பாலிவுட் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். 
அம்மாவை இழந்தது என் வாழ்வின் மிகப்பெரிய துயரம்... ஜான்வி கபூர் !
நடிகை ஜான்வி கபூர் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை ஜான்வி கபூர் தன்னுடைய அம்மா பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, என் அம்மாவை இழந்தது என் வாழ்வின் மிகப்பெரிய துயரம். 

உனக்கு எல்லாமே எளிதில் கிடைக்கிறது நடக்கிறது என்று கேட்டு கேட்டு வளர்ந்த எனக்கு அதை யெல்லாம் நியாயப்படுத்தும் விதமாக மோசமான சம்பவம் நடந்து விட்டது. 

எனக்கு சோகமான சம்பவம் நடந்து விட்டது. இது எனக்கு தேவை தான். அது ஒரு வித்தியாசமான நிம்மதியை அளித்தது. 

எனக்கு கேமராவுக்கு முன்பு இருக்கும் போது என் அம்மாவின் அருகில் இருப்பது போன்று தோன்றும். என்னுடைய முதல் படத்தில் நான் சிறப்பாக நடிக்க வேண்டும் என என் அம்மா அடிக்கடி கூறுவார்.
என்னுடைய அம்மா இறப்பதற்கு முன்பாக நான் அவரிடம் கடைசியாக பேசியதும் என் முதல் படம் குறித்து தான். 
என்னுடைய அம்மா இறந்த பிறகு நான் பெரும்பாலும் ஷூட்டிங்கில் இருந்ததால் அப்போது நடந்த எதுவும் எனக்கு அவ்வளவாக நினைவில்லை. 

மேலும் என் அம்மா இறந்த பிறகு நான் பல காலமாக தெளிவாக இல்லை என்று உருக்கமாக கூறியுள்ளார்.