உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் நிறைந்த இறால் !

கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அனைத்தும் அடங்கியுள்ளன. இறால்களில் அதிகப் படியான கொழுப்பு உள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் நிறைந்த இறால் !
மேலும் இதில் கார்போ ஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும். இறாலில் உள்ள சத்துக்கள் கால்சியம், அயோடின், புரதச் சத்துக்கள் உள்ளன, 

சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷேன் வார்னே.. அறிந்திடாத சுவாரசிய தகவல் !

இந்த கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையை சேர்ந்ததால் இதனை உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

செலினியம் (Selenium), புரம் மற்றும் விட்டமின் பி12, D, இரும்புச் சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஒமேகா 3 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

கொலஸ்ட்ரால் - 43 Mg

சோடியம் - 49 Mg

புரதம் - 4.6 Mg

கால்சியம் - 8.6 Mg

பொட்டாசியம் - 40 Mg

நன்மைகள்

செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.

விட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிக ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த சோகை வருவதை தடுக்கிறது.

வாரம் இருமுறை இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், இதில் உள்ள இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சேர்ந்து எலும்புகளை வலுப்படுத்து கின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் நிறைந்த இறால் !
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதில் உள்ள மக்னீசியம் சத்து இரண்டாவது நீரிழிவு நோய் வருவதை தடுக்கின்றன என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 
கார்போ ஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான சக்தியை தருகின்றன. இதில் அயோடின் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.
Tags: