சாப்பாட்டுக்கு பணமா? ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய பெண் !

0

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் சாலையோரமாக Taco Ortiz என்ற பெயரில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஜோனா வாஸ்குவேஸ் என்ற பெண் அந்த ஹோட்டலை நடத்திவந்தார். 

சாப்பாட்டுக்கு பணமா? ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய பெண் !
கடந்த 6ஆம் தேதி அங்கு டிப் டாப்பாக உடையணிந்து லெக்சஸ் காரில் வந்திறங்கிய இளம்பெண் டாகோஸ் (tacos) என்கிற உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பிறகு உணவுக்கு பணம் தருமாறு பில்லை நீட்டியுள்ளார் ஹோட்டல் உரிமையாளர். 

ஆனால், பணம் கொடுக்காத இளம்பெண் விற்பனையாளரை தாக்கியதுடன் பெப்பர் ஸ்பிரேவையும் அடித்துள்ளார். பணம் கொடுக்காமலேயே அங்கிருந்து காரில் கிளம்பியுள்ளார். 

அவரை பின் தொடர்ந்து சென்று ஊழியர் வீடியோ எடுக்க, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற இளம்பெண் காரில் இருந்து திரும்ப வந்து வாட்டர் பாட்டிலை வீசி எறிந்ததுடன் விற்பனையாளர் வாஸ்குவேஸை சட்டையை பிடித்து இழுத்து கடுமையாக தாக்கினார். 

ஹோட்டலின் போர்டையும் தூக்கி வீசி விட்டு சாவகாசமாக அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார். 

ஹோட்டல் உரிமையாளர் வாஸ்குவேஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் என்னுடைய முடியை பிடித்து இழுத்ததுடன் தோள்பட்டையில் பலமாக தாக்கினார், முகத்தில் குத்தினார் என்று குறிப்பிட்டார். 

சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட, ஹோட்டலுக்கு நேரில் வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இளம்பெண் தாக்கும் வீடியோவை எடுத்த உணவக ஊழியர் அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட அது வைரலான நிலையில், இளம்பெண்ணுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. 

இந்த நிலையில் பேக்கர்பீல்ட் பகுதியில் வசிக்கும் 36 வயதான ரினே லாட்ரிஸ் ஹின்ஸ் அந்த இளம்பெண் என்பதும் தெரியவந்துள்ளது. பணி நிமித்தமாக அருகில் அந்த பகுதிக்கு வந்த ஹின்ஸ், இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஹின்ஸ் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்த போலீசார், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி சிறையில் அவரை அடைத்தனர். 

வங்கா பாபாவின் உலகப் போர் கணிப்பு பலிக்கப் போகிறதா?

அத்துடன் அவருக்கு மற்றொரு சோகமான செய்தியும் சென்றுள்ளது. சமூக வலை தளங்களில் வைரலான வீடியோவைப் பார்த்த ஹின்ஸ் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர், அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings