இந்திய குடும்பத்தை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம் சடலமாக மீட்பு?

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சென்ட்ரல் வெலி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஜஸ்தீப் சிங் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம் !

இவருக்கு 36 வயது ஆகின்றது. இவருடைய குடும்பத்தில் ஜஸ்தீப்பின்  மனைவி ஜாஸ்லீன் கவூர், எட்டு மாத குழந்தை மற்றும் உறவினர் அமந்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். 

இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இவருடைய குடும்பத்தை நேற்று துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். 

இதனையடுத்து மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து காணாமல் போனவர்களைத் தேடி வந்தனர். 

இந்நிலையில் காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலை ஒட்டிய ஒரு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

அருகிலிருந்த விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த நபர் சடலங்கள் கிடப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

பாடிபில்டராக முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய சில உணவு !
அதன் பேரில் 4 பேரின் சடலமும் மீட்கப்பட்டது. இந்தக் கடத்தல் தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இக்கடத்தல் சம்பவம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்துவதாக கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே தெரிவித்துள்ளார்.