12-ம் வகுப்பு பொதுத்தேர்வு... தேர்வுகள் துறை சொன்ன ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் !

0
பொதுத்தேர்வில் தவறு செய்தால் மாணவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரங்களை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. 
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு... தேர்வுகள் துறை சொன்ன ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் !
வரும் திங்கட்கிழமை 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்க உள்ளன. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 3,000 பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன. 
ஆரஞ்சு பழங்களின் பயன்கள் !
இந்த நிலையில் தேர்வு அறையில் மாணவர்கள் தவறு செய்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசு தேர்வுகள் துறை அறிக்கை யொன்றை வெளியிட்டுள்ளது.
 
மாணவர்கள் காப்பி அடித்தால் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும். 

தேர்வறையில் துண்டு தாள்களை தன் வசம் வைத்திருந்தால் அந்த மாணவர் பருவத்தில் எழுதிய அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப் படுவதுடன் ஓராண்டு தடை.
 
ஆள் மாறாட்ட நடவடிக்கை செய்தால் பொது தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும். மேலும் பருவத்தில் எழுதிய தேர்வுகள் ரத்து செய்யப்படும். 
விடைத்தாள்களில் விடைகளைத் தவிர்த்து வேறு விஷயங்களை எழுதினால் குறிப்பிட்ட அந்த மாணவர் எழுதிய பாடத் தேர்வு ரத்து செய்யப்படும்.
ஆர்டர் செய்த உணவு கேன்சல் எதற்காக - சொமட்டோ பதிலடி !
விடைத்தாள்களை தேர்வு அறையில் இருந்து வெளியே அனுப்பினால் மூன்றாண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என 15 வகையான முறைகேடுகளை குறிப்பிட்டு அதற்குரிய தண்டனை விவரங்களை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)