பசை இல்லாமல் ஒட்டும் வெல்க்ரோ.. எப்படி வேலை செய்கிறது?

0

மனித நாகரீகத்தில் ஜிப் கண்டுபிடித்த அதே காலத்திலேயே கண்டுபிடித்த மற்றொரு உபயோகமான கண்டுபிடிப்பு தான் வெல்க்ரோ. 

பசை இல்லாமல் ஒட்டும் வெல்க்ரோ.. எப்படி வேலை செய்கிறது?
துணி, ஷு, செருப்பு, திரைச்சீலை, கடிகாரப் பட்டை, கையுறை, பை போன்றவற்றில் பசை இல்லாமல் ஒட்டுவதற்கு வெல்க்ரோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஒரு பக்கம் இருக்கும் கொக்கிகளையும் இன்னொரு பக்கம் இருக்கும் இழைகளையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கும் போது இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறது. இது தான் வெல்க்ரோவின் எளிய நுட்பம். 

இதை ஜிப் இல்லாத ஜிப் என்றும் அழைக்கிறார்கள். ஜிப்பை போன்ற இரண்டு வேறு வேறு பகுதிகளை ஒன்றாக சேர்ப்பதற்கு மற்றும் இலகுவாக பிரிப்பதற்கு கண்டுபிடித்த ஒன்று.

அருமையான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் புரூட் கேக் செய்வது எப்படி?

இது ஏறக்குறைய வாட்ச், செருப்பு, பேக்குகள், கைப்பைகள் ஆகியவற்றில் இருந்து துணிமணிகள் வரையிலும் கூட பயன்படுத்தப் படுகிறது. 1948-ம் ஆண்டு பொறியாளரும் மலையேற்ற வீரருமான ஜார்ஜ் டி மெஸ்ட்ரல் தன் நாயுடன் மலையேறினார்.

வீட்டுக்குத் திரும்பிய பிறகு அவரது உடையிலும் நாயின் வாலிலும் ஆடையொட்டிச் செடியின் காய்கள் ஒட்டியிருப்பதைக் கண்டார். மெதுவாக ஒவ்வொன்றையும் நீக்கினார். 

அப்போது தான் இந்தக் காய்கள் எப்படி உடையிலும் நாயின் வாலிலும் ஒட்டிக் கொள்கின்றன என்று ஆராய்ச்சியில் இறங்கினார். காயின் மேலிருந்த முட்கள் தான் மென்மையான துணியில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தார். 

பசை இல்லாமல் ஒட்டும் வெல்க்ரோ.. எப்படி வேலை செய்கிறது?

மென்மையான இழைகளில் கொக்கிகள் மாட்டிக் கொண்டால் அவை இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும் என்ற முடிவுக்கு வந்தார். இந்த நுட்பத்தை வைத்து எளிமையாக பிரித்துச் சேர்க்கும் ஒரு பொருளைக் கண்டுபிடிக்க முடிவு செய்தார்.

தன்னுடைய கண்டுபிடிப்பைச் செயல் படுத்துவதற்காக பிரான்ஸுக்குச் சென்றார். அங்கிருந்த நெசவாளர்கள் இப்படிப் பசை இல்லாமல் ஒட்டும் பொருளை உருவாக்க வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டனர். 

பட்டு நெசவாளர் ஒருவர் மெஸ்ட்ரலுக்கு உதவ முன் வந்தார். அவர் கொடுத்த பஞ்சு இழைகளில் கொக்கிகள் ஒட்டிக் கொண்டன. அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. 

உங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள் !

கொக்கிகளும் இழைகளும் பிரிந்து விட்டன. பலவித முயற்சிகளுக்குப் பிறகு, நைலான் இழைகளைக் கொண்டு பரிசோதனைகளைச் செய்தார். 

அது வெற்றியைத் தேடித் தந்தது. என்றாலும் பெருமளவில் வெல்க்ரோவை உருவாக்குவதற்கு மேலும் 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. 

1955-ம் ஆண்டு தன்னுடைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெற்றார் மெஸ்ட்ரல். ஆரம்பத்தில் வெல்க்ரோவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. 

  • போர்ச்சுகலில் இருந்து வியட்நாம் வரை நாம் ரயிலிலே சென்று விடலாம். இதுதான் உலகின் நீண்ட ரயில் பயணம் ஆகும்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் வெல்க்ரோவைப் பயன்படுத்த ஆரம்பித்தது. 1968-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய நிறுவனங்கள் வெல்க்ரோவைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தன. 

பசை இல்லாமல் ஒட்டும் வெல்க்ரோ.. எப்படி வேலை செய்கிறது?
1980-ம் ஆண்டில் சர்வதேச ஷு நிறுவனங்களான பியுமா, அடிடாஸ், ரீபோக் போன்றவை குழந்தைகளுக்கான ஷுக்களில் வெல்க்ரோவைப் பயன்படுத்தின.

வெல்க்ரோ பயன்பாடு அதிகரித்த போது, கொக்கி – இழைக்கான காப்புரிமை முடிந்து விட்டது. இதனால் பலரும் வெல்க்ரோவை குறைந்த விலையில் குறைந்த தரத்தில் உருவாக்க ஆரம்பித்தனர். 

வெல்க்ரோ தன்னுடைய பெயரையும் தரத்தையும் நிலைநாட்டப் போராடிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் உலகம் முழுவதும் மலிவு விலை வெல்க்ரோ பரவி விட்டது.

நீங்கள் அணியும் இந்த பிராக்கள் எந்த உடைக்கும் பொருந்தும் !

வெல்வெட் என்ற இழைகளில் இருந்தும் க்ரோசே என்ற கம்பிகளில் இருந்தும் வெல்க்ரோ என்ற பெயர் உருவானது. 

இன்று 159 நாடுகளில் விண்வெளி உடைகளில் இருந்து செயற்கை இதயம் வரை சுமார் 300 பொருட்களில் வெல்க்ரோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

கொக்கிகள் எந்த அளவுக்கு இழைகளைப் பற்றிக் கொண்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து வெல்க்ரோவின் வலிமை அதிகரிக்கும்.

இது எப்படி வேலை செய்கிறது?

பசை இல்லாமல் ஒட்டும் வெல்க்ரோ.. எப்படி வேலை செய்கிறது?

நன்கு பூட்டப்பட்ட வளையங்கள் (CLOSED LOOP) ஒரு பக்கத்திலும், அதில் இலகுவாக பற்றிக் கொள்ளும் படியாக கழுகு நகங்கள் மற்றும் புலி நகங்கள் போல வளைவான அமைப்பு ஒரு பக்கத்திலுமாக பொருத்தப் பட்டுள்ளது.

இதனை கொக்கி அல்லது ஹூக் (HOOK) என்கின்றோம். இவற்றை கொண்டு ஒட்டும் பாகங்கள் நகங்கள் போல இருக்கும் பகுதியில் வளையங்கள் உள்ளே புதைந்து கொள்கின்றன.

ஒரு மாதம் காபி, டீ யை தவிர்ப்பதால் ஏற்படும் மாற்றங்கள் !

அதாவது எளிதாக விலக்கி வெளியே வர இயலாதபடி, சிறிது கஷ்டப்பட்டு இழுத்தோமானால் அந்த வளையத்தை விலக்கிக் கொண்டு குளோஸ்டு லூப் பிரித்து விட்டு வெளியே வந்து விடும்.

சமீப காலமாக விளம்பரங்களில் காண்பிக்கப்படும் ஒரு பேனாவும் கூட இதே வகை தான். இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் சமயம் ஒரு பெண் குழந்தை ஒன்று பேனா கேட்கும்.

அப்போது ஆண் குழந்தை மூடப்பட்டுள்ள நோட்டுப் புத்தகத்தில் சற்று உதறி வெளியே வரும் படியான பேனாவும் இதே வகை தான். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings