போலியான 500 ரூபாய் நோட்டை கண்டறிவது எப்படி?

0

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது போலியான 500 ரூபாய் நோட்டை தவறுதலாக வாங்கி இருப்போம்.

போலியான 500 ரூபாய் நோட்டை கண்டறிவது எப்படி?
நம்மில் பலருக்கு 500 நோட்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிக்க தெரியாததால், பல நேரங்களில் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. 

ஆனால், போலி அல்லது உண்மையான ரூ. 500 வேறுபடுத்துவதில் உங்களுக்கும் சிரமம் இருந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. 

ஏனெனில் உண்மையான ரூபாய் நோட்டுக்கான சரி பார்ப்புப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் வெளியிட்டது.

அதன் அடிப்படையில் நீங்கள் போலி நோட்டுகளை கண்டறியலாம்.

500 ரூபாய் நோட்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எப்படி சரி பார்க்கலாம்?

ரூ.500 நோட்டை 45 டிகிரி கோணத்தில், கண் முன் வைத்தால், 500 எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

தேவநாகரி எழுத்தில் 500 எழுதப் பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

வலது புறம் மையத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும்.

பார்பிக்யூ என்றால் என்ன? இது தெரியாம போச்சே !

நோட்டை லேசாக வளைத்தால், பாதுகாப்பு நூலின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து இண்டிகோவாக மாறுவதைக் காணலாம்.

ஆளுநரின் கையொப்பம், உத்தரவாதப் பிரிவு, வாக்குறுதி விதி மற்றும் RBI லோகோ ஆகியவை இப்போது வலது பக்கமாக மாற்றப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தியின் புகைப்படம் மற்றும் எலக்ட்ரோ டைப் வாட்டர் மார்க் ஆகியவையும் தெரியும்.

மேல் இடது பக்கம் மற்றும் கீழ் வலது பக்கம் உள்ள எண்கள் இடமிருந்து வலமாக அதிகரிக்கும்.

நோட்டில் எழுதப்பட்ட 500 எண்ணின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறுகிறது.

நோட்டின் வலது பக்கத்தில் அசோக தூண் இருக்கும்.

வலது பக்க வட்டப் பெட்டியில் 500 என்று எழுதப்பட்டிருக்கும்.

நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டை நீங்கள் சரி பார்க்கலாம்.

ஸ்வச் பாரத் லோகோ வாசகத்துடன் அச்சிடப்பட்டுள்ளது.

ரூபாயின் நோட்டின் மையத்தில் மொழி பட்டியல் இருக்கும்.

இந்தியக் கொடியுடன் செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வங்கிகள் 5.45 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. 

உலகம் அழிய இது நடந்தால் சர்வ நாசம் தான் !

அவற்றில் 2,08,625 போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post போலி 500 ரூபாய் நோட்டை எப்படி கண்டறிவது..? ரிசர்வ வங்கி வெளியிட்ட தகவல்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)