400 ஆண்டுகளாக போர்ச்சுகல் மொழி பேசும் இந்திய கிராமம் !





400 ஆண்டுகளாக போர்ச்சுகல் மொழி பேசும் இந்திய கிராமம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
கோவா இந்தியாவிற்குள் இருந்தாலும் அது ஐரோப்பிய சாயலோடு இருக்கும். அங்குள்ள கலாச்சாரமும் வாழும் வெளிநாட்டினர் எண்ணிக்கையும் அதை அப்படி மாற்றி இருக்கும். 
400 ஆண்டுகளாக போர்ச்சுகல் மொழி பேசும் இந்திய கிராமம் !
ஆனால் ஐரோப்பியர்கள் நாட்டை விட்டுப் போய் இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் ஒரு இந்திய கிராமமே போர்ச்சுகல் மொழி பேசிக்கொண்டு இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?
 
மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் கோர்லாய் என்ற கிராமம் உள்ளது.
கோர்லாய் கிராமம் குண்டலிகா ஆற்றின் முகப்பில், ரெவ்தண்டாவில் அமைந்துள்ள ஒரு பெரிய போர்த்துகீசிய கோட்டையின் இடிபாடுகளுக்கு குறுக்கே அமைந்துள்ளது. 

கோவாவிற்கும் டாமனுக்கும் இடையில் அமைந்துள்ள கோர்லாய் கிறிஸ்தவர்கள் நிறைத்த கிராமம் ஆகும். இந்த கிராம மக்கள் போர்ச்சுகீசிய நடை கலந்த மராத்திய மொழியை தான் பேசி வருகின்றனர். 

தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து நாம் பேசுவதை போல அந்த ஊர் மக்கள் போர்ச்சுகீசிய மொழியையும் மராத்தியும் கலந்து ஒரு புதிய வலக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்தோ- போர்த்துகீசியத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிரியோல் மொழி தான் கோர்லாய் கிராமத்தைச் சுற்றியுள்ள 1,000 லுசோ-இந்திய கிறிஸ்தவர்களால் பேசப்படுகிறது. 

இந்த மொழி நடையை கிரியோல் போர்த்துகீசியம், கோர்லாய் போர்த்துகீசியம் அல்லது நௌ-லிங் என்றும் அழைக்கின்றனர்.
1505 இல் போர்த்துகீசியர்கள் கோரலாய்க்கு அருகிலுள்ள ஒரு முக்கிய வர்த்தக மையமான சௌலுக்கு வந்தனர். இந்த பகுதி 1318 முதல் முஸ்லீம் ஆட்சியின் கீழ் இருந்தது. 

பொட்டுக்கடலை ஓமப்பொடி செய்வது எப்படி?

போர்த்து கீசியர்களும் முஸ்லீம் ஆட்சியாளரும் நட்புறவைப் பேணி வந்தனர். ஆனால் கொஞ்ச காலத்தில் போர் வெடித்தது. 

அந்த நேரத்தில் 600 போர்த்துகீசிய ஆண்கள் சவுல் கோட்டைக்கு வெளியே வாழ்ந்த பூர்வீக பெண்களை திருமணம் செய்து கொண்டனர்.
 
1594 ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்கள் மாரோ பள்ளத்தாக்கில் உள்ள கோர்லாயுடன் கோட்டையைக் கைப்பற்றினர். 

1630 வாக்கில், அருகில் இருக்கும் மலையில் நோசா சென்ஹோரா டோ மார் 'அவர் லேடி ஆஃப் தி சீ' என்ற தேவாலயம் கட்டப்பட்டது. அதை சுற்றி ஒரு சிறிய கிறிஸ்தவ சமூகம் வளர்ந்தது. 

மற்ற இந்தியர்களும் கிறுத்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டனர். 1740 இல் போர்த்துகீசியர்கள் கோவாவிற்குச் செல்வதற்காக சௌல் மற்றும் மலையைக் கைவிட்டனர்.
 
போர்த்துகீசியர்கள் வெளியேறிய பிறகு, பல போர்ச்சுகீசிய கிறிஸ்தவர்கள் மற்ற போர்த்துகீசிய பிரதேசங்களுக்குச் சென்றனர். 
அதே சமயம் மராத்தியர்கள் அப்பகுதியைக் கைப்பற்றியதால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தேவாலயத்திற்கு அருகில் சென்றனர். 

இப்படி குடியேறிய போர்துகீசியர்களும் இந்தியர்களும் மத்திய காலகட்டத்தை சேர்ந்த போர்த்துகீசிய வார்த்தைகளோடு மராத்திய மொழியை கலந்து பேசத் தொடங்கினர்.
 
வார்த்தைகள் போர்ச்சுகீசியதாக இருந்தாலும் மராத்திய உச்சரிப்போடு நௌ-லிங் மொழி பேசப்படுகிறது. 

கொசுக்கள் நீர் மேல் நடப்பது எப்படி? தெரியுமா?

கோரலாய்காரர்கள் தங்கள் நௌ-லிங் மொழி பாடல்களை முக்கியமாக நாற்று நடும் போது, ​​ வயல்களில் வேலை செய்யும் போது, புல் வெட்டும் போது, ​​திருமண நிகழ்வுகளில், ஹல்டி விழாவின் போது பாடுகிறார்கள்.
 
நௌ-லிங் மொழி வெறும் பேச்சுவழக்கு மொழி மட்டுமே. அதற்கு எழுத்து வடிவம் இல்லாததால் அப்படியே வழக்கொழிந்து வருகிறது. 
400 ஆண்டுகளாக போர்ச்சுகல் மொழி பேசும் இந்திய கிராமம் !
அதே சமயம் கிராமத்தை தாண்டி மற்ற மக்களிடம் பேச மராத்திய மொழி மட்டுமே பயன்படும் என்பதால் நௌ-லிங் மொழியின் பயன்பாடு குறைந்து வருகிறது. 

கோர்லாய் கிராமத்தில் மராத்தி ஆட்சி மொழியாகவும் வணிக மொழியாகவும் உள்ளது.
 
மல்வானி மற்றும் கொங்கனி போன்ற பிற பேச்சு வழக்குகளைப் போலவே நெளலிங் எனப்படும் கோர்லாய் கிரியோல் போர்த்துகீசியம் ஒரு மொழியாக மரியாதை மற்றும் அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)