மூளையில் ரத்தக்கசிவு காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

0

உடலிலுள்ள ரத்த ஓட்டத்தில் 30 சதவிகிதம் மூளைக்குத் தான் செல்கிறது. அதனால் தலையில் அடிபடும் போது மூளைப் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

மூளையில் ரத்தக்கசிவு காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?
ரத்தக் குழாய்கள் சேதமடைந்து ரத்தக்கசிவு, மண்டை ஓடு உடைந்து ஏற்படலாம். மண்டை ஓடு உடைந்து அதிலிருந்து ஒரு சின்ன எலும்பு சென்று மூளையில் குத்தினாலும் ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. 

மூளைக்கும் மண்டை ஓட்டுக்கும் நடுவே உள்ள பகுதியில் ரத்தம் உறைவதற்கு வாய்ப்புள்ளது. ரத்தம் உறைவது மூளையின் உட்பகுதியிலும் இருக்கலாம், வெளிப்பகுதியிலும் இருக்கலாம்.

சில நேரங்களில், பின்தலையில் சிறுமூளைப் பகுதியில் ரத்தம் உறைவதற்கும் வாய்ப்புள்ளது. ரத்த உறைவு சிறிய அளவில் இருந்தால், மாத்திரைகளிலேயே அதைச் சரி செய்து விட முடியும். 

தீவிரம் அதிகமாக இருந்தால், அதாவது 35 மில்லிக்கு மேல் ரத்தம் தேங்கி விட்டால், அறுவை சிகிச்சை செய்து தான் உறைவை அகற்ற வேண்டியிருக்கும்.

மூளைக்கு இடையே ஏற்படும் ரத்தக்கசிவு என்பது ஒரு வகையான பக்கவாதமாகும். அதில் உங்கள் மூளை திசுக்களில் ரத்தம் திடீரென வெடித்து, மூளையில் சேதத்தை ஏற்படுத்துகிறது. 

அப்போது மூளையில் ஓர் அழுத்தம் ஏற்படுகிறது, மூளைக்கு செல்லும் ஆக்சிஜனுக்கு இடையூறு விளைவிக்கும். இது மூளை மற்றும் அதன் நரம்புகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

பொதுவாக இந்த நிலையால் பாதிக்கப் பட்டவர்களை எளிதாக காப்பாற்றி விடலாம். ஆனால் வயது அதிகரிக்க அதிகரிக்க ஆபத்தும் அதிகமாக இருக்கும். 

வயதாகும் போது, மற்ற நோய்களைப் போலவே உங்களுக்கு இந்த நோயின் தீவிரம் அதிகரிக்கும். இந்த ரத்தக் கசிவிற்கும் தொழில்நுட்பம் சிகிச்சைகளை வழங்குகிறது. 

மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு ஆபத்தான ஒன்று தான், எனவே எவ்வளவு விரைந்து சிகிச்சை செய்கிறோமோ, அவ்வளவு நல்லது.

ரத்தக்கசிவுக்கு காரணம் என்ன?

மூளையில் ரத்தக்கசிவு காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

மூளைக்கு இடையே ஏற்படும் ரத்தக்கசிவிற்கு பொதுவான காரணம் உயர் ரத்த அழுத்தமாகும்.

இளம் வயதினருக்கு மூளையில் ரத்தக்குழாய்களின் இயல்பில்லாத ஒருங்கிணைப்பும் காரணமாகும்.

தலையில் காயம்

போதைப் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதும் ஒரு காரணமாகும். கொகைன் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படும் போது, அது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கிறது. 

இது மூளை இடையே ரத்தக்கசிவு ஏற்பட காரணமாகும். ரத்த சோகை போன்ற ரத்தப்போக்கு கோளாறும், இந்த ரத்தக்கசிவு ஏற்பட காரணமாகும்.

அறிகுறிகள் என்ன?

மூளையில் ரத்தக்கசிவு காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

உங்கள் உடலின் ஒரு பகுதி திடீரென முடங்கி விடும். கடுமையான தலைவலி.

இரு கண்களிலோ அல்லது ஒரு கண்ணில் பார்வை குறைபாடு போன்ற பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

படிக்க, எழுதுவதில், பேசுவதில் அல்லது புரிந்த கொள்வதில் பல்வேறு பிரச்னைகளை நீங்கள் சந்திக்கலாம்.

நினைவிழப்பு, சோர்வு, தூக்கம், வாந்தி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் இதனுடன் தொடர்புள்ளவை.

தலையில் அடிபட்டவுடன் சுயநினைவில்லாமல் இருப்பது, வலிப்பு வருவது, காது அல்லது மூக்கிலிருந்து ரத்தக்கசிவு, 

கண்ணின் வெள்ளை நிறப் பகுதியில் ரத்தம் உறைவது போன்றவை மூளையில் அடிபட்டிருப்பதற்கான அறிகுறிகள். 

தலைப்பகுதியில் அடிபட்டால் மண்டை ஓட்டுக்குள் உருவாகும் அழுத்தம், ரத்தக் கசிவினால் தலைக்குள் தேங்கும் ரத்தம் ஆகிய 

இரண்டு காரணங்களால், சிலருக்குத் தலையில் அடிபட்டதும் முதல் அறிகுறியாக வாந்தி ஏற்படும்.

நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

மூளையில் ரத்தக்கசிவு காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

பொதுவாக ரத்தக்கசிவுடன் தொடர்புடைய அறிகுறிகளை பார்த்து சில நரம்பியல் சோதனைகளை மருத்துவர் மேற்கொள்வார். 

படம் எடுத்துப் பார்த்து ரத்தக்கசிவு பக்கவாதத்தால் அவதிப்படுகிறீர்களா அல்லது இஸ்கிமிக் பக்கவாதத்தால் அவதியுறுகிறீர்களா என்பதை மருத்துவர் கண்டறிவார். 

அடுத்தபடியாக, சிடி ஸ்கேன் தேவைப்படும். அது மூளையை படம் பிடித்துக் காட்டும். 

அது ரத்தப்போக்கை கண்டறிய உதவும் அல்லது தலையில் அதிர்ச்சி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பதை சோதிக்க உதவும். எம்ஆர்ஐ ஸ்கேனும் ரத்தப்போக்கை கண்டறிவதற்கு உதவும். 

அதுவும் செய்யப்படும். தமனிகளுக்குள் ரத்தத்தின் ஓட்டத்தை தெளிவாக காட்டுவதற்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படும் மற்றும் அது ரத்தக்குழாயில் உள்ள சிக்கல்களை கண்டறிய உதவும். 

ரத்தம் உறைந்து கட்டியாதல், நோய் எதிர்ப்புத் தன்மை மற்றும் வீக்கம் போன்றவை குறித்த பிரச்னைகளை ரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.

முடிவு

மூளையில் ரத்தக்கசிவு காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

மூளைக்கு இடையே ஏற்படும் ரத்தக்கசிவு கடுமையான பிரச்னை தான் என்றாலும், மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சி அதனை சரி செய்ய நிச்சயம் உதவும். 

எத்தனை மருத்துவத் தீர்வுகள் இருந்தாலும் வருமுன் காப்பது தான் நல்லது. மோட்டார் சைக்கிள், கார் என எந்த வாகனத்தில் சென்று சாலை விபத்துக்கு உள்ளானாலும், 

இது போன்ற காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தான் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)