இந்தியாவில் காதலித்து இறந்து போன மகன் மற்றும் மகளுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். 
 
இறந்தவர்கள் சிலைக்கு திருமணம்... குஜராத்தில் வினோத நிகழ்வு !

இந்த சம்பவம் குஜராத் மாநிலம் தப்பி மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு இருந்த காதலர்கள் இருவர் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் ?

ஆனால் அதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்தியா முழுவதும் இது போன்ற பிரச்சனைகள் பல ஏற்படுகின்றன. 
 
இதற்கு பெரும்பாலும் வேற்று ஜாதி, வேற்று மதம், பொருளாதார அடிப்படை போன்ற முக்கியமான விஷயங்கள் காரணங்களாக உள்ளன. 
 
இதே போன்ற ஒரு பிரச்சனை இந்த கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகிய இருவருக்கும் நடந்துள்ளது.

இதனால் கடந்த ஆண்டு மிகவும் வேதனை அடைந்த அவர்கள் ஒன்றாக சேர்ந்து தற்கொலை செய்து கொண்டனர். 

மகன் மற்றும் மகளை இழந்த இரு வீட்டாரும் தங்களின் தவறை உணர்ந்து மிகவும் வேதனையில் இருந்துள்ளனர்.

ஏன் டவ் சோப் சிறந்தது என்று தெரியுமா?

தற்போது இரு வீட்டாரும் சேர்ந்து அவர்கள் இருவருக்கும் சிலை ஒன்றை செய்து அந்த சிலைக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார்கள். 
 
இந்த திருமணம் ஜனவரி 14 அன்று நடந்தது. இது தற்போது வைரலாக மாறியுள்ளது. பலர் இந்த காரணத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள்.