வாழ்க்கையின் மிகவும் கசப்பான உண்மை?

0

பணம் இல்லாத பட்சத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பராமரிப்பை நிறுத்தி விடுவார்கள். வாழ்க்கையில் பணம் முக்கியமானது.

வாழ்க்கையின் மிகவும் கசப்பான உண்மை?
பணம் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வளங்காது என்று கூறும் நபரை ஒரு போதும் நம்பாதீர்கள். உங்களுக்கு தேவை என்ற போது யாரும் உங்களுடன் நிற்க மாட்டார்கள்.

நீங்கள் சொந்தமாக போராடவும், வாழவும் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த நண்பனும் உங்களை உண்மையில் நேசிப்பதில்லை. மக்கள் தங்கள் முன்னுரிமைகள் மாறும் போது மாறி விடுவார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி... திருமண கமிட்மென்ட் பற்றி அதிர வைக்கும் ஆய்வு !

உங்கள் குடும்பத்தினர் மட்டுமே உங்களை மனதோடு நேசிப்பார்கள், மற்றவர்கள் அனைவரும் சுயநலவாதிகள்.

தங்கள் உறவினர்களை ஒரு போதும் நம்பாதீர்கள், அவர்கள் உங்களின் மேல் தீய நோக்கங்களைக் கொண்டவர்கள்.

உங்களின் வெற்றிகளைப் புகழ்வதை விட அவர்கள் உங்களுக்கு தேவையில்லாத அறிவுரைகளை வழங்கி உங்களை கீழிறக்க முயற்சி செய்வார்கள்.

ஒருவரின் தோற்றம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமானது. நீங்கள் அழகாக இருந்தால் வாழ்க்கையில் நிச்சயம் உங்களுக்கு சில பலன்கள் உண்டு. 

அழகு குறைந்தவர்கள் புத்திசாலியாக இருந்தாலும் விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. சமூகத்தில் போலி மக்கள் அதிக மதிப்பு உடையவர்கள்.

நீங்கள் எவ்வளவு போலியாக நடிக்கிரீர்களோ உங்களுக்கு அவ்வளவு அதிக நண்பர்கள் இருப்பார்கள். உங்கள் இரகசியங்களை உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லாதீர்கள்.

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

யாரும் உங்களின் நலன் கருத மாட்டார். அனைவரும் கிசுகிசு என்று உங்கள் முதுகின் பின்னால் பேசவும், சிரிக்கவும் தான் ஆர்வமாக காத்திருப்பர்.

ஒரு போதும் கடன் வாங்காதீர்கள். சரியான நேரத்தில் அவற்றை திருப்பித் தர முடியா விட்டால், உங்கள் வாழ்க்கை நரகமாகி விடும்.

ஒரு முட்டாள் நபருடன் விவாதித்து உங்கள் நேரத்தை ஒரு போதும் வீணாக்காதீர்கள்.

அவர்கள் இறுதியில் உங்களையே ஒரு முட்டாள் என்று நிரூபித்து விடுவர். அவன் தவறு என்று உங்களுக்குத் தெரிந்தாலும் சில நேரங்களில் அமைதியாக இருங்கள்.

மரணம்..., ஆம் மரணம் என்பது வாழ்க்கையின் கசப்பான உண்மை.

எல்லோரும் ஒரு நாள் இறக்கப் போகிறார்கள். எனவே உங்கள் குடும்பத்தை ஒரு போதும் அலச்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)