நீச்சல் தெரிந்தவர்கள் கூட நீரில் ஏன் மூழ்குகிறார்கள்? அதை எப்படி தடுப்பது?

0

ஆடி பதினெட்டு என்றாலே ஒகேனக்கல் தொடங்கி, மேட்டூர் அணை வரை உள்ள நீர்ப்பரப்பில் சில பிணங்கள் மிதக்கவே செய்யும், செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள். 

நீச்சல் தெரிந்தவர்கள் கூட நீரில் ஏன் மூழ்குகிறார்கள்? அதை எப்படி தடுப்பது?
மேட்டூர் அணையில் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார் என்பது போன்ற செய்திகள் வருவதுண்டு. ஆற்றிலோ குளத்திலோ நீச்சலடிக்கும் பொழுது காலில் செப்பல் அணிந்து கொண்டு நீச்சல் அடிக்க கூடாது.

நீச்சலடிக்கும் பொழுது ஜீன்ஸ் பேண்ட், லோயர், சாதாரண பேண்ட், போன்று முழு காலையும் மறைக்கும் துணிகளை உடுத்திக் கொண்டு தண்ணீரில் இறங்க கூடாது.

காரணம் நீரானது துணியினால் உறிஞ்சப் படுவதால் அது நமது உடல் எடையை அதிகரிக்கும் இதனால் விரைவில் நீச்சல் அடிக்க முடியாமல் கை ஓய்ந்து விடும்.

எண்ணெய் குளியல் கேள்விப்பட்டு இருக்கோம்.. அது என்ன கச்சா எண்ணெய் குளியல் !

நண்பர்களுடன் நீச்சல் அடிக்கும் பொழுது, விளையாட்டாக ஒருவர் மீது ஒருவர் ஏறி குதிக்க கூடாது, ஏனென்றால் அறை குறையாக நீச்சல் தெரிந்த ஒருவருக்கு அந்த தழும்பும் தண்ணீர் மூக்கில் ஏறுவதன் மூலம் மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

நீச்சல் தெரியாத அல்லது அரைகுறை நீச்சல் தெரிந்த எவரையும் ஆழமான பகுதியில் நீச்சலடிக்க அனுமதிக்கக் கூடாது. ஆற்றில் நீச்சல் அடிப்பவர்கள் காற்று அதிகமாக வீசினால், அலை கொஞ்சம் உயரமாக தழும்பும். 

இதனால் நீச்சல் அடிக்கும் பொழுது முகத்தின் மேல் நீர் அடிக்கடி விழும், இது எளிதில் களைப்படையச் செய்யும். 

கிணற்றில் நீச்சல் அடிப்பது வேறு, ஓடும் ஆற்று தண்ணீரில் நீச்சல் அடிப்பது வேறு, கடலில் நீச்சல் அடிப்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கிணற்றில் நிலையான நீர் இருக்கும் அது அலைகள் ஏதும் ஏற்படாது. ஒருவர் திடீரென குதித்தால் மட்டுமே அலைகள் தோன்றும், அது அறைகுறை நீச்சல் அடிப்பவரை‌ மூழ்க செய்யவும் வல்லது.

ஆற்றின் நீரானது ஓடும் என்பதால் அது நீச்சலடிக்க தெரியாதவர்களை அது போகும் திசையில் இழுத்துச் செல்லும். இதனால் தான் எப்பொழுதும் ஆற்றில் நீச்சல் அடிப்பவர்கள் குறுக்காக நீச்சலடித்து செல்ல வேண்டும்.

(nextPage)

அதை எப்படி தடுப்பது?

கிணற்றில் அடிப்பது போல நேராக நீச்சலடித்து செல்லக் கூடாது. ஒரு வேளை ஆற்றில் யாராவது அடித்து செல்லப்படும் நிலை வந்தால் தலையை நீரின் மேலே தூக்கிக் கொண்டு நீரின் திசையிலேயே செல்லுங்கள். 

நீச்சல் தெரிந்தவர்கள் கூட நீரில் ஏன் மூழ்குகிறார்கள்? அதை எப்படி தடுப்பது?

தண்ணீர் இருந்து தப்பிக்க எதிர்திசையில் நீச்சல் போடாதீர்கள் அது சுத்தமாக உதவாது, நீரின் திசையிலே சென்றால் நிச்சயம் அது கரையின் ஓரத்தில் கொண்டு சென்று தள்ளி விடும்… தப்பித்து விடலாம்… ங்

உங்களுக்கு விருப்பம் இருந்தால், ஆற்றில் நீச்சல் அடிப்பது எப்படி என்பது போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள், கையை நீளமாக நீட்டி நீச்சலடிக்க வேண்டும்.

மற்றும் கடல் நீச்சல் அடிப்பவர்கள் அலைகளின் உயரத்தை அறிந்த பிறகே ஆழத்திற்குச் செல்ல வேண்டும், ஏனென்றால் குறிப்பிட்ட தூரம் வரை கடலில் சென்றபிறகு எந்த திசையை பார்த்தாலும் கரையே தென்படாது. 

கலங்கரை விளக்கம் இருக்கும் அதை வைத்து வந்து விடலாம் என்று மட்டும் நினைத்து வடாதீர்கள், அது படகு கப்பல் போன்றவற்றில் இருந்து பார்த்தால் மட்டுமே நன்றாக தெரியும். 

கொடூரமான பிறப்பு கட்டுப்பாட்டு வழிகள்...  அதிர்ச்சியாகாம படிங்க !

நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது அலைகளின் உயர்வால் அது கண்ணுக்குத் தென்படாது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். மேலும் நீரில் யாராவது மூழ்குவதை கண்டால், நீங்கள் உடனே சென்று அவரை காப்பாற்ற முயலக்கூடாது. 

அப்படி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நபரை காப்பாற்ற சென்றால் உங்களை கட்டி அணைத்துக் கொள்வார் பயத்தில்…. இதனால் தான் நீச்சல் தெரிந்தவர்களும் நீரில் மூழ்கி இறக்கிறார்கள்.

அதனால் உங்கள் கைகளும் கால்களும் நீச்சலடிக்க இல்லாத வகையில் அவர்கள் கட்டிப்பிடித்து கொண்டிருக்கும், எனவே இரண்டு பேரும் சேர்ந்து நீரில் மூழ்க வேண்டியது தான்.

இதில் இருந்து அவரை காப்பாற்ற என்ன வழி?

நீச்சல் தெரிந்தவர்கள் கூட நீரில் ஏன் மூழ்குகிறார்கள்? அதை எப்படி தடுப்பது?

நீரில் மூழ்கிய அவரை அவரின் தலை முடியை பிடித்து, அவரை பின் பக்கமாக இழுத்து செல்ல வேண்டும். அப்போது தான் அவரின் முகம் தண்ணீருக்கு மேல் இருக்கும் வகையில் மூச்சு விட அவருக்கும் ஏதுவாக இருக்கும். 

அவரை இழுத்துச் செல்ல உங்களுக்கு வசதியாக இருக்கும். குழந்தைகளை நீச்சலடிக்க அழைத்துச் சென்றால், அவர்களை உங்கள் பார்வையில் இருந்து ஒரு போதும் விடக்கூடாது, கரையிலேயே நீச்சலடக்க பழக்க முயற்சி செய்யுங்கள்.

நீச்சல் பழகுவதற்கு நீங்கள் சுரக்காய் புரடை அல்லது, கேன் போன்ற பொருளை கயிற்றினால் கொண்டு இடுப்பில் கட்டுவதன் மூலம் அவர்கள் நீரில் மிதந்து கொண்டிருப்பார்கள்.

எனவே எளிதாக நீச்சல் பழகிக் கொள்ள முடியும், நீரின் மூழ்காமலும் பார்த்துக் கொள்ள முடியும். மற்றும் பெண்கள் நீச்சல் அடிக்கும் பொழுது, நீச்சல் ஆடை அல்லது ட்ரவ்சர் போன்ற ஆடைகளை உடுத்துவது நல்லது.

ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

ஏனென்றால் கால் விரல் வரை நீண்டு கொண்டிருக்கும் பாவாடை போன்ற வடிவம் கொண்ட அல்லது, பேண்ட் அணிந்து நீச்சல் அடிப்பது பெண்களின் மானத்தை காப்பாற்றுமே தவிர உயிரைக் காப்பாற்றாது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

நீச்சல் அடிப்பதற்கு வசதியாக இருக்கும் உடைகளிலை அணிந்து நீச்சலடிக்க முயற்சி செய்யுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings