சவுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம முறையில் கொலை !

0

சவுதி அரேபியாவில் புதிய வீடொன்றில்  5 பேர் கொல்லப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சவுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம முறையில் கொலை !
சவுதி அரேபியா தம்மாம் பிராந்திய அல் அஹ்ஸாவில் (Al Ahsa) புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், ஒரு பல்கலைக்கழக மாணவர் மற்றும் 14 முதல் 22 வயதுக்குட்பட்ட அவரின் நான்கு சகோதரிகள் என 5 பேர் கொல்லப்பட்ட நிலையில் கண்டறியப் பட்டுள்ளனர். 

கொல்லப்பட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப் படுகின்றது. இக் கொலையின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதைக் கண்டறிய சவுதி அரேபிய பொலிஸ் பிரிவு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

கொலை செய்யப்பட்ட 5 பேரும் தங்களது பெற்றோருடன் அல் அஹ்ஸா (Al Ahsa) மாகாணத்தின் அல் ஷுபா பகுதியில் உள்ள தங்களது புதிய குடியிருப்பைக் காணச் சென்ற போது இந்தக் கொடூர கொலைச் சம்பவம் நடந்துள்ளதாகக் தெரிவிக்கப் படுகின்றது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அவர்களது புதிய குடியிருப்பில் விட்டு விட்டு சந்தைக்குச் சென்றிருக்கின்றனர். 

மாலையில் வீடு திரும்பிய அவர்கள் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் யாரும் திறக்கவில்லை. கதவு உள்ளிருந்து தாழிடப் பட்டிருந்தது. 

பல முறை முயன்ற பிறகு சந்தேகமடைந்த குழந்தைகளின் தந்தை கதவை பல வந்தமாகத் திறந்து பார்த்த போது, அவர்கள் கொல்லப் பட்டிருப்பது தெரிய வந்ததையடுத்து உடனே காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளது.

நீச்சல் தெரிந்தவர்கள் கூட நீரில் ஏன் மூழ்குகிறார்கள்? அதை எப்படி தடுப்பது?

குற்றம் நடந்த இடத்திலிருந்து இரத்த மாதிரிகள், கைரேகைகள் மற்றும் பிற ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் தடயவியல் மருத்துவத் துறைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன. 

பிரேதப் பரிசோதனை அறிக்கை பொது வழக்கு விசாரணையில் சமர்ப்பிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)