தமிழகத்தில் சமீப காலமாக சைபர் இணைய குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்களே உஷார். 

வேகமாக பரவும் புதுவித மோசடி... பொதுமக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திர பாபு !

குறிப்பாக இல்லத்தரசிகள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த இணைய மோசடி வேலைகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் 

சாப்பிட்ட உடன் செய்ய கூடாத செயல்கள்?

என்று தொடர்ந்து காவல்துறை அறிவுறுத்தி வரும் நிலையில் தற்போது தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்து இருக்கும் ஒரு அறிவுரை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறைகளில் ஆன்லைன் கட்டண முறை அனைவருக்கும் மிகவும் எளிய செயல்பாடுகளை கொடுத்துள்ளது. 

அதாவது இருக்கும் இடத்தில் இருந்தே பணம் செலுத்தும் முறையால் அதிக அளவு நேரம் மிச்சம் என்று நினைப்பதனால் இந்த முறையை அதிகம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதற்காக மின்சாரத் துறையின் இணையதளம், மற்றும் நம்பகமான சில மொபைல் அப்ளிகேஷன்கள் இருக்கிறது. 

இதனை தவறாக பயன்படுத்தும் சில சைபர் குற்றவாளிகள், வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக மின்சார கட்டணம் செலுத்தினால் 

சூப்பரான புளி மீன் குழம்பு செய்வது எப்படி?

ஒரு குறிப்பிட்ட அளவு தொகை பணத்தை மிச்சப் படுத்தலாம் என்று செய்திகள் அனுப்பி மக்களிடம் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து இருக்கிறார். 

மேலும் அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்.