சுன்னத் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

முஸ்லிம்கள் ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து, ஆண்களுக்கு ஆண்குறியின் முன் தோலை நீக்கும் சுன்னத் எனும் முறையை பின்பற்றி வருகின்றனர். 
சுன்னத் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
ஆங்கிலத்தில் இதை Circumcised Penis என்று குறிப்பிடுகின்றனர். முஸ்லிம்கள் சுன்னத் செய்வதை திருத்தூதர் கற்று கொடுத்த ஓர் வாழ்வியல் வழியாக தொன்று தொட்டு பின்பற்றி வருகின்றனர். 

இன்று சுன்னத் செய்வது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு பலவகையில் உதவுகிறது என உலக ஆய்வாளர்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர். 
சுகாதாரம்! 

சுன்னத் செய்த ஆணுறுப்பினை சுத்தம் செய்வது எளிது. ஆண்குறியின் முன் பக்கத்தில் சேரும் கிருமிகளை எளிதாக அகற்ற முடியும். 

ஆண்குறியின் முன் தோலில் சிறுநீர் காரணமாக அதிகமாக அழுக்கு சேரும். சுன்னத் செய்வதால் எந்த வலியும் இன்றி எளிதாக சுத்தம் செய்ய முடியும்.

சிறுநீர் பாதை நோய் தொற்று!
சுன்னத் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
சுன்னத் செய்வதால் சிறுநீர் பாதையில் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். 

ஒரு சில ஆய்வுகளில் சுன்னத் செய்த ஆண்களுடன் ஒப்பிடுகையில் சுன்னத் செய்யாத ஆண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று அதிகமாக ஏற்படுவதை கண்டறிய முடிந்தது. 

முன் தோல் உட்பகுதியில் சிறுநீர் தேங்குவதால் தான் இதுபோன்ற நோய் தொற்றுகள் ஏற்பட காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறுவர்களுக்கு மிகவும் முக்கியம்!

சிறுவர்களுக்கு முன்தோல் குறுக்கம் (Phimosis) எனும் ஆணுறுப்பின் முன் தோல் மிக இறுக்கமாக இருந்து அதனால் சிறுநீர் சிறிது தங்கி விடும். 

இந்த நிலை சுன்னத் செய்த சிறுவர்களுக்கு வருவதே இல்லை. இந்த முன்தோல் குறுக்கம் காரணமாக சிறுநீர் பாதையில் தொற்று வரும் ஆபத்து அதிகம். 

சில சமயம் சாதாரண சிறுநீர்ப் பாதை நோய் தொற்று கிட்னி பாதிப்பை கூட ஏற்படுத்தலாம். சுன்னத் செய்வதால் இந்த பாதிப்பை முற்றிலுமாக தடுக்க முடியும்.
பால்வினை நோய்!
சுன்னத் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட CCD Math Model என்ற ஆய்வில் சுன்னத் செய்த ஆண்களுக்கு எய்ட்ஸ் உட்பட 

பல பால்வினை நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என அமெரிக்க ஆய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியது.
புற்றுநோய்!

புற்றுநோயில் பல வகைகள் இருக்கின்றன. இதில், ஆண்குறி புற்றுநோயும் ஒன்று. சுன்னத் செய்த ஆண்களுக்கு இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை. 

மேலும், சுன்னத் செய்த ஆண்களின் துணைக்கு கர்பப்பைவாய் புற்றுநோய் வரும் வாய்ப்பும் மிகமிக குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்கு காரணம் சுன்னத் செய்த ஆண்களுக்கு எச்.பி.வி எனும் Human pappiloma Virus தொற்று ஏற்படுவது இல்லை. 

இந்த வைரஸ் கிருமி தான் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் உண்டாக காரணியாக இருக்கிறது.
காலங்கடந்த திருமணங்கள் கேள்விக் குறியாகும் வாழ்க்கை

சுன்னத் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
குறிமெழுகு (Smegma) என்பது ஆண்குறியின் முன் பக்கத்தில் சேரும் மாவு போன்ற ஒன்றாகும். 

இது சுன்னத் செய்த ஆண்களின் ஆண்குறியில் அதிகம் சேருவதில்லை. மற்றும் சுன்னத் செய்வதால் இதை அகற்றுவதும், சுத்தம் செய்வதும் எளிது.
புரோஸ்டேட் புற்றுநோய்!

ஆணின் இனபெருக்க உள் உறுப்பில் உண்டாக கூடிய புற்றுநோய் தான் இந்த புரோஸ்டேட் புற்றுநோய். 

சுன்னத் செய்த ஆண்களுக்கு இந்த புரோஸ்டேட் புற்றுநோய் வரும் வாய்ப்புகளும் மிக குறைவு என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
Tags: