யார் இந்த மஸாய்? கென்யா மற்றும் தான்சானியாவிற்கும் இடையில் தான் மஸாய் நாடோடிகள் வாழ்கிறார்கள். 

ஒருத்திக்கு ஒருத்தி என்றிலாமல்... யாரும் யாருடனும்.. இப்படி ஒரு உலகம் !

கென்யாவில் சுமாராக 800,000 பேரும், அதேயளவு தொகையினர் தான்சானியாவிலும் வசிப்பதாகச் சொல்லப் படுகின்றது. 

இவர்கள் பேசும் மொழி Maa. பலதார மணம் என்பது இவர்கள் கலாச்சாரத்தில் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது. 

மஸாய் கிராமங்கள் எல்லாமே இதே கதை தான். ஒருவனுக்கு வாழக்கைப் பட்டால், அவன் குழுமத்திலுள்ள அனைத்து ஆண்களுக்கும் படுக்கை விரிக்கும் நிலை பெண்ணுக்கு ஏற்படுகின்றது.

நாம் சமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் !

இவர்கள் சமூகத்தில் இது சர்வ சாதாரணம்...

ஒருத்திக்கு ஒருத்தி என்றிலாமல்... யாரும் யாருடனும்.. இப்படி ஒரு உலகம் !

வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்து விட்டால், தங்கள் படுக்கையை விருந்தாளிக்கு கொடுத்து விட்டு வெளியில் புருஷன் சென்று விடுவான். எந்த உலகத்திலும் இல்லாத புதுமையான விருந்தோம்பல் இது ! 

இந்த வழமை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்து விட்டாலும், இவர்கள் சமூகத்தில் , வந்தவன் விரும்பினால், இருந்தவன் மறுக்கவே முடியாது...

அடையாளங்களாகும் அணிகலன்கள்

ஒருத்திக்கு ஒருத்தி என்றிலாமல்... யாரும் யாருடனும்.. இப்படி ஒரு உலகம் !

அணியும் மணி மாலைகளே இவர்களின் அடையாளங்களாக இருப்பது, மஸாய் இனத்தவரின் கலாச்சார வியப்பு!. 

குழந்தை பிறந்ததும் மணிக்கட்டு, இடுப்பு போன்ற இடங்களில் மணிமாலையை சுற்றிக் கட்டி விடுவார்கள். உடல் பருப்பதை அல்லது மெலிவதை இது காட்டிக் கொடுக்கும். 

திருமணத்திற்கு தயாராக உள்ள பெண், இன்னொரு பெண்ணுடன் வாழக்கைப்பட்ட பெண், போராளிக்கு வாழ்க்கைப்பட்ட பெண் 

என்ற செய்திகளை இவர்கள் அணியும் மாலைகளின் நிறங்களும், வடிவங்களும் காட்டிக் கொடுத்து விடும். 

கெமிக்கல் ஏதும் இல்லாத அற்புதமான ஷேவிங் க்ரீம் வீட்டிலேயே செய்ய !

ஒரு போதுமே சந்தித்திராத ஒரு பெண் வந்தாலும், அவள் அணிந்துள்ள மணி மாலைகள் அவள் கதையைச் சொல்லி விடுகின்றன. இந்தப் பழக்க வழக்கஙகள் 19ஆம் நுாற்றாண்டில் வந்தவை என்கிறார்கள். 

செக் குடியரசிலிருந்து துளையிடப்பட்ட மணிகள் பல வடிவங்களில், வர்ணங்களில் தருவிக்க முடிந்ததால், இந்தப் புதுக் கலாச்சாரம் வேரூன்ற முடிந்திருகின்றது. 

இதற்கு முன்னைய காலகட்டத்தில், இங்குள்ள கொல்லர்கள், உலோகங்களில் செய்த பொருட்களையே இவர்கள் அடையாளத்திற்காக அணிந்து வந்திருக்கிறார்கள். 

திருமணமான பெண்கள் மட்டுமே அணியும் காதணிகள் என்றும் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு பொருள் உண்டு: 

உதாரணமாக நீலமானது நீரையும், கடவுளையும் சொர்க்கத்தையும் அடையாளப் படுத்துகிறது, பச்சை அமைதியையும் தாவரத்தையும் , சிகப்பு வீரத்தையும், போராளிகளையும் அடையாளப் படுத்துகின்றன.

வேட்டைப் பற்கள் வேண்டாமே

ஒருத்திக்கு ஒருத்தி என்றிலாமல்... யாரும் யாருடனும்.. இப்படி ஒரு உலகம் !

கூரிய கற்கள், மரம், எலும்புகளின் உதவி கொண்டு தங்கள் காது மடல்களை இவர்கள் துளைத்து பெரிதாக்கும் கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். 

காது மடலின் மேற்பகுதியில் சிறு துவாரமும், அடிப்பகுதியில் பெரிய துவாரம் ஏற்படுத்துவதும் இவர்கள் வழமை... 

அன்றைய காலத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி இருவருமே காது ஓட்டையை பெரிதாக்குவதில் தீவிரமாக இருந்து வந்துள்ளார்கள். 

(அகலமாக்கப்பட்ட துளைகள் அறிவு, கௌரவம் என்று இரண்டையும் வெளிப்படுத்து கின்றனவாம்) ஆனால் இன்றைய இளம் பெண்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.

சுவையான ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி?

சில வேளைகளில் பிள்ளைகளின் சிறுவயதில் அவர்களின் வேட்டைப் பற்கள் என்று சொல்லப்படும் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு விடுகின்றன. 

வாந்தியெடுத்தல், வயிற்றோட்டம் போன்ற உடல் கோளாறுகளை இதன் மூலம் தவிர்க்க முடியுமென இவர்கள் நம்புகிறார்கள்.

தலைமுடியை மழித்துக் கொண்டு விட்ட மணப்பெண்

ஒருத்திக்கு ஒருத்தி என்றிலாமல்... யாரும் யாருடனும்.. இப்படி ஒரு உலகம் !

திருமணச் சடங்கின் போது பெண்கள் தங்கள் தலைமுடியை மழித்துக் கொள்வது இன்னொரு வினோதமான வழமை! ஆண்களும் அப்படித் தான். மஸாய் போராளிகள் இதற்கு விதிவிலக்கு.

இவர்கள் கூந்தலைப் போல தலைமுடியை வளர்த்து மணிமாலைகளை பி்னனிக் கொள்கிறார்கள். மஸாய் போராளிகளின் துள்ளிக் குதிக்கும் நடனம் இங்கு பிரபல்யமானது. 

பாதிவட்டத்தில் நின்று கொண்டு, ஒருவர் ஒருவராக மையப் பகுதிக்கு பாய, உச்சஸ்தாயியில் ஏனையோர் பாடுவார்கள்.

பாரம்பரிய மஸாய் இசை தொடரும். கூப்பிட்ட குரலுக்கு பதில் கொடுப்பது போல namba என்று சொல்லப்படும், 

இவர்கள் பாடலும் ஆடலும் அமர்க்களப்படும். ஆட்டமும் பாட்டமுமாக இப்படி நகர்கின்றது ஒர் ஆபிரிக்க நாடோடி இனத்தவர் வாழ்வு..

சுவையான ஆலு சப்பாத்தி கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி?

துப்பும் கலாச்சாரம்

ஒருத்திக்கு ஒருத்தி என்றிலாமல்... யாரும் யாருடனும்.. இப்படி ஒரு உலகம் !

இன்னாருவர் முகத்தில் நாம் காறி உமிழந்தால் அது வெறுப்பின் உச்சம்.. அநாகரீகமானது. ஆனால் இங்கு இன்னொருவரை வணக்கம் சொல்லி வரவேற்கும் முறை தான் இது. 

தாம் ஒருவரிடமிருந்து பிரிந்து செல்லும் போதும் இதையே செய்கிறார்கள். எதையாவது வாங்க பேரம் பேசும் போது, எவருக்காவது வாழ்த்தும் போது, துப்புதலே கடைப்பிடிக்கப் படுகின்றது. 

பிறந்த பிள்ளையை வாழ்த்த அதன் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்த, கிடத்தப் பட்டிருக்கும் குழந்தை மீது எல்லாரும் வரிசையில் வந்து துப்புகிறார்கள்.

சுவையான மிளகு நண்டுக் குழம்பு செய்வது எப்படி?

துப்பிக் கெட்டவர்கள் என்று திட்ட ஆரம்பித்து விடாதீர்கள். இவர்கள் வாழ்த்துகிறார்கள்.

பி.கு இங்கு பிறந்த குழந்தை இறப்பு விகிதம் அதிகம் என்பதால், 3 மாதங்கள் கழித்தே பிள்ளைக்கு பெயரிடுகிறார்கள்