சம்பளம் 30,000.. 40 அறை பங்களா... அதிர்ச்சி கொடுத்த பொறியாளர் !

0

மத்தியப் பிரதேச காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தில் (MPPHC) ஒப்பந்தத்தின் பேரில் உதவிப் பொறியாளர் பொறுப்பில் இருப்பவர் பொறியாளர் ஹேமா மீனா. சம்பளம் 30,000.. 40 அறை பங்களா... அதிர்ச்சி கொடுத்த பொறியாளர் !

இவருக்கு மாதச் சம்பளம் ரூ.30,000. இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்திருப்பதாக ஹேமா மீனா மீது புகாரளிக்கப் பட்டிருக்கிறது. 

அதைத் தொடர்ந்து, லோக் ஆயுக்தாவின் சிறப்புக் காவல் அமைப்பைச் சேர்ந்த 50 பேர் கொண்ட குழு, சாதாரண உடையில் ஹேமா மீனாவின் இல்லத்துக்குச் சோதனை நடத்த சென்றிருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி... திருமண கமிட்மென்ட் பற்றி அதிர வைக்கும் ஆய்வு !

ஆனால், அங்கிருந்த வாட்ச்மேன்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி, வீட்டினுள் அனுமதிக்க மறுத்து விட்டனர். லோக் ஆயுக்தா போலீஸ் குழு, வாட்ச்மேன்களிடம், நாங்கள் கால்நடைத் துறையைச் சேர்ந்தவர்கள். 

பங்களாவில் பொருத்தப் பட்டிருக்கும் சோலார் பேனல்களைச் சோதனை செய்ய வந்திருக்கிறோம் எனத் தெரிவித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்திருக் கிறார்கள். 

ஹேமா மீனா அவர்களைத் தடுத்து, ஒரு தனி அறையில் அமர்த்தியிருக்கிறார். அப்போது திடீரென லோக் ஆயுக்தா காவல் அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கின்றனர்.

இந்தச் சோதனை குறித்துப் பேசிய லோக் ஆயுக்தா டி.எஸ்.பி சஞ்சய் சுக்லா, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகார் தொடர்பாக போபாலிலுள்ள பெண் உதவிப் பொறியாளர் வீட்டில் சோதனை நடத்தினோம். 

விவாகரத்து பெற்ற ஹேமா மீனா, மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்திலுள்ள சப்னா கிராமத்தில் வசிக்கிறார். அவருக்கு 2011-ல் ஒப்பந்த வேலை கிடைத்தது. 

தற்போது, அவர் MPPHC-ன் பொறுப்பு உதவிப் பொறியாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

அவர் போபால் அருகேயுள்ள பில்கிரியாவில் தன்னுடைய தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 20,000 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்ட 40 அறைகள் கொண்ட பங்களாவில் வசித்து வருகிறார். 

இதன் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. இது தவிர, பண்ணை வீட்டிலிருந்து பல லட்சம் மதிப்புள்ள பிட்புல், டோபர்மேன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட 

வெளிநாட்டு இன நாய்கள், ரூ.30 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டி, பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 60-70 மாடுகளும் மீட்கப்பட்டன.

நாய்களுக்கு உணவளிக்க ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள ரொட்டி தயாரிக்கும் இயந்திரம், இரண்டு லாரிகள், ஒரு டேங்கர் லாரி, ஒரு மஹிந்திரா தார் உட்பட 10 சொகுசு கார்களும் மீட்கப்பட்டன. 

ஹேமா மீனாவின் பங்களா முழுவதும் ஆடம்பரப் பொருள்கள் நிறைந்திருந்தன. 

அரசு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள அரசு உபகரணங்கள், லட்சக் கணக்கான மதிப்புள்ள விவசாய உபகரணங்கள், விலை உயர்ந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒருத்திக்கு ஒருத்தி என்றிலாமல்... யாரும் யாருடனும்.. இப்படி ஒரு உலகம் !

பண்ணை வீட்டின் அருகே ஒரு பால் பண்ணையும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. பங்களாவிலிருந்து சக பணியாளர்கள், குடும்ப உறுப்பினர் களுடன் உரையாட வாக்கி - டாக்கி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 

இந்த விவகாரத்தில் வேறு அதிகாரிகளின் தலையீடு இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவித்தி ருக்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)