திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். திருமணம் செய்வது என்பது சுலபமான காரியம் அல்ல. அதற்கு பலரது உழைப்பு வேண்டும். மேலும் இந்தியாவில் திருமணம் என்பது பல சாங்கியம், சடங்குகள் நிறைந்தது.
மெட்ரோ ரயில் பிடித்து தன்னுடைய திருமணத்திற்கு சென்ற மணப்பெண் !

அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது நல்ல முகூர்த்த நேரம். மணமகன் மணமகளின் கழுத்தில் நல்ல முகூர்த்த நேரத்தில் தாலி கட்டுவது என்பது வழக்கம்.  

எலும்பு வலுவிழப்பு நோய் என்றால் என்ன?

அப்படி நல்ல நேரம் நெருங்கியதால் ட்ராபிக்கில் மாட்டிக் கொண்ட மணப்பெண் ஒருவர் மெட்ரோ ரயில் பிடித்து தன்னுடைய திருமணத்திற்கு சரியான நேரத்தில் சென்று திருமணம் செய்துள்ளார்.

பெங்களூரு என்பது டிராபிக்கிற்கு பெயர் போன ஒரு ஊர் ஆகும். முக்கிய நேரங்களில் சில கிலோமீட்டர்கள் கடக்கவே பல பணி நேரம் ஆகும். 
 
அப்படி ஒரு பெண் திருமண நாள் அன்று திருமண மண்டபத்திற்கு காரில் சென்றுள்ளார். ஆனால் அதிகப்படியான டிராபிக் காரணமாக கார் நெரிசலில் மாட்டிக் கொண்டது. 

முகூர்த்த நேரம் நெருங்குவதால் அந்த மணப்பெண் சாமர்த்தியமாக காரை விட்டு இறங்கி அருகில் இருந்த மெட்ரோ நிலையம் சென்று மெட்ரோ ரயில் பிடித்து தன்னுடைய திருமணத்திற்க்கு முகூர்த்த நேரம் முடிவதற்குள் சென்று விட்டார்.

காலாவதியான மருந்தை கண்டுபிடிப்பது !

அந்த பெண்ணின் சாமர்த்தியமான முடிவை பலர் பாராட்டுகிறார்கள். அந்த பெண் மெட்ரோ ரயிலில் சென்றதை மெட்ரோவில் பயணித்தவர்கள் மிகவும் ஆச்சர்யமாக பார்த்தனர். 
 
சில அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இந்த செய்தி இப்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.