பாம்பின் விஷம் என்பதை விட பாம்பின் நஞ்சு (venom) என்பதே சரியான பதம். பாம்பின் நஞ்சு அவ்வளவு எளிதாக நம் கைக்கு கிடைக்க கூடியது அல்ல.
இது எதுக்கு அவ்வளவு விலைமதிக்கத் தக்கது என்கிறீர்களா..... பல விலை மதிப்பற்ற மருந்துகள் தயாரிக்க பாம்பின் நஞ்சு பயன்படுகிறது.
ஏன் சொல்லப்போனால் பாம்பு கடிக்கு விஷம் முறிவு மருந்தாக பாம்பின் நஞ்சு தான் (venom) பயன்படுத்தப்படுகிறது.
பாம்புகள் தம் விஷத்தை உமிழ்நீர்ச் சுரப்பி மூலம் தயாரித்துக் கொள்கின்றன. சாதாரணமாக எச்சிலில் உணவை செரிமானம் செய்வதற்கான என்சைம்கள் மட்டுமே இருக்கும்.
83 வயது பாட்டியின் விமானப் பயணம்... இன்ஸ்டாகிராமில் வைரல் !
ஆனால் பாம்புகளின் உமிழ் நீரில் நச்சு என்சைம்கள் இலவச இணைப்பு. ராஜ நாகத்தின் உமிழ் நீரிலுள்ள புரத நச்சு பிற உயிரிகளின் புரதத்தை விட பெருமளவு மாறுபட்டது.
இதனால் இரையை செரிக்கும் போது பாம்பின் உடலில் ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, ரத்தம் உறைதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படுவதில்லை.