பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் அவதியடைந்து வருகின்றனர். 

பாகிஸ்தானில் பிளாஸ்டிக் பையில் LPG கேஸ்.. ஆபத்தில் மக்கள் !
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் மக்களுக்கு உரிய நேரத்தில் எரிவாயு கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில், சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கு மக்கள் செய்யும் ரிஸ்க்கான செயல்களைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளி வந்துள்ளன.

FASTag எப்படி வாங்குவது? எவ்வளவு கட்டணம்?

சரிந்து வரும் பொருளாதாரத்தின் விளைவாக,  பாகிஸ்தானில் காஸ் சிலிண்டர் உற்பத்தி என்பது கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. 

சிலிண்டர் இல்லாமல் காஸ் பெற வேண்டும் என்பதற்காக  வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், உள்ளூர் வாசிகள் சமையல் எரிவாயுவை சேமிக்க பெரிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பெரிய அளவிலான பிளாஸ்டிக் பைகளில்  3 அல்லது 4 கிலோ சமையல் எரிவாயுவை நிரப்ப சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது. 

நிரப்பிய பைகளின் முகப்புகளை வால்வு பொருத்தி இறுக்கமாக மூடிக்கொண்டு எடுத்துச் செல்கின்றனர்.

இப்படியே சாலையில் எடுத்துச் செல்வது வெடிகுண்டை கையில் வைத்திருப்பதற்கு சமம் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

கொண்டு செல்லும் சமையல் எரிவாயு பைகளை மின்சாரத்தில் இயங்கக் கூடிய சிறிய உறிஞ்சு குழாயை பொருத்தி சமையல் செய்ய பயன்படுத்துகின்றனர்.

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. 

பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை கூட வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர். 

ஆக்சிஜன், தொழிற்சாலைகளில் எப்படி தயாரிக்கப்படுகிறது? - ஆக்சிஜன் தட்டுப்பாடு !

அதோடு பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை என்பது பன்மடங்கு  உயர்ந்துள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள் அன்றாட வாழ்வை நடத்துவதற்கே போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பிளாஸ்டிக் பைகளால் காயமடைந்து 8 நோயாளிகள் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தின் தீக்காய பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சிலிண்டர்களின் இருப்பு குறைந்ததால், விற்பனையாளர்கள் சப்ளையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

காரக் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு 2007 ஆம் ஆண்டு முதல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செடிகளை எப்போதும் தொட்டு விடாதீர்கள் - மரணம் கூட நேரலாம் !

ஹாங்கு நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எரிவாயு இணைப்பு இல்லை. எரிவாயுவை எடுத்துச் செல்லும் குழாய் உடைந்ததில் இருந்து சரி செய்யப்படாமல் உள்ளது.