திற்காக மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பின்பற்றினார்கள் என்பதை மேற்கண்ட நன்மைகளால் அறிய முடிகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)