அம்மா, தங்கையை ஆற்றில் தள்ளினார்... குழந்தைக்கு நடந்த கொடூரம் !

0

ஆந்திராவில் ஒரு நபர் தன்னுடன் வாழ்ந்து வந்த பெண்ணையும் அவரது கைக் குழந்தையையும் ஆற்றிவில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் ஆற்றில் வீசிய ஒரு சிறுமி, குழாய் ஒன்றைப் பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்துள்ளார். 

அம்மா, தங்கையை ஆற்றில் தள்ளினார்... குழந்தைக்கு நடந்த கொடூரம் !
அம்மாவும் அந்த மாமாவும் காரில் இருந்து இறங்கினார்கள். மாமா செல்ஃபி எடுப்பதாகச் சொல்லி அம்மாவை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து அம்மாவை ஆற்றில் தள்ளி விட்டார். 

அக்காவையும் என்னிடமிருந்து பறித்து ஆற்றில் வீசினார். நான் பயந்து ஓடினேன். அவர் என்னையும் பிடித்து ஆற்றில் தள்ளினார். ஆனால் பாலத்தில் இருந்த ஒரு குழாயைப் பிடித்துக் கொண்டேன். 

அதனால் தான் உயிர் பிழைத்தேன், என்று தனக்கு நிகழ்ந்ததைக் கூறுகிறார் கீர்த்தனா. இந்த 13 வயது சிறுமியின் கூற்றுப்படி, தனது தாய் நம்பிய நபரே இந்த கொடூரத்தைச் செய்துள்ளார். 

எந்த நாட்டிற்கு செல்லவும் இங்கிலாந்து ராணிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை தெரியுமா?

ஆந்திராவின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ஜொன்னடா - ரவுலபாலம் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுஹாசினி என்ற பெண்ணை, அவருடன் வாழ்ந்து வந்தவரே கோதாவரி ஆற்றில் தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.

அந்த நபர் சுஹாசினியின் இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் தள்ளினார். ஆனால், உயிர் பிழைத்த கீர்த்தனா என்ற குழந்தை தற்போது தெனாலி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருக்கிறார்.

(nextPage)

இந்தச் சம்பவம் எப்படி நடந்தது?

அம்மா, தங்கையை ஆற்றில் தள்ளினார்... குழந்தைக்கு நடந்த கொடூரம் !

கீர்த்தனாவின் தாய் புப்பாலா சுஹாசினி, ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் தாடே பள்ளியில் வசித்து வந்தார். கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, சுஹாசினி ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து கொண்டிருந்தார். 

அப்போது, பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த உலவா சுரேஷை சந்தித்தார். அந்தத் தொடர்பு அவர்கள் ஒன்றாக வாழ வழிவகுத்தது. ஓராண்டுக்கு முன்பு அவர்களுக்கு ஜெஸ்ஸி என்ற குழந்தை பிறந்தது. 

ஜெஸ்ஸி பிறந்த பிறகு சுரேஷ் மெல்ல மெல்ல சுஹாசினியை விட்டு விலகத் துவங்கினார். இதைப் பற்றிப் பலமுறை பேசியும் பலனில்லை என்பதால் சுஹாசினி தாடேபள்ளி போலீசாரிடம் சென்றார். போலீசார் சுரேஷை எச்சரித்தனர். 

இரவில் நடந்த பயங்கரம் :

கடந்த சனிக்கிழமை, ஆகஸ்ட் 5ஆம் தேதி மாலை சுஹாசினி மற்றும் அவரது குழந்தைகளை அண்ணாவரம் கோயிலுக்குச் செல்வதாகச் சொல்லி ஒரு வாடகை காரில் சுரேஷ் அழைத்துச் சென்றார். 

வழியில் அவர் காரை பலமுறை நிறுத்தியதாக கீர்த்தனா கூறினார். 

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ரவுலபாலத்தில் தேநீர் அருந்தி விட்டு சுரேஷ் தனது தாயார் சுஹாசினியை காரில் இருந்து இறக்கி விட்டதாகவும், பாலத்தை அடைந்ததும் செல்ஃபி எடுக்கச் சொன்னதாகவும் கீர்த்தனா கூறுகிறார்.

பின்னர் சுரேஷ் தனது அம்மாவை கோதாவரி ஆற்றில் தள்ளியதாகக் கூறுகிறார் கீர்த்தனா. காரில் இருந்த எனது சகோதரி ஜெஸ்ஸியையும் அழைத்துச் சென்று ஆற்றில் வீசினார். நான் தப்பித்து ஓடினேன். 

அவர் என்னையும் பிடித்து ஆற்றில் வீசினர். ஆனால் என் கால் ஒரு குழாயில் மாட்டிக் கொண்டது, என்றார் கீர்த்தனா. அதன் பிறகு கீர்த்தனா தன்னிடமிருந்த செல்போன் மூலம் '100'க்கு அழைத்தார். 

உடனே அருகில் இருந்த ரவுலப்பாலம் போலீசார் அங்கு வந்தனர். கிட்டத்தட்ட 2 கி.மீ. நீளமுள்ள கோதாவரி பாலத்தில் குழந்தை கீர்த்தனா இருக்கும் இடத்தை போலீசார் தேட ஆரம்பித்தனர்.

டார்ச்லைட் வெளிச்சத்தில் விசில் அடித்தபடியே தேடிக் கடைசியில் கீர்த்தனாவை கண்டுபிடித்து ஆபத்தில் இருந்து மீட்டனர். கீர்த்தனா தற்போது தனது பாட்டி சுனிதா வீட்டில் தங்கியுள்ளார். 

சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் முழுமையாக மீளவில்லை. தனது அம்மாவும் தங்கையும் எங்கே என்று கேட்டபடியே இருக்கிறார். உயிர் பிழைத்த கீர்த்தனா என்ற குழந்தை தற்போது தெனாலி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருக்கிறார்.

(nextPage)

100க்கு அழைக்க வேண்டும் என்று சினிமாவில் பார்த்தேன்.

அம்மா, தங்கையை ஆற்றில் தள்ளினார்... குழந்தைக்கு நடந்த கொடூரம் !

ஆபத்தான சூழ்நிலையில் 100-க்கு அழைக்க வேண்டும் என்று படங்களில் பார்த்ததாகக் கூறுகிறார் கீர்த்தனா. தனது தங்கையுடன் விளையாடு வதற்காகக் கொண்டு வந்த செல்போனை வைத்து போலீசாருக்கு போன் செய்ததாகக் கூறியுள்ளார்.

குழாயில் சிக்கியதால், ஒரு கையால் குழாயைப் பிடித்துக் கொண்டு, மறு கையால் செல்போனை பயன்படுத்த முடிந்தது என்கிறார். அப்போது எல்லாரும் தூங்கிகிட்டு இருப்பாங்க, யாரையாவது கூப்பிட்டா எடுப்பாங்களான்னு நினைச்சேன். 

போலீசுக்கு போன் போட்டால் வருவாங்கன்னு தோணிச்சு. அதேமாதிரி உடனே வந்துட்டாங்க. கொஞ்ச நேரம் டார்ச் லைட் அடிச்சு தேடீட்டு என் மேல கயிற்றைப் போட்டு மேலே இழுத்தாங்க. 

அவர்கள் ஒரு நர்ஸை அழைத்து வந்து காயங்களுக்கு சிகிச்சை கொடுத்தாங்க, என்று கீர்த்தனா விளக்கினார். இவர் தாடேபள்ளியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

சுவையான வாழை இலை மீன் பொள்ளிச்சது செய்வது எப்படி?

போலீஸ் காவலில் சுரேஷ் :

கோதாவரி பாலத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து ரவுலபாலம் காவல் நிலையத்தில் ஐபிசி 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தாயையும் குழந்தையையும் கோதாவரி ஆற்றில் தள்ளி விட்டு விட்டு, சுரேஷ் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றதாக கீர்த்தனா கூறினார்.

அவர் அளித்த விவரத்தின்படி, சி.சி.டி.வி கேமராக்களின் உதவியோடு குற்றவாளி இருக்கும் இடத்தை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். 

விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் எனத் தெரிகிறது. கோதாவரியில் காணாமல் போன சுஹாசினி மற்றும் ஜெஸ்ஸியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு நாட்களாக முயற்சி செய்தும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கோதாவரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இவர்களின் தடயம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் முன்பு சுஹாசினியுடன் தாடேபள்ளியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார்.

ஒரு சின்னக் குழந்தைக்குக்கூட இப்படி ஒரு அட்டூழியத்தை செய்திருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், என்று சுஹாசினியின் அக்கா சுனிதா கூறினார்.

(nextPage)

அவனை விடாதீர்கள்: 

அம்மா, தங்கையை ஆற்றில் தள்ளினார்... குழந்தைக்கு நடந்த கொடூரம் !

தனது தங்கை எம்.சி.ஏ படித்து நல்ல நிலைக்கு வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த போது திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட பிரச்னைகளால் இப்படிப்பட்ட சூழலை சந்தித்ததாக சுனிதா கூறினார். 

எனது தங்கையையும், அவள் குழந்தையையும் கோதாவரியில் வீசி எறிந்த அவனை சும்மா விடக்கூடாது. ஏற்கெனவே அவளை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டான். 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

ஒரு சின்னக் குழந்தைக்குக் கூட இப்படியொரு அட்டூழியத்தைச் செய்திருக்கிறான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும், என்று அவர் கூறினார்.

இப்போதைக்கு கீர்த்தனாவை நாங்கள் பார்த்துக் கொள்வோம். ஆனால், அவளது எதிர் காலத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும், என்றார் சுனிதா.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings