வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் !

0

காலணி அணியாமல் வெறும் கால்களால் நடக்கும் போது ஏற்படும் நன்மைகள் பல. அவற்றில் முக்கியமான சில நன்மைகள்:

வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் !
காலணி போடுவதால் பெருமளவில் பயன் படுத்தப்படாத பாத தசைகள் வெறும் கால்களில் நடக்கும் போது நன்கு இயக்கப் படுகின்றன. இதன் காரணமாக பாதம், கணுக்கால் மற்றும் ஆடுசதைகளும் பலம் பெறுகின்றன.

வெறும் கால்களால் நடக்கும் போது தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் நீங்குவதாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.

எந்த நாட்டிற்கு செல்லவும் இங்கிலாந்து ராணிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை தெரியுமா?

மேலே குறிப்பிட்டிருக்கும் ஆய்வின் மூலம் வெறும் கால்களில் நடக்கும் போது மூட்டு வலி குறைவதாகவும் தெரிய வந்துள்ளது.

காலணி அணியாமல் வெறும் கால்களில் நடக்கும் போது இரத்த அழுத்த அளவு சீராகிறது. வெறும் கால்களில் நடக்கும் போது நோய் எதிர்க்கும் திறன் அதிகரிக்கிறது.

வெறும் கால்களில் நடப்பதாலும், பூமியோடு நேரடி தொடர்பில் ஈடுபடும் பிற நடவடிக்கைகளாலும் உண்டாகும் நன்மைகள் குறித்து விரிவாக வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.

வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் :

பொதுவாகவே நடைப்பயிற்சி பல்வேறு பலன்களைத் தரும் என்றாலும் குறிப்பிட்ட வகை மேற்பரப்புகளில் நடப்பது சில சிறப்பு நன்மைகளைத் தரும். 

வெற்றுக் கால்களில் மணலில் நடப்பதும் அத்தகைய சிறப்புப் பலன்களைத் தருகிறது.

1) கால் தசைகள் வலுவாகின்றன

காலணிகளைப் போட்டு நடப்பதை விட வெறும் கால்களில் மணலில் நடக்க கூடுதலான ஆற்றல் தேவை. மண்ணில் கால் பதிக்கும் போது பாதங்கள் புதைவதால், கால் தசைகளின் கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. 

இவ்வாறு நடக்கும் போது கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலம் பெறுகின்றன.

சுவையான வாழை இலை மீன் பொள்ளிச்சது செய்வது எப்படி?

2) உடல் எடை குறைகிறது

சாதாரண தரையில் நடப்பதை விட மணலில் நடக்கும் போது, குறிப்பாக, வெற்றுக் கால்களில் மணலில் நடக்கும் போது, அதிக அளவு கலோரிக்கள் எரிகின்றன. இதனால் கூடுதலான திறனுடன் உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.

3) பாதங்களின் நலன் மேம்படுகிறது

மணல், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்க உதவுகிறது. பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாதங்களில் உள்ள சொரசொரப்பைப் போக்கவும் உதவுகிறது.

4) பாதங்களில் உள்ள அக்குபங்க்சர் புள்ளிகள் தூண்டப் படுகின்றன

வெறும் கால்களில் மணலில் நடப்பதால், பாதங்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப் படுகின்றன. இதன் விளைவாக, உடலில் உள்ள சுரப்புகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப் படுகின்றன.

5) இடுப்புப் பகுதியின் பலம் அதிகரிக்கிறது

நாம் நடக்கும், ஓடும் முறையில் இருக்கும் தவறு (wrong posture) வெறும் கால்களில் மணலில் நடக்கும் போது சரி செய்யப் படுகிறது. இதன் காரணமாக இடுப்புத் தசைகள் பலம் பெறுகின்றன.

பாஸ்தா உடலுக்கு ஆரோக்கிய நன்மை தருமா? படிங்க !

6) மன அழுத்தம் நீங்குகிறது

வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் !

மணலில் வெறும் கால்களில் நடக்கும் போது மன அழுத்தம் நீங்கி மனம் அமைதி பெறுகிறது. வெறும் கால்களில் நடக்கும் போது பூமியோடு நமக்குள்ள தொடர்பு பலமாகிறது. 

அது நம் உடல், மன நலத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கடற்கரையில் நடக்கும் போது கடல் அலைகளின் ஆர்ப்பரிப்போ அமைதியான கடல் அலையின் ஓசையோ நம் மனதை கொள்ளை கொள்ளும். 

அத்தகைய சூழலே மன அழுத்தத்தைப் போக்கவும் மன அமைதியை உண்டாக்கவும் உதவும். 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

மணலில் வெறும் கால்களில் நடக்கும் போது சவால்களை அதிகப்படுத்திக் கொள்ள சில குறிப்புகள்:

வேக நடைப் பந்தயம் வைத்துக் கொள்ளலாம்.

பின்னோக்கி நடந்து செல்லலாம்.

பக்கவாட்டில் சிறிது தொலைவு நடக்கலாம்

இவை எல்லாவற்றையும் விட, உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒரு செல்லப் பிராணி இருந்தால், அவளை / அவனை உடன் அழைத்து வந்து மணலில் நடப்பது சவாலைப் பல மடங்கு அதிகப்படுத்தும்; சுவாரசியத்தையும்தான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings