ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் சம்பாதிக்கும் பெண் !

0

ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் சம்பாதிக்கும் பெண்: கோடீஸ்வரர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதே வேலை. குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும்.

ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் சம்பாதிக்கும் பெண் !

அதுவும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இதற்காகவே வேகவேகமாக குழந்தைகளை கிண்டர் கார்டனில் சேர்த்து விடும் பெற்றோர்களும் உண்டு. 

ஆரோக்கியமாக 100 ஆண்டு வாழ ஸ்பைருலினா மாத்திரைகள் !

சிலர் குழந்தைகளைப் பராமரிக்க வேலைக்கு ஆட்களை நியமிப்பதுண்டு. இந்நிலையில், குழந்தை பராமரிக்கும் வேலையில் (Nanny) பெண் ஒருவர், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை சம்பாதிக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?...

நியூயார்க்கில் உள்ள 34 வயதான குளோரியா ரிச்சர்ட்ஸ் என்ற பெண்மணி, பில்லியனர்களின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் வேலையைச் செய்கிறார். 

இதற்காக ஒரு மணி நேரத்திற்கு சர்வீஸ் சார்ஜாக 13,800 ரூபாயை (167 அமெரிக்க டாலர்) பெறுகிறார். ஒரு நாள் முழுதும் குழந்தையைப் பார்த்துக் கொள்ள 1.6 லட்ச ரூபாய் (2000 அமெரிக்க டாலர்) பெறுகிறார். 

ஒரே சமயத்தில் 10 குடும்பங்களுக்கும் வேலை செய்கிறார். பில்லியனர்களின் குழந்தை என்பதால் தனி ஜெட்களில் பயணம் செய்வது என சொகுசு வாழ்க்கையும் இவருக்குக் கிடைக்கிறது. 

எந்தளவிற்கு ஆடம்பர வாழ்க்கை உள்ளதோ அந்தளவிற்கு பணியில் சவால்களும் இருக்கின்றன. இவர் அடிக்கடி நரம்பியல் குறைபாடுள்ள குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள அழைக்கப் படுகிறார். 

சில சமயங்களில் குழந்தைகளின் பெற்றோர் யார் என்பது கூட தெரியாது. நேரடியாகக் குழந்தையுடன் பயணத்திற்கு அனுப்பப் படுகிறார்.

சுன்னத் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில், குழந்தையைப் பராமரிக்கும் வேலையைப் பார்த்தால் போதும், வருடம் முழுவதும் எனக்குப் போதுமானதாக இருக்கும். குழந்தைகளுடன் நான் மிகவும் நெருக்கமாக இருப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings