ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

0

இனிமேல் பைக்கில் கிளம்பும் போது லைசென்ஸ், ஆர்.சி புத்தகம், இன்ஷூரன்ஸ் இவற்றோடு ஹெல்மெட்டையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். 

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

எடுத்த ஹெல்மெட்டை தலையில் மாட்டிய பிறகே, பைக்கை ஸ்டார்ட் செய்யுங் கள். டேங்க்கில் தொடையிடுக்கில் வைத்துக் கொண்டோ, 

ரியர்வியூ மிரரில் சொருகிய படியோ ஹெல்மெட்டை வைத்துக் கொண்டு பயணிப்பது சட்டத்தை மட்டுமல்ல. உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஏமாற்றுவதற்குச் சமம்.

ஹெல்மெட் இல்லை யென்றால் லைசென்ஸ் பறிக்கப்படும். வாகனம் சீஸ் செய்யப்படும் போன்ற கடுமையான சட்ட திட்டத்தை யெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். 

ஹெல்மெட் போட்டா காது கேட்கவில்லை… வேர்த்துக் கொட்டுது பாஸ்… முடி போச்சுன்னா மொத்தமும் போச்சு என்று 

ஃபீலிங் டேக்கா விடுபவர்கள் அனைவருக்கும், ஹெல்மெட் விஷயத்தில் ஆப்ஷன் இருக்கிறது.

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

எல்லோருக்கும் பொதுவான பயம் இது தான். தலைவலி, நீர் கோர்த்தல், காது கேட்கவில்லை போன்ற உடல் உபாதைகள் வருவதாகச் சொல்லித் தான் பலர் ஹெல்மெட்டைத் தவிர்க்கின்றனர். 

ஆனால், இவை எல்லாமே பொய் இல்லை. பல நாள் துவைக்காத அழுக்குச் சட்டை போட்டால், எப்படி நம் உடம்பில் அரிப்பு ஏற்படுமோ, அது போலத் தான் ஹெல்மெட்டும். 

தினசரி துவைத்த காட்டன் கேப் அல்லது கர்ச்சீஃப்பைத் தலையில் கட்டிக்கொண்டு ஹெல்மெட் அணிந்தால், எந்தப் பிரச்னையும் வராது. 

சேவியர், ஆக்ஸர், வேகா போன்ற பிராண்டுகளில் ஹெல்மெட்டின் உள் பக்கத்தை அகற்றி, துவைத்துப் பயன்படுத்தலாம். 

துவைத்த இன்டீரியரை வெயிலில் அரை நாள் காய வைத்து அணிந்தால், தலையில் அரிப்பு ஏற்படுவது நிற்பதுடன், முடி உதிர்தலும் தடைப்படும். 

அகற்ற முடியாத உள்பக்கம் கொண்ட ஹெல்மெட் வாங்குபவர்கள், தினசரி கர்ச்சீப் அல்லது கேப் மாற்ற வேண்டும். 

மேலும், வாரம் ஒரு முறை ஹெல்மெட்டின் உள்பக்கம் வெயிலில் படுவது போல அரை மணி நேரம் வைக்க வேண்டும்.

ரொம்ப வேர்க்குதுங்க என்று சாக்கு போக்கு சொல் பவர்கள், வென்ட்டி லேஷன் உள்ள ஹெல்மெட்டுகள் பயன்படுத்தலாம். 

6 முதல் 8 ஏர் வென்ட் டுகள் உள்ள ஹெல்மெட்டுகள் இப்போது மார்க்கெட்டில் இருக்கின்றன. ஏர்வென்ட் என்றவுடன், குபுகுபுவென காற்று அடிக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம். 

உள்ளே வரும் சூடான காற்றை வெளியே தள்ளும் வசதி தான் இது. பைக் ஓட்டும் போது, மறக்காமல் ஹெல்மெட் வென்ட் திறந்திருக்கிறதா என்று கவனியுங்கள். 

அதே போல், மழை நேரங்களில் பைக் ஓட்டுப வர்களுக்கும் வசதியான ஹெல்மெட்டுகள் இருக்கின்றன. 

வேகா, ஸ்டட்ஸ் போன்ற பிராண்டுகளில், ஹெல்மெட்டின் முன் பக்கம் நீண்டுள்ள ஷேட் வழியாக மழைநீர் வடிந்து விடும் என்பதால், 

மழை நீர் நேராக வைஸரில் அறைந்து பார்வையை மறைப்பதை இது தவிர்க்கும். இவற்றுக்கு ரெயின் ரெசிஸ்ட் ஹெல்மெட் என்று பெயர்.

ஹெல்மெட்டுகளில் எத்தனை வகை உள்ளன? 

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

உலகம் முழுக்க ஃபுல்ஃபேஸ், ஓப்பன் ஃபேஸ், ஃப்ளிப்-அப், டூயல்பர்பஸ், த்ரீ குவார்ட்டர், மாடுலர், ஹாஃப், மோட்டோகிராஸ் என்று 8 வகைகள் ஹெல்மெட்டில் இருக்கின்றன. 

ஆனால், இந்தியாவில் புழக்கத்தில் இருப்பவை நான்கு வகைகள் தான். 

1. ஓப்பன் ஃபேஸ் 

அதாவது திறந்த வகை ஹெல்மெட். இதுதான் பேஸிக் மாடல். பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இதை லேடீஸ் ஹெல்மெட் என்கிறார்கள். 

ஆனால், இதை ஆண்களும் பயன் படுத்தலாம். வேகமாகப் பயணிக்காதவர்களுக்கு, இது பெஸ்ட். தலைப்பகுதி முழுவதையும் இது பாதுகாத்தாலும், முகத்துக்கு வைஸர் மட்டுமே பாதுகாப்பு.

2. ஃபுல் ஃபேஸ் 

பொதுவாக, நாம் அனைவரும் பயன்படுத்தும் ஹெல்மெட் இது. தாடை முதல் தலை முழுவதையும் பாது காக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 

பழைய ஃபுல் ஃபேஸ் மாடலில், ஏர் வென்ட்டுகள் இல்லாமல் இருந்தன. இப்போது வரும் அனைத்து மாடல் களிலும் ஏர் வென்ட்டுகள் இருப்பதால், வியர்க்குமோ என்று பயப்படத் தேவை இல்லை.

3. ஃப்ளிப் அப் 

இதுவும் ஃபுல் பேஸ் மாடல் தான். ஆனால், வெயிலில் முகம் வியர்க்கக் கூடாது என்று விரும்புபவர்கள், கீழே உள்ள பட்டனைப் பயன்படுத்தி, தாடைப் பகுதியை மேலே ஏற்றிக் கொள்ளலாம். 

இது, பார்ப்பதற்கு ஓரளவு ஓப்பன் ஃபேஸ் மாடல் போல இருக்கும். இதிலேயே ஆட்டோ கூலிங் ஆப்ஷனும் உண்டு. 

அதாவது, வெயிலில் செல்பவர்களுக்கு வைஸர் இல்லாமல், கண்களை மட்டும் கவர் செய்யுமாறு கூலிங் கிளாஸை இறக்கிக் கொள்ளலாம். 

இரவில் வெளிச்சமாகவும், பகலில் கூலிங்காகவும் இது இருப்பதால், ஓட்டுவதற்கு சுகானுபவமாக இருக்கும். ஆனால், ஆபத்து நேரத்தில் இதில் முழுப் பாதுகாப்பு கிடைக்காது.

4. மோட்டோ கிராஸ் 

இதுவும்  ஒரு வகையில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் தான். இதில் தாடைப் பகுதிக் கென்று சிறப்புப் பாதுகாப்பு இருக்கும். இதை ஸ்கெலிட்டன் ஹெல்மெட் என்றும் சொல்கிறார்கள். 

பைக் ஓட்டும் போது  கீழே விழ நேர்ந்தால், முகம் தரையில் அடிபட வாய்ப்பு இருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில், இந்த மோட்டோ கிராஸ் ஹெல்மெட் உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும். 

முன்பு டர்ட் பைக் ரேஸ்களில் தான் இதைப் பெரிதும் பயன்படுத்தினார்கள். இது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், இப்போதைய இளைஞர்களை இது மிகவும் கவரும். 

இதில், தலைக்கு மேலே சன்ஷேடு இருப்பதால், வெயில் & மழை உங்களை நேரடியாகத் தாக்காது.

ஹெல்மெட்டுகள் எப்படித் தயாராகின்றன?

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

இந்தியாவில், முழுக்க முழுக்க பாலி கார்பனேட் கலவையால் ஹெல் மெட்டுகள் தயாரிக்கப் படுகின்றன. அதாவது, பிளாஸ்டிக் மற்றும் தெர் மோகோல் சேர்ந்த கலவை தான் பாலிமர். 

தரமான ஹெல்மெட்டுகளில் இந்தத் தடிமனான பகுதிக்குக் கீழே 7 அடுக்குகளால் ஆன ஃபைபர் லேயர்கள் இருக்கும். இவை தரையில் மோதும் போது கிடைக்கும் அழுத்தத்தை ஈஸியாக்கும். 

லைட் வெயிட்டுக் கும், ஃப்ளெக்ஸி பிளிட்டிக்கும் பாலிமர் தான் பெஸ்ட். இதற்கு அடுத்த தரம், ஃபைபர் கிளாஸ் மெட்டீரியல். 

MT, AGV போன்ற இத்தாலியன் ஹெல்மெட்டுகளில் ஃபைபர் கிளாஸ் பயன்படுத்தப் படுகின்றன. இது, மோதும் போது ஏற்படும் வேகத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவை. 

உச்ச பட்சமாக, கார்பன் ஃபைபர் மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்படும் ஹெல்மெட்டுகள் தான் உலகத் தரம் வாய்ந்தவை. 

மோட்டோ ஜீபி, ஃபார்முலா-1 போன்ற ரேஸ்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டுகள் அனைத்தும் கார்பன் ஃபைபர் கொண்டு தயாரிக்கப் பட்டவை. 

சில கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகளின் எடை 1.3 கிலோ அளவு தான் இருக்கும். 

ஆனால், பாதுகாப்பில் இவை தான் பெஸ்ட். நம் நாட்டில் நெக்ஸ், AGV போன்ற கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகள் ரூ.28,000 முதல் கிடைக்கின்றன .

எப்படி வாங்க வேண்டும்?

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

ஹெல்மெட், நம் தலையோடு மிக இறுக்க மாகவும் இருக்கக் கூடாது. மிகத் தளர்வாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் போட்டுக் கொண்ட பிறகு, தலையை இடவலமாக அசைத்துப் பாருங்கள். 

லேசாக நகர்ந்தால், அது உங்களுக்குச் சரியான ஹெல்மெட். அதிகமாக நகர்ந்தால், மிகவும் தளர்வாக இருக்கிறது என்று பொருள். காது கேட்க வேண்டும். 

காற்று வர வேண்டும் என நீங்கள் தளர்வாக ஹெல்மெட் அணிந்தால், ஸ்பீடு பிரேக்கர்களில் ஹெல்மெட் திரும்ப வாய்ப்பு உண்டு. 

அதே போல், இறுக்கமாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் அணியும் போது, இரு பக்கமும் உள்ள ஸ்ட்ராப்புகளை நன்கு இழுத்து லாக் செய்ய வேண்டும். இது தான் ஹெல்மெட் அணிய வேண்டிய சரியான முறை.

ஹெல்மெட் ஏன் அணிய வேண்டும்?

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

இந்தியாவில் 45% விபத்துகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகளே! தலையில் மட்டும் அடிபட்டு மூளைச் சாவு ஏற்பட்டு வாழ்வை இழப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபம். 

ஹெல்மெட் அணிந்து பைக்கில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒருவர், தலைக்கு மேலே சாய்ந்து விழுந்த மின் கம்பத்தில் இருந்து உயிர் தப்பிய கதையும் உண்டு. 

எனவே, சாலை விபத்துகளில் மட்டுமின்றி, பொதுவாகவும் நம் அழகான முகம் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அவசியம்! ஹெல்மெட்டை சுமையாக நினைக்காதீர்கள். சுகமாக அனுபவியுங்கள்!

தரமான ஹெல்மெட்டை கண்டுபிடிப்பது எப்படி?

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதை விட ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். 

காஸ்ட்லியாக வாங்க விரும் புபவர்கள் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடு களைச் சேர்ந்த இம்போர்ட்டட் ஹெல்மெட்டுகள் வாங்கலாம். 

ஐரோப்பா பிராண்டுகளில் ECE குறியீடு இருக்கும். Economic Commissions for Europe என்பதுதான் இதன் சுருக்கம். இதை கவர்ன்மென்ட் ஆஃப் யுகே வெப்சைட்டில் செக் செய்து இதுக்கு ஹெல்மெட் போடாமலேயே இருக்க‍லாம்.

கொள்ளலாம். வட, தென் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஹெல்மெட்டுகளில் 

DOT (Department of Transportation ) எனும் கோட் நம்பரும் சர்ட்டிஃபிகேட்டும் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள். நம் ஊர்களில் DOT ஸ்டிக்கர்கள் டூப்ளிகேட்டாகக் கிடைக்கின்றன. 

ஆனால் ஒரிஜினல் ஹெல்மெட்களில் DOTகோடு, மோல்டு செய்யப் பட்டிருப்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். ஜெர்மன் தயாரிப்பில் SCHNELL என்ற குறியீட்டை வைத்துக் கண்டுபிடிக்கலாம். 

இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு ISI முத்திரை. இதிலும் நிறைய போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப் படுவதால், கவனம் தேவை. 

ISI முத்திரை உண்மை தானா என்பதைக் கண்டறிய, 044-22541442, 2254 1216 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். 

அல்லது www.bis.org.in என்ற இணைய தளத்தில், ISI மற்றும் CM/L நம்பரை வைத்துச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)