ஒரு காலத்தில் விமானத்தில் பயணம் செய்வது என்பது மிகப்பெரிய விஷயமாக இருந்தது. விமானத்தை பார்ப்பதே பெரும் பாலானோருக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது.

83 வயது பாட்டியின் விமானப் பயணம்... இன்ஸ்டாகிராமில் வைரல் !
ஆனால் இப்போது ஓரளவு விமானப் பயணம் என்பது சமானியர்களுக்கும் சாத்தியமானதாக மாறி உள்ளது. 

பல்வேறு நிறுவனங்கள் முன்பதிவு அடிப்படையில் விமான டிக்கெட் கட்டணத்தை குறைத்து அடிக்கடி சலுகை வழங்கி வருகின்றனர். 

சிப்பிக்குள் முத்து எப்படி உருவாகிறது? தெரியுமா?

இதனால் விருப்பம் உடையவர்கள் குறைந்த செலவில் திட்டமிட்டு தாங்கள் விரும்பும் இடத்திற்கு விமானத்தில் சென்று வருகின்றனர்.

ஆனால் வயதானவர்களுக்கு ஆசை இருந்தாலும் உரிய வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.

இதனிடையே 83 வயது நிரம்பிய பாட்டி ஒருவர் தனது முதல் விமான பயணத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததை தொடர்ந்து அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன் திபடிமம்மி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 83 வயது பாட்டியின் முதல் விமான பயணம் குறித்த வீடியோ பதிவேற்றப் பட்டது. 

அந்த வீடியோவை பதிவிட்டுள்ள பக்கத்தில் படி மம்மி அழைப்பவருக்கு இனிமையான, புத்தி சாலித்தனமான, மற்றும் அன்பான பாட்டி என்று விவரிக்கப் பட்டுள்ளது. 

அந்த வீடியோவில் பாட்டி வீட்டில் இருந்து வெளியேறி போது கை காட்டுவதாகவும் பின்னர் விமான நிலையத்தில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளது. 

இறுதியில் 83 வயது பாட்டி தனது பேத்தியின் திருமணத்திற்காக தனது முதல் விமான பயணத்தை மேற்கொண்டது தெரிய வருகிறது.

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 6.7 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை பார்த்தவர்கள் டன் கணக்கில் லைக்கள் மற்றும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த ஒருவர் எனது பிஜி 79 வயதில் லண்டனுக்கு சென்று தனது உறவினர்களுடன் இருப்பதற்காக முதல் விமான பயணத்தை மேற்கொண்டார் என்று கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் ஒருவர் தனது பாட்டி 88 வயதில் தனது முதல் விமான பயணத்தை மேற்கொண்டார். அது எப்படி இருந்தது என்று கேட்ட போது அது கப்பல் போன் இருந்தது. 

விமான பணிப்பெண்களை அவர்களின் மிகுந்த கண்ணியமான பேச்சு மற்றும் அழகாக இருப்பதாக பாராட்டினர் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த வீடியோவை பார்த்த இன்னொருவர் இது மிகவும் மனதுக்கு இதமாக இருக்கிறது. படி மம்மிக்கு நிறை அன்பு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவர் இந்த வீடியோவை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தாத்தா பாட்டி ஒரு வரம். அவர்கள் முழுமையான மகிழ்ச்சிடன் இருக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.