அதென்ன லீனியர், நான் - லீனியர் திரைப்படம்?

0

திரைப்படத்திற்கு 2 வகையிலான கதை சொல்லும் பாங்கை இயக்குனர்கள் கடைபிடிக்கின்றனர். நேர்ப்பாங்காக கதை சொல்லுவது (Linear Narrative)- லீனியர் திரைக்கதை, நேர்ப்பாங்கற்ற முறையில் கதை சொல்லுவது (Nonlinear Narrative)- நான்-லீனியர் திரைக்கதை.

அதென்ன லீனியர், நான் - லீனியர் திரைப்படம்?

(1) லீனியர் திரைக்கதை - Linear Narrative

பொதுவாக திரைப்படங்களில் ஆரம்பக் காட்சியிலிருந்து காலம் முன்னோக்கி மட்டுமே நகர்ந்தபடி இருக்கும். உதாரணத்திற்கு ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையோ - ஒரு நாட்டின் வரலாற்றையோ சொல்லும் கதைகளுக்கு இந்த விதி பொருந்தும்.

படத்தை எந்த ஒரு கட்டத்தில் நிறுத்தி பார்த்தாலும் அதற்கு முந்தய காட்சிகள் காலத்தால் முந்தியதாகவும் பிந்தைய காட்சிகள் காலத்தில் பிந்தியதாகவும் இருக்கும். 

இது நேர்ப்பாங்காக கதை சொல்லும் (Linear Narrative) பொதுவான லீனியர் திரைக்கதை வடிவம்.

உணவின் மூலம் கூட வரலாம் மூல நோய் ! 

(2) நான்-லீனியர் திரைக்கதை - Nonlinear Narrative

நேர்ப்பாங்கற்ற கதை சொல்லல் என்பது மாறிய காலவரிசையில் அல்லது கால ஓட்டத்தின் ஒழுங்கை முன்-பின்னாக மாற்றி கதை சொல்வது என்று அர்த்தம். இதனை இன்னும் எளிமையாக உங்களுக்கு விளக்குகிறேன்.

அதாவது நேர்க்கோட்டில் செல்லும் கதையின் இடையில் முன்பு எப்போதோ நடந்த சம்பவங்கள் ஃப்ளாஷ் பேக் காட்சிகளாக வந்து போகும். 

திரைக்கதாசிரியர் நேர்கோட்டில் முன்னேறும் கால ஓட்டத்தை சற்றே நிறுத்தி காலத்தில் முன்போ (Flash Back) அல்லது பின்போ (Flash Forward) சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து கதையின் கால ஓட்டத்தைத் தொடர்வார்.

அதென்ன லீனியர், நான் - லீனியர் திரைப்படம்?

உதாரணத்துக்கு அலைபாயுதே படத்தில் வருவதைப் போல நிகழ் காலத்தில் ஒரு கதைத் தொடர் நடந்து கொண்டிருக்க இடையிடையே பழைய சம்பவங்கள் மற்றொரு தொடராக வந்து போகலாம்.

சில படங்களில் கதை நடக்கும் கால ஓட்டத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து காட்சிகளை தேர்ந்தெடுத்து அவற்றின் வரிசையை மாற்றி அமைத்து திரைக்கதை யாசிரியர் ஒரு வடிவத்தை உண்டாக்குகிறார்.

இந்த வரிசை நேர்ப்பாங்கற்ற கால ஓட்டத்தில் இருப்பதனால் நான்-லீனியர் என்று கூறப்படுகிறது. 

இது போன்ற படங்கள் வெறும் சோதனை முயற்சியாக மட்டும் நின்று விடாமல் ஒரு கலை அனுபவமாகவும், பேசாப் பொருளை பேசுவதாகவும், அழுத்தமாகக் கதை சொல்வதாகவும் அமைவது மிகவும் அவசியம்.

மழை காலத்தில் பரவும் நோய்கள் என்ன?

நான்-லீனியர் படங்களை பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை இப்போது காணலாம்.

கோடிக்கணக்கான மனித வாழ்க்கைகளின் மாபெரும் வலைப் பின்னலாக விளங்கும் சமூக அமைப்பை ஒரு பறவையின் கோணத்திலிருந்து பார்க்க வைக்கிறார்கள். 

தனி மனித வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு மாற்றத்தையும் லட்சக் கணக்கான புறக்காரணிகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வெளிப்படுத்து வதற்கும் பயன்படுத்து கிறார்கள்.

அதென்ன லீனியர், நான் - லீனியர் திரைப்படம்?
ஒருவனின் நினைவில் பதிந்திருக்கும் தனித்தனி சம்பவங்களைக் காட்டி, பார்வை யாளர்களின் மனதில் ஒரு ஒட்டு மொத்தக் கதையை உருவாக்கவும் செய்கிறார்கள். 

ஒரே சம்பவம், அதில் சம்பந்தப்பட்ட பல்வேறு நபர்களின் பார்வைக் கோணங்களில் முற்றிலும் வெவ்வேறாக மாறி யிருப்பதைப் பதிவு செய்கிறார்கள்.

தைராய்டு பிரச்சனைக்கு உடனடி தீர்வு.... கட்டாயம் பகிருங்கள் !

இப்படி நேர்கோட்டு கதையில் சொல்வதற்கு சாத்தியமில்லாத பலவற்றை காலவரிசை மாறிய திரைக்கதை யமைப்பு (நான்லீனியர் திரைக்கதை) சாத்தியப் படுத்துகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)