யூரிக் அமிலம் அதிகமாகி விட்டால் என்ன ஆகும்?





யூரிக் அமிலம் அதிகமாகி விட்டால் என்ன ஆகும்?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
யூரிக் அமிலம் என்பது ப்யூரைன் உடைவதால் உண்டாக்கப்பட்டு இரத்தத்தின் மூலம் சிறுநீரகத்தை அடைகிறது. சிறுநீர் கழிக்கும் போது உங்கள் உடலில் இருந்து சிறுநீரக அமிலம் வெளியேறுகிறது. 
யூரிக் அமிலம் அதிகமாகி விட்டால் என்ன ஆகும்?
மேலும் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்து வீரியமாக இருக்கும் போது கூட செல்களை உடைப்பதால் இது நிகழலாம். சில சமயங்களில் சிறுநீரக அமிலம் சிறுநீரகத்தின் வழியாக வெளியேறாமல் இரத்தத்தில் தங்கி விடுகிறது. 

இது அதிகரித்தால் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது. சில சமயங்களில் இது கீல் வாதத்தை ஏற்படுத்துகிறது. சிறுநீரக அமிலத்தை கட்டுபடுத்துவது மிகவும் முக்கியமானது.
 
இந்த மூட்டுவலி பிரச்சனை யூரிக் அமிலம் அதிகளவில் இரத்தத்தில் இருப்பதால் ஏற்படுகிறது. இந்த நிலையை எப்படி சரி செய்யலாம். 
வயதான பிறகு உங்க உணவுப் பழக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். இதற்கான அறிகுறி இளம் வயதில் இருந்தே கூட இருக்கக் கூடும். 

இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பின்னாட்களில் தீவிரமாக சிறுநீரகப் பிரச்சினைகளில் கூட கொண்டு போய் விடும்.
 
​மூட்டுவலி
 
வயதாகும் போது மூட்டுவலி பிரச்சனை என்பது பொதுவான ஒன்றாகும். வீட்டில் இருக்கும் மூட்டுவலி குறித்து அதிகம் வேதனைப்படுவது உண்டு. 

இந்த மாதிரியான மூட்டுவலி பிரச்சினைக்கு யூரிக் அமிலம் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த யூரிக் அமில பிரச்சனை குழந்தைக்கு கூட ஏற்படுமா என்ன? ஏன் இந்த யூரிக் அமில பிரச்சனை ஏற்படுகிறது இதைப்பற்றிய முழு தகவல்களையும் இங்கே அறிந்து கொள்வோம்.
 
​வயதானவர்களுக்கு எவ்வளவு ஆபத்து?
யூரிக் அமிலம் அதிகமாகி விட்டால் என்ன ஆகும்?
இந்த யூரிக் அமில தேக்கம் ஏற்படும் போது வயதானவர்களுக்கு கடுமையான மூட்டு வலி உண்டாகும். எனவே வயதானவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுப் பழக்கம் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேசுங்கள். 

அவர்கள் கூறும் உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. உணவு தான் இதற்கு முக்கிய காரணம் என்றால் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் இதை சரி செய்து கொள்ளலாம். 

ஒரு வேளை கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகத்தில் பிரச்சனை என்றால் சி. டி ஸ்கேன் மூலம் சிறுநீரக பரிசோதனை செய்வது நல்லது.
​என்ன நடக்கும்?
 
ஒரு வேளை இதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் என்ன நடக்கும். ஒரு வேளை இந்த யூரிக் அமில பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டால் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. 

இந்த பிரச்சினை மிக நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருக்கும் போது, யூரிக் அமிலம் மூட்டுகளில் அல்லது சிறுநீரகத்தில் ஒரு கல்லாக டெபாசிட் செய்யப்படுகிறது. 
இது கூர்மையான மற்றும் தாங்க முடியாத வலிக்கு வழிவகுக்கும் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படா விட்டால் சிறுநீரகத்தின் செயல்பாடும் தடைபடும்.
 
​வலி இருந்தால்?
 
மூட்டுகளில் சீரான வலி இருந்தால் மருத்துவர் சோதனைகளுக்கு செல்லுங்கள். புரத உணவைக் குறையுங்கள். 

அதே மாதிரி புரத மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது கூட மருத்துவரின் பரிந்துரை பேரில் எடுத்துக் கொள்ளுங்கள். இதய நோயாளிகள் இதற்கென்று தனி ஆலோசனைகளை பெறுங்கள்.
 
எனவே அவர் அளித்த விளக்கங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. தற்போது என் பெற்றோரை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்து சிகிச்சை பெற்று வருகிறோம். 

எனவே யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விடுபட மருத்துவர் கூறும் வழிமுறைகளை பின்பற்றுவது நம் ஆரோக்கியம் மேம்பட உதவியாக இருக்கும்.
இதைக் கட்டுபடுத்தும் வழிகள்...
யூரிக் அமிலம் அதிகமாகி விட்டால் என்ன ஆகும்?
நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அடங்கியுள்ள ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக யூரிக் அமிலம் கொண்ட உணவு என்றால் சுத்தமாக ப்யூரைன் இல்லாத உணவாகும். 

அதிகமாக உள்ள யூரிக் அமிலங்களை கட்டுப்படுத்தும் சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாமா?
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுதல்
 
ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நார்ச்சத்துக்கள் யூரிக் அமிலத்தை கட்டுபடுத்துகிறது. எனவே நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பாட்டில் எடுத்துக் கொள்வது நல்லது. 

கீரை, ஓட்ஸ், ப்ராக்கோலி போன்றவைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே அதனை உண்ண ஆரம்பித்து அதிகமாக உள்ள யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)