உடைந்த எலும்பு எப்படி ஒட்டுகிறது? எலும்பு முறிவுக்கு முதல் உதவிகள் என்ன?

0

விபத்துகளின் போதும், வழுக்கி விழும் போதும், விளையாட்டுகளின் போதும் பல சமயங்களில் எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன. இவை தவிர ஆஸ்டியோ பொராசிஸ் போன்ற நோய்கள் காரணமாகவும் எலும்பு முறிவுகள் ஏற்படலாம். 

உடைந்த எலும்பு எப்படி ஒட்டுகிறது? எலும்பு முறிவுக்கு முதல் உதவிகள் என்ன?

எலும்பு முறிவுகளைப் பற்றியும் மேற்கொள்ள வேண்டிய முதல் உதவிகள், பற்றியும் கோவை எலும்பு சிகிச்சை நிபுணர் சி.ஜே.அருண் ராஜா பேசினார்.

பொதுவாக ஓர் எலும்பின் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்படும் போது எலும்பு முறிவு ஏற்படுகிறது. 

வீட்டில், தோட்டத்தில் எலி தொல்லையா? இதை ட்ரை பண்ணுங்க... எலி ஓடி விடும் !

தோல் கிழிந்து காயத்துடன் ஏற்படும் எலும்பு முறிவு, தோல் கிழியாமல் ஏற்படுவது, எலும்புடன் இதர உறுப்புக்களும் சேதம் அடைவது, குழந்தைகளின் மென்மையான எலும்புகளில் ஏற்படும் முறிவுகள் எனப் பல வகைகள் உள்ளன. 

அழுத்தத்தின் காரணமாக  எலும்பில் விரிசல் ஏற்படுவதை ஹேர்லைன் ஃப்ராக்சர் என்பார்கள். 

அறுவை சிகிச்சை இல்லாமலேயே பெரும்பாலும் மாவுக் கட்டு போட்டு ஹேர்லைன் ஃப்ராக்சரால் பாதிக்கப்பட்ட எலும்பை, பழையபடி கூட வைக்கலாம். 

ஆனால், இளையவர்களை விட வயதானவர்களுக்கு எலும்பு கூடுவதற்கு அதிகக் காலம் பிடிக்கும். இதனால் முதியவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எலும்பு முறிந்திருக்கிறது என்பதற்கு என்ன அறிகுறிகள்?

கடுமையான வலி, பாதிக்கப்பட்ட பகுதியை அசைப்பதில் சிரமம், வீக்கம், ரத்தக் கசிவு, உறுப்பு சிதைந்திருப்பது அல்லது 

அசாதாரணமாக வளைந்திருப்பது, தோலைக் கிழித்துக் கொண்டு எலும்பு வெளியே நீட்டி நிற்பது போன்றவற்றை அறிகுறிகளாகச் சொல்லலாம். 

மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது?

பாதிக்கப்பட்ட கை அல்லது காலில் விரல்கள் மரத்துப் போயும் நீல நிறமாக இருப்பதும் எலும்பு முறிவுக்கான அறிகுறிகள் தான். பொருந்தி இருக்கும் மூட்டில் இருந்து ஓர் எலும்பு விலகுவதும் எலும்பு முறிவைப் போன்றது தான்.

சுளுக்கு, எலும்பு முறிவு... இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

சுளுக்கு ஏற்படும் போது இருக்கும் வலியை விடப் பன்மடங்கு அதிகமான வலியை, எலும்பு முறிவின் போது உணர முடியும். ஆனாலும், ஒரு மருத்துவராலேயே இரண்டையும் துல்லியமாகப் பிரித்து இனம் காண இயலும்.

எலும்பு முறிவுக்கு என்ன முதல் உதவிகள்?

உடைந்த எலும்பு எப்படி ஒட்டுகிறது? எலும்பு முறிவுக்கு முதல் உதவிகள் என்ன?

முறிந்த விதத்துக்கு ஏற்பவும் எந்த எலும்பு முறிந்திருக்கிறது என்பதைப் பொருத்தும் செய்ய வேண்டிய முதல் உதவியும் மாறுபடும். இதைச் சுருக்கமாக ரைஸ் (RICE - Rest, Ice, Compression and Elevation ) என்று சொல்வார்கள்.

அதாவது, எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவரை முதலில் சரியான கோணத்தில் படுக்கவைக்க வேண்டும் இது ரெஸ்ட். 

சுவையான செட்டிநாடு வெஜிடபிள் குருமா செய்வது எப்படி?

அவரது வீக்கத்தையும் வலியையும் குறைக்கும் விதமாக ஐஸ் கட்டியைப் பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கலாம். ஐஸை நேரடியாகத் தோல் மீது வைக்காமல் ஒரு துணியில் சுற்றி வைப்பது நல்லது.

அடுத்ததாக கம்ப்ரஷன். மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே உடைந்த இடத்தில் சுத்தமான துணியைக் கொண்டு கட்டு போட வேண்டும்.

உடைந்த எலும்புகள் மீண்டும் விலகி விடாமல் இருக்க அதைச் சற்றே உயர்வாக வைப்பதை எலிவேஷன் என்று குறிப்பிடுவோம்.

ஒருவருக்கு அடிபட்ட இடத்தில் காயத்தின் மேல் இருக்கும் துணியை வெட்டி எடுக்கலாம். ஆனால், கழுவக் கூடாது. தொடவும் முயற்சிக்க வேண்டாம். 

எலும்பு முறிவுடன் காயமும் ஏற்பட்டிருந்தால், சுத்தமான துணியால் கட்டுப்போட்டு முதலில் ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். மூச்சு சீராக வருகிறதா என்று பார்க்க வேண்டும். 

பாதிக்கப்பட்ட நபரை ஆசுவாசப் படுத்த வேண்டும். வேறு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். காயம் பட்ட இடத்தை அசைக்கக் கூடாது. 

கையில் முறிவு ஏற்பட்டிருந்தால், 90 டிகிரி கோணத்தில் நெஞ்சோடு சேர்த்துக் கையை அசையாமல் வைத்திருக்கச் சொல்ல வேண்டும். 

சுவையான செட்டிநாடு இட்லி பொடி செய்வது எப்படி?

பாதிக்கப்பட்ட நபர் மயங்கி இருந்தாலோ அல்லது மூச்சிரைப்புடன் இருந்தாலோ, தலை, கீழ் நோக்கி இருக்குமாறு மெள்ளப் படுக்க வைக்கலாம். கழுத்தைத் திருப்பக் கூடாது.

உடைந்த எலும்பு எப்படி ஒன்றாக ஒட்டுகிறது?

உடைந்த எலும்பு துண்டுகளை ஒன்றோடொன்று இணைத்து அசையாமல் கட்டும் பொழுது இரண்டு பக்கமும் இருந்து இரத்தக் குழாய்கள் வளர்ந்து அதைச்சற்றி ஸ்கேலஸ் என்னும் அமைப்பு தோன்றும் .

இவ்வமைப்பு இரண்டு துண்டுகளையும் தாற்காலிகமாக இணைத்து வைத்திருக்கும் நாளடைவில் இந்த இணைப்பு எலும்பாக மாறி ஒரே எலும்பாக உருப்பெறும்

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)