சீனாவில் உயிரிழந்த மாணவர் உடலை கொண்டு வர அமைச்சர் உறுதி !

0

சீனாவில் உயிரிழந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவரின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி அளித்துள்ளார். 

சீனாவில் உயிரிழந்த மாணவர் உடலை கொண்டு வர அமைச்சர் உறுதி !
புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த சையது அபுஹசன் சாதலியின் மகன் ஷேக் அப்துல்லா, இவருக்கு வயது 22. 

இவர் சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள சிசிஹார் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் (Qiqihar Medical University) எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். 

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? #DrinkWaterDuringMeals

2017ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பில் ஷேக் சேர்ந்தார். சீனாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது இந்தியாவுக்குத் திரும்பினார். 

பின்பு புதுக்கோட்டையில் இருந்தபடியே, ஆன்லைன் மூலம் மருத்துவப் படிப்பை தொடர்ந்தார்.

படிப்பு முடிவடைந்த நிலையில், இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காகவும், சான்றிதழைப் பெறுவதற்காகவும் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி சீனாவுக்குச் சென்றார் ஷேக் அப்துல்லா. 

சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஷேக் அப்துல்லா அங்கு தனிமைப்படுத்தி வைக்கப் பட்டுள்ளார். 

எட்டு நாட்கள் தனிமைப் படுத்தப்பட்ட பிறகு அவர் தனது பல்கலைக் கழகத்திற்கு சென்ற நிலையில் அவரது உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளது. 

இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் ஷேக் அப்துல்லா அனுமதிக்கப் பட்டார். 

உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டார். இந்த தகவல் இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப் பட்டது.

சுவையான அன்னாசிப்பழ ஜாம் செய்வது எப்படி? #pineapplejam

இன்னிலையில் உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 466 வது கந்தூரி விழாவில் சிறுப்பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். 

தொடர்ந்து ஆயிரம் பேருக்கு பிரியாணி பொட்டலங்களை அன்னதானமாக வழங்கினார். 

பின்னர் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு சென்று மாதா சுருபத்திற்கு மாலை வழங்கிய‌  மெழுகுவர்த்தி ஏந்தி தனது  குடும்பத்துடன் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து காரைக்கால் அடுத்துள்ள  திருநள்ளார் சனீஸ்வரர்  பகவான் ஆலயத்திற்கும் சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். 

மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மும்மதத்தினைச் சேர்ந்த ஆலயத்திற்கும் சென்று  அமைச்சர் வழிபாட்டு மேற்கொண்டது  பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
டான்சில் தொற்று வரக்காரணமும், தடுக்கும் முறையும் !

நாகையில் உள்ள நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 

வெளிநாடுகளில் உயிரிழந்த 268 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளதாகக் கூறினார். 

வெளி நாடுகளுக்கு செல்வோர், அயலக தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்து சட்டத்திற்கு உட்பட்டு பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டையில் இருந்து சீனாவிற்கு சென்ற மருத்துவர் ஷேக் அப்துல்லா உயிரிழந்த நிலையில், அவர் பணிபுரிந்த நிறுவனம் மூலம் உடலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

மேலும், ஷேக் அப்துல்லாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உதவிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)