பண்டைய நாகரிகத்தின் தூணாண எகிப்திய கடவுள்களின் வாழ்க்கை !

0

பண்டைய நாகரிகத்தின் தூணாக எகிப்து இருந்துள்ளது. உலகின் மிக நீளமான நதியான நைல், இந்த நாகரிகத்தின் உயிர்நாடி எனவும் விளக்கப் படுகின்றது. 

பண்டைய நாகரிகத்தின் தூணாண எகிப்திய கடவுள்களின் வாழ்க்கை !

கிரேக்க நாகரிகம் கூட எகிப்திய நாகரிகத்தின் உத்வேகத்தினால் உருவாகியது என்று சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். 

வானத்தை தொடுமளவிற்கு கம்பீரமான பிரமிட்டுகள் நைல் நாகரிகத்தின் பல இரகசியங்களை இன்றும் மறைத்துக் கொண்டிருக்கின்றன.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கும் வழிகள் என்ன?

பண்டைய எகிப்தியத் தெய்வங்கள் (Ancient Egyptian deities) என்பது எகிப்தில் பண்டைய காலத்தில் வழிபடப்பட்ட ஆண், பெண் கடவுளர்கள் ஆவர். 

எகிப்தியக் கடவுளர்களில் முக்கியமானவர் இரா எனும் சூரியக் கடவுள் ஆவர். பிற கடவுளர்கள் அமூன், ஒசைரிஸ், ஓரசு, அதின், மூத், ஆத்தோர், கோன்சு, சகுமித்து, தாவ் மற்றும் வத்செட் ஆவார்.

இந்தக் கடவுளரைச் சார்ந்த நம்பிக்கைகளும் சடங்குகளும் பண்டைய எகிப்தியச் சமயத்தின் கருப்பகுதியாகும். இவை பண்டைய எகிப்தில் தோன்றின. 

எகிப்தியர்களால் வணங்கப்பட்ட சில கடவுள்களைப் பற்றிய தகவல்களை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். எகிப்திய ஆலயத்தின் ஏழு பிரதான கடவுள்களைப் பற்றி இன்று அறிந்து கொள்வோம். 

ஆமுன்

பண்டைய நாகரிகத்தின் தூணாண எகிப்திய கடவுள்களின் வாழ்க்கை !

புது எகிப்திய இராச்சிய ஆட்சியில் நீண்ட மணி முடியுடன் கூடிய அமூன் கடவுள், வலது கையில் செங்கோல் மற்றும் இடது கையில் ஆங்க் சின்னத்துடன். 

அமூன் பண்டைய எகிப்தியக் கடவுள்களில் முதன்மையானவர். ஆமுன் எகிப்திய தெய்வ மண்டலத்தின் தலைவராக இருந்தார். 

வேறு விதத்தில் கூறுவதானால், சியூஸுக்கு கிரேக்க தெய்வ மண்டலத்தில் கிடைத்த இடம் அல்லது இந்திய தெய்வ மண்டலத்தில் இந்திரனுக்கு கிடைத்த இடம் போல ஆமுனுக்கு கிடைத்தது. 

சில நேரங்களில் ஆமுன் மற்றொரு எகிப்திய கடவுளுடன் சித்தரிக்கப் படுகிறார். அவரே சூரிய கடவுள் ஆமுன்ரா.

சுவையான வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி?

இதன் காரணமாக, ஆமூன்ரா நம்பிக்கை எகிப்தில் மிகவும் பிரபலமானது. இவரது மனைவியருள் ஒருவர் மூத் எனும் பெண் தெய்வம் ஆகும். இவரது மகன் கோன்சு கடவுள் ஆவர். 

கிமு 21-ஆம் நூற்றாண்டின் எகிப்தின் பதினொன்றாம் வம்ச ஆட்சிக் காலத்தில், அமூன் கடவுள் தீபை நகரத்தின் காவல் தெய்வமாக வழிப்படப் பட்டார். 

கிமு 1650-இல் தீபை நகரத்தை ஆண்ட வெளிநாட்டு மன்னர் மெசொப்பொத் தேமியாவின் ஐக்சோஸ் வம்சத்தினருக்கு எதிரான புரட்சிக்குப் பின்னர், 

தீபை நகராத்தை ஆண்ட முதலாம் அக்மோஸ் எனும் எகிப்திய பார்வோன் ஆட்சிக் காலத்தில் அமூன் தெய்வம் பண்டைய எகிப்தின் தேசிய முக்கியத்துவமான கடவுளானார். 

மேலும் இரா எனும் சூரியக் கடவுளுடன் அமூன் கடவுளை இணைத்து அமூன்-ரா எனும் புதிய கடவுள் வழிபாடு தொடங்கியது. 

அனுபிஸ்

பண்டைய நாகரிகத்தின் தூணாண எகிப்திய கடவுள்களின் வாழ்க்கை !

அனுபிஸ் என்பது பலருக்கும் தெரிந்த எகிப்திய கடவுள். ஓநாய் தலையுடன் சித்தரிக்கப்படும் இந்த கடவுள் பாதாள உலகத்தின் பாதுகாவலர் தெய்வம் என்று எகிப்தியர்கள் நம்பினர். 

அவர் மரணத்தின் கடவுளாக இருந்தார் மற்றும் எகிப்தில் சடலங்களை மம்மியாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார் என்றும் கூறப்படுகின்றது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பற்றிய ரகசியம் தெரியுமா? உங்களுக்கு !

சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஓநாய்களின் சடலங்களை தோண்டி சாப்பிடும் திறன் காரணமாக அனுபிஸ் ஒரு ஓநாய் தலையால் குறிப்பிடப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

வளம் கொழிக்கும் நைல் நதியின் கருப்பு நிற வண்டல் மண் போன்று, அனுபிஸ் கடவுளின் முகமும் கருப்பு நிற குள்ள நரியின் முகமும், மனித உடலுடன் ஓவியங்களில் தீட்டப் பட்டுள்ளது. 

மேலும் அனுபிஸ் கடவுள் ஒரு கையில் மேல் உலகத்தின் திறவு கோலான ஆங்கையும், ஒரு கையில் செங்கோலும் கையில் ஏந்தி இருக்கும். 

மம்மியின் வாய் திறப்புச் சடங்கின் போது இன்பு கடவுள் அருகில் இருப்பதாக எகிப்தியர்கள் நம்பினர். எகிப்தியர்கள் இக்கடவுளை அனுபிஸ் அல்லது இன்பு அல்லது அன்பு என அழைத்தனர்.  

ஓரசு

பண்டைய நாகரிகத்தின் தூணாண எகிப்திய கடவுள்களின் வாழ்க்கை !

வல்லூறின் வடிவிலோ அல்லது வல்லூறின் தலை கொண்ட மனித வடிவிலோ குறிப்பிடப்படும் ஓரசு வானம், போர், வேட்டையாடுதல் ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார். 

இவருடைய வலது கண் ஞாயிறு கடவுள் ராவாகவும் இடது கண் திங்கள் கடவுளாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஓசிரிசு, இசிசு தம்பதியரின் மகனாக அறியப்படுகிறார். 

ஓரசின் மனைவி ஆத்தோர் ஆவார். ஓரசு கடவுளின் சென் மோதிரம் மற்றும் ஓரசு கண் சின்னம் பாதுகாப்பு மற்றும் நல் வாழ்வு வழங்கும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினர்.

வானத்தின் அதிபதியாகக் கருதப்படும் ஹோரேஸ், எகிப்தியர்களால் போற்றப்பட்ட கடவுள். எகிப்திய புராணங்களின்படி, அவர் ஒசைரிஸ் மற்றும் ஐசிஸின் மகன். 

போலியான 500 ரூபாய் நோட்டை கண்டறிவது எப்படி?

தனது தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்க ஒசைரிஸின் சகோதரரான சேத்துடனான போரில் அவர் ஒரு கண்ணை இழந்தார். 

ஏனைய கடவுளர்கள் அந்தக் கண்ணைப் பிடிக்க முயன்றபோது எகிப்தில் மனிதர்கள் கண்ணீர் சிந்தியதில் இருந்து பிறந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.  

ஓரசு சேத்தை தாக்கிய போது சேத்தின் விதைப்பையில் இருந்த ஒரு விதை விழுந்து விடுகிறது. இதுவே பாலைவனத்தில் ஒருசில உயிர்கள் மட்டுமே வாழக் காரணம் என்று நம்பப்படுகிறது.   

ஒசைரிஸ் 

பண்டைய நாகரிகத்தின் தூணாண எகிப்திய கடவுள்களின் வாழ்க்கை !

ஒசைரிஸ் என்பவர் பண்டைய எகிப்திய சமயத்தின் இறப்பின் கடவுள் ஆவார். இவர் வாழ்வு, இறப்பு, மறுவாழ்வு, பாதாளம் போன்றவற்றின் கடவுள் ஆவார். 

இவர் பச்சை நிறத் தோலுடன்,எகிப்திய பார்வோன்களுக்கு இருக்கும் தாடியும் கொண்டவராகக் கூறப்படுகிறார். ஒசைரிசின் பெற்றோர் கெப் மற்றும் நூத் ஆவர். 

இவரது சகோதரர்கள் இசிசு, சேத், நெப்தைசு மற்றும் மூத்த ஓரசு ஆகியோர் ஆவர். ஒசைரிசின் மனைவி இசிசு ஆவார். இவர்களுக்கு இளைய ஓரசு பிறந்தார்.

ஒசைரிஸ் பிற்பட்ட வாழ்க்கை மற்றும் நைல் நதி வழிதல் ஆகியவற்றிற்கு பொறுப்பான கடவுளாக கருதப்பட்டார். 

அவரது சகோதரர் சேத்தின் மூலம் இவர் மரணித்த பின்னர், ஒசைரிஸின் மனைவி ஐசிஸ் தனது கணவரை தற்காலிகமாக உயிர்ப்பித்து ஹோரஸைப் பெற்றெடுக்க அவருடன் இணைகிறார். 

ஹெல்தியான சிவப்பு அவல் தரும் நன்மைகள் !

இறுதியில், மேலே குறிப்பிட்டுள்ளபடி ஹோரேஸ் தனது தந்தையை கொன்ற சேத்தை பழி வாங்குகிறார். 

நவீன ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி ஒசைரிஸ் சம்பந்தப்பட்ட இந்த கருத்து இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய கதையையும் பாதித்தது.

இரா (Ra)

பண்டைய நாகரிகத்தின் தூணாண எகிப்திய கடவுள்களின் வாழ்க்கை !

இவர் வானுலகம், புவி மற்றும் பாதாளம் ஆகிய மூவுலகையும் ஆள்பவராக கருதப்படுகிறார். இவரது மகன்கள் காற்று கடவுள் ஷூ மற்றும் மழைக் கடவுள் டெஃப்னூட் ஆகியோர் ஆவர். 

இராவின் கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பில் இருந்து பெண் சிங்கக் கடவுள் செக்மெட் தோன்றினார். 
 
இவர் படகுகளின் மூலம் இரா நாள்தோறும் வானுலகில் இருந்து துவாத் உலகிற்கு (பாதாளம்) நாள்தோறும் பயணம் செய்வதாகக் கூறப்படுகிறது. 
 
இவ்வாறு செல்லும் போது அவருக்கு ஆட்டுக் கிடாவின் தலை இருக்கும். ஈலியோபோலிசு மக்கள் இராவை பிறப்பின் கடவுளாக வழிபடுகின்றனர். 
 
அவர்கள் அனைவரும் இராவின் கண்ணீர் மற்றும் வியர்வை துளிகளில் இருந்து பிறந்ததாக நம்புகின்றனர். இவர் சூரிய கடவுளாகவும் உலகின் அனைத்து படைப்புக்களின் படைப்பாளியாகவும் கருதப்பட்டார். 
 
அந்தக் கதைகளின்படி, அவர் பூமியைப் படைத்தார். அவர் கிழக்கில் தினமும் பிறந்து மேற்கில் இறந்து விடுகிறார். அவரது பிறப்பு மற்றும் இறப்பு எகிப்தியர்களால் காலையும் மாலையுமாக கருதப்பட்டது.

சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் செய்வது எப்படி?

செக்மெத்

செக்மெத் (Sekhmet) பண்டைய எகிப்திய சமயத்தில் கூறப்படும் போர்க் கடவுளும், கோபத்தை ஆற்றும் பெண் கடவுளும் ஆவார். 
பண்டைய நாகரிகத்தின் தூணாண எகிப்திய கடவுள்களின் வாழ்க்கை !

இவர் எகிப்திய பார்வோன்களின் பாதுகாவலராகவும், போரில் அவர்களை வழிநடத்திச் செல்பவராகவும் கருதப்படுகிறார். இவர் கதிரவக் கடவுள் இராவின் மகள் ஆவார். 

இவரது மூச்சுக்காற்றில் இருந்து பாலைவனம் உருவானதாக கூறப்படுகிறது. ச்குமித்து பெரும்பாலும் சிங்கத் தலையுடன் இரத்த நிற உடையுடன் காட்சியளிக்கிறார்.  
 
சில நேரங்களில் இவர் அணிந்திருக்கும் ஆடை ஒவ்வொரு மார்பகத்தின் மீதும் ஒரு ரொசெட்டா வடிவத்தை வெளிப்படுத்துகிறது. 
 
இது ஒரு பழங்கால லியோனைன் மையக்கருவாகும். இது சிங்கங்களின் தோள்பட்டை முடிச்சு முடிகளை அவதானிப்பதைக் காணலாம்.
 
எப்போதாவது, சகுமித்தின் சிலைகள் மற்றும் வேலைப்பாடுகளில் குறைந்தபட்ச ஆடையுடன் அல்லது நிர்வாணமாக சித்தரிக்கப் படுகிறார். இவர் வத்செட் கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார். 

சிங்கம் போன்ற வேட்டைக் குணம் கொண்ட சகுமித்து பல மனிதர்களைக் கொன்று அவர்களின் குருதியைக் குடித்தார். 
 
அவரை தடுக்க எண்ணிய இரா, அவருக்கு குருதி என்று பொய் கூறி அதன் நிறத்தில் இருந்த மதுபானத்தை கொடுத்தார். 
 
அதை அருந்திய பிறகு சகுமித்தின் கோபம் தணிந்தது. அதனால் இன்றும் சகுமித்தின் வழிபாட்டுத் தலங்களில் அவருடைய கோபத்தை தணிப்பதற்காக அவருக்கு மதுபானம் படைக்கப் படுகிறது. 

சோம்பு சேர்த்த உணவை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன?

தாவ்

தாவ் அல்லது பிதா (Ptah) பண்டைய எகிப்தின் சமயத்தில் கூறப்படும் படைப்புக் கடவுள் ஆவர். மெம்ஃபிசின் மும்மையில் இவர் செக்மெட்டின் துணையாகவும், நெஃப்ரெதமின் தந்தையாகவும் இருக்கிறார். 
பண்டைய நாகரிகத்தின் தூணாண எகிப்திய கடவுள்களின் வாழ்க்கை !

இவர் தன் எண்ணம் மற்றும் சொல்லால் இந்த உலகை படைத்ததாக மெம்பிசு மக்கள் நம்புகின்றனர். 

இவர் பெரும்பாலும் பச்சை நிறத் தோல் மற்றும் தாடியுடன் மூன்று சின்னங்கள் பொருந்திய செங்கோலை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். 
 
மூன்று சின்னங்களில் வாசு செங்கோல் சின்னம் சக்தியையும் அங்க்கு சின்னம் வாழ்வையும் செத் தூண் சின்னம் நிலைத்தன்மையும் குறிக்கிறது.

பண்டைய எகிப்திய மொழியில் இகுதாவ் என்ற சொல்லுக்கு தாவ்வுடைய ஆவியின் வீடு என்று பொருள். இந்த சொல்லில் இருந்து எகிப்து என்ற பெயர் தோன்றியது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings