ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்க்கும் நிச்சயதார்த்தம்?

0
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு ராதிகா மெர்ச்சண்ட் என்ற பெண்ணை நிச்சயம் செய்து வைத்துள்ளார்.
ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்க்கும் நிச்சயதார்த்தம்?

இவர்களின் நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள அம்பானியின் வீடான அன்டிலாவில் நடக்கவுள்ளது.

நிச்சயதார்த்தத்திற்கு முன்னதாக நடக்கும் மருதாணி வைக்கும் நிகழ்வு கடந்த ஜனவரி 18 அன்று நடந்தது. அந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாக பரவியது. 
 
அம்பானி வீட்டிற்கே மருமகளாக செல்லும் இந்த ராதிகா மெர்ச்சண்ட் யார்? அவரின் குடும்ப பிண்ணனி என்ன? இது போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

சாலையில் உள்ள ரோடு ரிப்ளெக்டர் எப்படி செயல்படுகின்றன?

கோடீஸ்வரரின் மகள்

முகேஷ் அம்பானியின் மருமகளாக மாறப்போகும் இந்த ராதிகா மெர்ச்சண்ட் Encore Healthcare எனும் மருத்துவம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை 
 
நடத்தி வரும் விரேன் மெர்ச்சண்ட் மற்றும் ஷைலா மெர்ச்சண்ட் அவர்களின் மூத்த மகள் ஆவார். இவருக்கு அஞ்சலி மெர்ச்சண்ட் என்ற சகோதரியும் உள்ளார்.

அமெரிக்காவில் கல்வி கற்றவர்

இவர் பள்ளிப்படிப்பை மும்பையில் முடித்து மேற்படிப்பிற்காக அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்து பட்டம் பெற்றுள்ளார். 
 
தற்போது 2017 ஆம் ஆண்டு முதல் தந்தையின் நிறுவனமான Encore HealthCare நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார். 
 
மேலும் கோட்ரேஜ், பிராமல் மற்றும் டாபர் குழுமத்தின் பின்புலத்தில் இயங்கும் சுற்றுலா நிறுவனமான Isprava குழுமத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

சுவையான வேர்க்கடலை கட்லெட் செய்வது எப்படி?

திறமையான தொழிலதிபர்
ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்க்கும் நிச்சயதார்த்தம்?

கடந்த 2017 இவர் தந்தையின் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்ததும் அந்த நிறுவனம் முன்பு இருந்ததை விட மிகப்பெரிய அளவு முன்னேற்றம் கண்டது. 

சொல்லப் போனால் இவர் தனது தேவைகளை தான் சம்பாதித்த பணத்திலேயே செய்து கொள்கிறார். இவருக்கென்று தனியாக ஒரு சொகுசு வீடு மற்றும் சொகுசு கார்கள் பலவற்றை சேர்த்து வைத்துள்ளார்.

ஆதார் அப்டேட்களுக்கு வீட்டில் உட்கார்ந்தே பதிவு செய்யலாம் !

பரதநாட்டியம் தெரிந்தவர்

இவர் ஒரு மிகவும் தேர்ந்த பரதநாட்டிய நிபுணர். இவர் பிரபல பரதநாட்டிய ஆசிரியரான பாவனா தக்கார் அவர்களிடம் இந்த நாட்டியத்தை பயின்றுள்ளார். 
 
இன்னும் சொல்லப் போனால் இவர் வெளிச்சத்திற்கு வந்ததே முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி ஆகிய இருவரும் இவருக்கு மும்பையில் உள்ள ஜியோ உலக அரங்கத்தில் அரங்கேற்றம் செய்து வைத்த பின்னரே ஆகும்.

சமூக செயற்பாட்டாளர்
 ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்க்கும் நிச்சயதார்த்தம்?

இவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் இவர் ஒரு சிறந்த சமூக செய்யபட்டாளர் ஆவார். இவர் பல தொண்டு நிறுவனங்களுக்கு பணம் வழங்கி பலருக்கு உதவி செய்து வருகிறார். 

வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !

மேலும் விலங்குகள் நலம் மற்றும் பாதுகாப்பு போன்ற குழுக்களில் சேவை செய்து வருகிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings