ஆரோக்கியமாக 100 ஆண்டு வாழ ஸ்பைருலினா மாத்திரைகள் !

இனிப்பு மற்றும் ஐஸ்க்ரீம் தயாரிப்புகளில் இடம் பெற்று வந்த கடல்பாசிக்கு இன்று மவுசு கூடியிருக்கிறது. 
ஆரோக்கியமாக 100 ஆண்டு வாழ ஸ்பைருலினா மாத்திரைகள் !
அழகு, ஆரோக்கியம், இளமை வேண்டு வோருக்கு கடல்பாசி மாத்திரைகள் கை கொடுப்பதாக விளம்பரப் படுத்தப் படுகின்றன. 
கடல் பாசியில் இருந்து தயாராகும் ஸ்பைருலினா மாத்திரைகள் பரபரப்பான விற்பனையில் உள்ள நிலையில்,  அவற்றைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

எல்லோரும் எடுத்துக் கொள்ளலாமா? ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா ராஜனிடம் கேள்விகளை வைத்தோம்...

ஸ்பைருலினா மாத்திரைகள் கடல் பாசியில் இருந்து தயாரிக்கப்படுபவை. இதில் 79 சதவிகி தம் புரதச்சத்து இருக்கிறது. 

இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் செல்களில் ஏற்படும் சேதாரம் தடுக்கப் படுகிறது. திசுக்களில் ஏற்படும் பிரச்னை களையும் சரி செய்கிறது. 
நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். உடலுக்குத் தேவையான 22 அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. 

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3, ஒமேகா 6 ஆகியவையும் உள்ளன.

தாதுச்சத்துகளில் மாங்கனீஸும் இரும்புச் சத்தும் உள்ளன. மாங்கனீஸ் சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட். உடலில் ஏற்பட்ட புண்கள் ஆறுவதற்கு உதவும். 

ரத்த சோகை வராமல் தடுக்க இரும்புச்சத்து அவசியம். வைட்டமின்களில் பி1 தையமின், பி2 ரிபோஃப்ளோவின் ஆகியவைகளும் ஸ்பைருலி னாவில் உள்ளன. 
உடலை சோர்வடையாமல் எனர்ஜியுடன் வைப்பதில் இந்த வைட்டமின் களுக்கு முக்கிய பங்குண்டு.
ஆரோக்கியமாக 100 ஆண்டு வாழ ஸ்பைருலினா மாத்திரைகள் !
இதை மாத்திரை வடிவில் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடல் பாசியை உணவில் போதுமான அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் சத்துகளைப் பெறலாம்.
40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஜிகர்தண்டா குளிர்பானத்தில் போதுமான அளவு கடல் பாசி சேர்க்கப் படுகிறது. 

ஃபலூடா ஐஸ்க்ரீமிலும் கடல் பாசி சேர்க்கப் படுகிறது. இயற்கையான பழச்சாறுகள் சிலவற்றில்

சுவைக்காக கடல் பாசி சேர்க்கின்றனர்.

ஸ்பைருலினா மாத்திரைகளை மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப் படி சாப்பிடுவது நல்லது. 
சுயமாக இம்மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டால் உடலில் நச்சு அளவு அதிகமாகி விடும். 
அதனால் தேவை யானவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். ஸ்பைருலினாவில் போலி மாத்திரைகளும் வருகின்றன. 

அதனால், தரமான நிறுவனங்களின் ஸ்பைருலினா தயாரிப்புதானா என உறுதிப் படுத்திக் கொண்டே சாப்பிட வேண்டும்.
Tags: